Published:Updated:

பலே, பீட்ரூட் மஸ்கோத்... ஆஹா, ஆரஞ்சு ரைஸ்!

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம் படங்கள்: எம்.உசேன்

பலே, பீட்ரூட் மஸ்கோத்... ஆஹா, ஆரஞ்சு ரைஸ்!

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம் படங்கள்: எம்.உசேன்

Published:Updated:
##~##

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

பலே, பீட்ரூட் மஸ்கோத்... ஆஹா, ஆரஞ்சு ரைஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

200  

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

பீட்ரூட் மஸ்கோத்

தேவையானவை: பீட்ரூட் - ஒன்று, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் - ஒரு மூடி (அரை கப் முதல் தேங்காய்ப் பால், ஒரு கப் இரண்டாம் தேங்காய்ப் பால் எடுக்கவும்), பாதாம், முந்திரி, பிஸ்தா (சேர்த்து) - 3 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மைதா - 2 டீஸ்பூன்

செய்முறை: வாணலியில் நெய் ஊற்றி காய வைத்து, பொடியாக நறுக்கிய பீட்ரூட் சேர்த்து வதக்கவும். வதங்கிய பிறகு இரண்டாம் தேங்காய்ப் பால் ஊற்றி வேகவிடவும். நன்றாக வெந்து மசிந்த பிறகு மைதா மாவு சேர்த்துக் கலந்து (அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்ய வேண்டும்), சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.

பலே, பீட்ரூட் மஸ்கோத்... ஆஹா, ஆரஞ்சு ரைஸ்!

இதனுடன் முதல் தேங்காய்ப் பால் சேர்த்து நன்றாக கெட்டியாகும் வரை கிளறவும். பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரியை மேலே தூவி இறக்கவும்.

- ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்

 ஆரஞ்சு ஃப்ரைடு ரைஸ்

தேவையானவை: கமலா ஆரஞ்சு ஜூஸ் - கால் கப், ஆரஞ்சு சுளை - 2, பாஸ்மதி அரிசி சாதம் (உதிரியாக வடித்து) - ஒரு கப், வெண்ணெய் அல்லது எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒன்று, பச்சை மிளகாய் - ஒன்று, கேரட் துருவல் - 2 டீஸ்பூன், வேக வைத்த பச்சைப் பட்டாணி - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

பலே, பீட்ரூட் மஸ்கோத்... ஆஹா, ஆரஞ்சு ரைஸ்!

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சாதம், ஆரஞ்சு ஜூஸ், உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெய் அல்லது எண்ணெய் விட்டு, சீரகத்தை சிவக்க வறுத்து, நறுக்கிய பச்சை மிளகாய், பிரிஞ்சி இலை, கேரட் துருவல், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, சாதத்தை போட்டு கிளறி இறக்கவும். ஆரஞ்சு சுளைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மேலே தூவி அலங்கரிக்கவும். இது, லஞ்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்ப மிகவும் ஏற்றது.

- எம்.சங்கரி, மடிப்பாக்கம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism