Published:Updated:

பாலக் டிக்கி... பலே பலே !

பாலக் டிக்கி... பலே பலே !

ஹனி ஃபைபர் பான் கேக்

தேவையானவை: கேழ்வரகு, கம்பு, சோளம் - தலா அரை கப், சிவப்பரிசி, வெல்லம் - தலா கால் கப், தேன் - 4 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பேரீச்சை, உலர் திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.

பாலக் டிக்கி... பலே பலே !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

செய்முறை: அரிசி, தானிய வகைகளை நன்றாக ஊற வைத்து, மிக்ஸியில் மாவாக அரைக்கவும். வெல்லத்தைப் பொடி செய்து, சிறிது தண்ணீர் விட்டு, கரையும் வரை கொதிக்க வைத்து, ஆறியதும் வடிகட்டி, மாவில் சேர்க்கவும். இதனுடன் பேரீச்சை துண்டுகள், உலர் திராட்சை, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை காய வைத்து, கரைத்த மாவை சற்று கனமான தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

பரிமாறும்போது தேனைப் பரவலாக ஊற்றிப் பரிமாறவும்.

இரும்புச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த டிபன் இது!

 இந்திராணி பொன்னுசாமி, சென்னை-32

பாலக் டிக்கி

தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், மைதா மாவு - ஒரு கைப்பிடி, உருளைக்கிழங்கு - 1, பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பாலக்கீரை - தலா அரை கப், தனியா விதை - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

பாலக் டிக்கி... பலே பலே !

செய்முறை: உருளைக்கிழங்கைத் தோல் சீவி, சதுர துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் கீரை, தனியா விதை, வெங்காயம், உப்பு கலந்து கையால் நன்றாகப் பிசைந்து, அழுத்தி வைத்து, அரை மணி நேரம் மூடி வைக்கவும். இதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கடலை மாவு, மைதா மாவு சேர்த்து மெது பக்கோடா மாவு பதத்தில் பிசையவும். தேவைப்பட்டால் மட்டுமே சிறிது நீர் தெளித்துக் கொள்ளலாம். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

மேல்புறம் மொறுமொறுப்பாகவும் உள்ளே சாஃப்டாகவும், சுவையாக இருக்கும் இந்த டிக்கி!

சுகந்தி முரளி, பெங்களூரு

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

ஹனி ஃபைபர் பான் கேக்: வெல்லத்துக்கு பதிலாக பனை வெல்லமும், சுக்குத்தூளும் சேர்க்கலாம். இயற்கையோடு ஒன்றிய உணவு ரெசிபியாக இருக்கும்.

பாலக் டிக்கி: சிறிது சோள மாவு சேர்த்துச் செய்தால், இன்னும் க்ரிஸ்பியாக இருக்கும்.