Published:Updated:

கலக்குது க்ரீன் அல்வா !

கலக்குது க்ரீன் அல்வா !

பிரீமியம் ஸ்டோரி

தோசை சாண்ட்விச்

தேவையானவை:  தோசை மாவு - 2 கப், உருளைக்கிழங்கு - 2, நறுக்கி, வேக வைத்த காய்கறிகள் (கலந்தது) - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், துருவிய பனீர் - அரை கப், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

கலக்குது க்ரீன் அல்வா !
##~##

செய்முறை: வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து... காய்கறிகள், மிளகாய்த்தூள், கொத்தமல்லி, துருவிய பனீர், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தோசை மாவை, சிறுசிறு தோசைகளாக வார்த்துக் கொள்ளவும்.  

ஒரு தோசையின் மேல், காய்கறிக் கலவையை சிறிதளவு வைத்து, மற்றொரு தோசையால் மூடி, சாண்ட்விச் போல செய்ய... தோசை சாண்ட்விச் ரெடி! குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

- கீதா வெங்கடேஸ்வரன், சென்னை-64

க்ரீன் அல்வா

தேவையானவை: துருவிய சுரைக்காய் - கால் கப், துருவிய சௌசௌ - கால் கப், துருவிய புடலங்காய் - கால் கப், நெய் - 4 டீஸ்பூன், பால் பவுடர் - 2 டீஸ்பூன், பால் - அரை கப், சர்க்கரை - அரை கப்.

அலங்கரிக்க: வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு.

கலக்குது க்ரீன் அல்வா !

செய்முறை: கடாயில்  பாதியளவு நெய் விட்டு துருவிய காய்களை பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். பிறகு, பாலை அதில் விட்டு மிதமான தீயில் வேக விடவும். வெந்ததும், சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து சுருண்டு வரும் சமயத்தில்... மீதியுள்ள நெய், பால் பவுடர் சேர்த்து நன்கு கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கி, வறுத்த முந்திரி, திராட்சை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.

- கே.சீதாலட்சுமி, பாளையங்கோட்டை

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமெண்ட்ஸ்:  

தோசை சாண்ட்விச்: சாண்ட்விச் கலவையுடன் கொஞ்சம் துருவிய 'சீஸ்’ சேர்த்துக் கொண்டால் சுவை கூடும்.

க்ரீன் அல்வா: சுண்டக் காய்ச்சிய பாலைப் பயன்படுத்தினால் சுவை அதிகமாகும். அதேபோல் பால் பவுடர் இல்லாவிட்டால், 'கோகோ’ பவுடர் பயன்படுத்தியும் அல்வா செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு