Published:Updated:

அசத்தும் ப்ரவுனி கேக்... மயக்கும் மக்ரூன்!

நா.இள.அறவாழி, எஸ்.சரவணப்பெருமாள், ப.சபரிநாதன் படங்கள்: என்.ஜி.மணிகண்டன், ஏ.சிதம்பரம், ஜெ.முருகன்

அசத்தும் ப்ரவுனி கேக்... மயக்கும் மக்ரூன்!

நா.இள.அறவாழி, எஸ்.சரவணப்பெருமாள், ப.சபரிநாதன் படங்கள்: என்.ஜி.மணிகண்டன், ஏ.சிதம்பரம், ஜெ.முருகன்

Published:Updated:
##~##

 'கிறிஸ்துமஸ், நியூ இயர் வந்தாச்சு... இந்தக் கொண்டாட்டங்களுக்கெல்லாம் என்ன கேக் செய்யலாம், ஸ்வீட் செய்யலாம்' என்று தீவிர ஆலோசனையில் இருக்கும் வாசகிகளுக்கு, இதோ கொடுக்கிறோம் அசத்தல் ரெசிபிகள்! ருசி வசமாகட்டும்... பாராட்டுகள் குவியட்டும்!

ஆரோவில் ஃபிரெஷ் ப்ரவுனி கேக்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அமைதிக்கு மட்டுமல்ல, 'ப்ரவுனி கேக்’குக்கும் ஆரோவில் பகுதி மிகபிரசித்தி!'' எனும் இல்லத்தரசி அலமேலு ஏழுமலை, கடந்த 25 வருடங்களாக புதுவை, ஆரோவில்லில் குடும்பத்தோடு வசிக்கிறார். 'கேக் தயாரிப்பில் அலமேலுவை யாரும் அடித்துக்கொள்ள முடியாது' என்கிறார்கள், ஆரோவில்வாசிகள் பலரும். இங்கே, வாசகிகளுக்காக அந்த ப்ரவுனி கேக்கை, கூடுதல் ஆர்வத்துடன் செய்துகாட்டுகிறார்... அலமேலு.

தேவையான பொருட்கள் (5 பேருக்கு): தேங்காய் பவுடர் - 50 கிராம், முட்டை - 3, சாக்லேட் பார் - 175 கிராம், கோதுமை மாவு - 100 கிராம், வெண்ணெய் - 100 கிராம், சர்க்கரை - 100 கிராம், பால் - கால் லிட்டர், வெனிலா எசன்ஸ் - தேவையான அளவு, பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்.

அசத்தும் ப்ரவுனி கேக்... மயக்கும் மக்ரூன்!

செய்முறை: பாத்திரத்தில் பால் ஊற்றி சர்க்கரையை சேர்க்கவும். சாக்லேட் பாரை பாலில் போடவும். அடுப்பில் வாணலியை வைத்து, அதில் பாதியளவு தண்ணீர் நிரப்பி, பால் - சர்க்கரை - சாக்லேட் இருக்கும் பாத்திரத்தை அதன் மீது வைக்கவும் (நேரடியாக அடுப்பின் மீது பாத்திரத்தை வைத்தால், அடிபிடிக்கும் என்பதால் இந்த ஏற்பாடு). அடுப்பை 'சிம்’மில் வைத்து, பார் சாக்லேட் உருகும் வரை காத்திருக்கவும். அதேநேரம், இன்னொரு பாத்திரத்தில் முட்டை, வெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து, நன்றாகக் கடைந்துகொள்ளவும். கலவை பேஸ்ட் போல் வந்தவுடன், கோதுமை மாவை நிதானமாகச் சேர்த்து, மீண்டும் நன்றாகக் கடையவும். பேஸ்ட் கொஞ்சம் கெட்டியான பிறகு, வெனிலா எசன்ஸை 3 டீஸ்பூன் அளவுக்கு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பேஸ்ட் சற்று தண்ணியாக இருந்தால்... பேக்கிங் பவுடரை இரண்டு டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம். முந்திரி, பாதாம், பிஸ்தா, பழங்கள் என விருப்பம்போல இந்த பேஸ்ட்டில் சேர்க்கலாம். பிறகு, தேங்காய் பவுடரை சேர்த்து, நன்றாகக் கடைந்து தனியே வைக்கவும்.

இந்நேரம், சாக்லேட் பார் உருகி பாலுடன் நன்றாகக் கலந்திருக்கும். பாலை இறக்கி கொஞ்சம் சூடு தணிய வைக்கவும். பிறகு, பேஸ்ட் கலவை இருக்கும் பாத்திரத்தில், இந்த பால் கலவையை மெதுவாக ஊற்றி, நன்றாகக் கலக்கவும். கேக் அச்சின் உள்பகுதியில் முழுமையாக வெண்ணெய் தடவி, சிறிது கோதுமை மாவை தூவிக் கொள்ளவும். பிறகு, தயாராக இருக்கும் பேஸ்ட்டை அச்சில் ஊற்றவும்.

அசத்தும் ப்ரவுனி கேக்... மயக்கும் மக்ரூன்!

