Published:Updated:

டூ மின்ட்ஸ் கிச்சன் கில்லாடிகள் !

டூ மின்ட்ஸ் கிச்சன் கில்லாடிகள் !

''சமையல்ல எவ்வளவோ மாற்றங்கள் வந்தாலும், சமைக்கறதெல்லாம் சத்து நிறைஞ்சதா இருக்கணும். நாக்குக்கு ருசிங்கறதவிட, உடம்புக்கு ஹெல்த்தியா இருக்கறதுதானே நல்லது'' என்று சொல்லும் 'சமையல் திலகம்' ரேவதி சண்முகம், வாசகிகளின் 'டூ மினிட்ஸ் ரெசிபி’களில் இருந்து ஊட்டச்சத்தான இரண்டு உணவுகளைத் தன் கமென்ட்ஸோடு இங்கே பரிமாறுகிறார்...

 எனர்ஜி பீட்ஸா

டூ மின்ட்ஸ் கிச்சன் கில்லாடிகள் !

டிபனுக்கு தோசை மாவு குறைவாக இருந்தால், முளை கட்டிய தானியங்களை எடுத்து அதில் இஞ்சி, பூண்டு, அரை கப் ஓட்ஸ், பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை தேவையான அளவு சேர்த்து ஒன்றாக அரைக்கவும். இதை தோசை மாவுடன் கலந்து கனமான தோசையாக ஊற்றி, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயத்துடன் கலந்து தோசை மேல் பரவலாக தூவி நெய் விட்டு, இரண்டு பக்கமும் நன்றாக சிவக்க விட்டு எடுத்தால் எனர்ஜி பீட்ஸா ரெடி.

- சாமுண்டீஸ்வரி, மதுரை-16

கமென்ட்: சோம்பு, காய்ந்த மிளகாய் அல்லது பெருங்காயம் போன்றவற்றை சேர்த்து தோசை ஊற்றினால் நல்ல வாசனையாக இருக்கும்.

அவல் பாயசம்

டூ மின்ட்ஸ் கிச்சன் கில்லாடிகள் !

முதலில் அவலை நெய் விட்டு லேசாக சிவக்கும் பதத்துக்கு வறுத்துக் கொள்ளவும். பின்பு, ஏலக்காய் சேர்த்து ரவை போல பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். இதை தேவைப்படும்போது கொதிக்கும் பாலில் இரண்டு ஸ்பூன் சேர்த்து சர்க்கரை, முந்திரி, திராட்சை சேர்த்தால்... அவல் பாயசம் நொடியில் ரெடி.

- துர்கா தேவி விஜயகுமார், பெங்களூர்-43

கமென்ட்: அவலை வறுத்துப் பொடி செய்யும்போது கூடவே பாதாம் அல்லது முந்திரிப் பருப்பையும் தூளாக்கி சேர்த்தால், கூடுதல் ருசியாக இருக்கும்.

நீங்களும் டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடியா..? இரண்டே நிமிடத்தில் செய்யக்கூடிய அறுசுவை தரும் அருமையான ரெசிபியை, உங்கள் குரலில் இங்கே பதிவு செய்யுங்கள் இரண்டே நிமிடத்தில்! சிறந்த ரெசிபிகளுக்கு சிறப்பான பரிசு உண்டு!

ரெசிபிகள் விகடன் டாட் காம் (www.Vikatan.com) மூலம் உலகம் முழுக்க உங்கள் குரலிலேயே

வலம் வரும்! உங்கள் செல்போனில் இருந்து 04442890002 என்ற எண்ணை அழுத்துங்கள். இணைப்பு கிடைத்தவுடன், கணினி குரல் ஒலிக்கும். பீப் ஒலிக்குப் பிறகு, உங்கள் பெயர், முகவரி மற்றும் ரெசிபியைச் சொல்லுங்கள்.

 வழக்கமான செல்போன் கட்டணங்களுக்கு உட்பட்டது.