'மைக்ரோவேவ் அவன்’-ல், 35 டிகிரி வெப்பத்தில் அரை மணி நேரத்துக்குக் கலவையை வைக்கவும். 'மைக்ரோவேவ் அவன்' இல்லாதவர்கள், இட்லி பாத்திரத்தினுள் வெண்ணெயைத் தடவி (தட்டுகள் வைக்கத் தேவையில்லை), கோதுமை மாவை தூவிக்கொண்டு, கேக் பேஸ்ட்டை அதில் ஊற்றுங்கள். அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது பெரிய அளவுக்கு தட்டு ஒன்றை வைத்து, தட்டின் மேல் மணலை குவித்து, அதன் மீது இட்லி பாத்திரத்தை வையுங்கள். அப்போதுதான் கேக் சரிசமமாக வேகும். அரை மணி நேரம் கழித்து, கத்தியை கேக்கில் நுழைத் துப் பார்க்கவும். கத்தியில் மாவு ஒட்டியிருந்தால், இன்னும் சில நிமிடங்கள் வேக வைக்கலாம். முழுமையாக வெந்தபின், இட்லி பாத்திரத்திலிருந்து கேக்கை எடுத்து, நமக்குப் பிடித்த கிரீம், ஐஸ் கிரீம் என அதன் மீது சேர்த்து அலங்கரிக்கலாம்.

அசத்தும் ப்ரவுனி கேக்... மயக்கும் மக்ரூன்!

ரெசிபியை முடித்த அலமேலு, ''கேக் தயார் செய்து, 24 மணி நேரத்துக்குப் பிறகு சாப்பிட் டால்... அதன் சுவையே தனி!'' என்று சப்புக் கொட்டியபடியே சொன்னார்!

அசத்தும் ப்ரவுனி கேக்... மயக்கும் மக்ரூன்!

தூத்துக்குடி மக்ரூன்!

தூத்துக்குடியின் ஸ்பெஷல் ஸ்வீட், மக்ரூன். தூத்துக்குடி 'அபி மக்ரூன்’ நிறுவனத்தின் மாஸ்டர் சரவணன், நமக்காக இங்கே மக்ரூன் தயாரிக்கிறார். உடனிருந்து உதவுகிறார்... மக்ரூன் தர கண்காணிப்பாளரான செல்வலட்சுமி.

தேவையான பொருட்கள் (ஐந்து பேருக்கு, 450 கிராம் மக்ரூன்): முட்டை - 7, சீனி (சர்க் கரை) - 200 கிராம், முந்திரி - 200 கிராம், வனஸ்பதி, மைதா மாவு - சிறிதளவு

செய்முறை: ஒரு டிரேயில் கொஞ்சம் வனஸ்பதி, அதற்கு மேல் கொஞ்சம் மைதா சேர்த்து, சமமாகப் பரப்பி வைக்கவும் (டிரேயில் கலவை ஒட்டாமல் இருப்பதற்காக). முட்டைகளிலுள்ள மஞ்சள் கருவை அகற்றிவிட்டு, வெள்ளைக் கருவை மட்டும் தெளிவாக எடுத்துக் கொள்ளவும். அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சீனியைச் சேர்த்து, குறைந்தது பத்து நிமிடங்கள் மாவு பிசைவது போல் விரல்களால் அழுத்தம் கொடுத்து பிசையவும். இறுக்கமான பதம் வந்த பிறகு, முந்திரிகளை சிறு துகள்களாக உடைத்து அதில் கலந்து, மீண்டும் மெதுவாக விரவவும்.

அசத்தும் ப்ரவுனி கேக்... மயக்கும் மக்ரூன்!
அசத்தும் ப்ரவுனி கேக்... மயக்கும் மக்ரூன்!

இந்தக் கலவையை ஒரு பட்டர் பேப்பர் கோனுக்குள் இடவும். இதை, வனஸ்பதி - மைதா பரப்பப்பட்ட டிரேயில் சிறுசிறு குமிழ்களாக பிழியவும். அதை டிரேயுடன் பர்னஸ் அடுப்புக்குள் (அடுப்புப் புகை ஸ்வீட்டில் பட்டுவிடாமல் இருப்பதற்காக) வைக்கவும். அதிக வெப்பநிலையில் (கிட்டத்தட்ட 110 டிகிரி செல்ஷியஸ்), இரண்டரை மணி நேரம் இருக்கும்படி செய்யவும். பிறகு, அடுப்பிலிருந்து வெளியில் எடுத்தால்... மக்ரூன் ரெடி!

அசத்தும் ப்ரவுனி கேக்... மயக்கும் மக்ரூன்!

எங்கேயும், எப்போதும்... ஹோம்மேட் சாக்லேட்ஸ்!

''தனக்கே உரித்தான தனிச்சுவை கொண்டவை 'ஹோம்மேட் சாக்லேட்'கள்! முன்பெல்லாம் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் மட்டுமே கிடைத்து வந்தன. தற்போது எங்கு வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் எளிதாகத் தயாரிக்கும் அளவுக்கு இந்த சாக்லெட் தயாரிப்பு மிகமிக எளிதாகி இருக்கிறது'' என்று சொல்லும், திருச்சி, கோ.சுஜா பிரின்ஸ், இந்தப் புத்தாண்டுக்கு உங்கள் வீட்டு வாண்டுகளை குஷிப்படுத்துவதற்காக... சாக்லேட் தயாரித்துக் காட்டுகிறார்!

தேவையான பொருட்கள்: மில்க் காம்பவுண்ட் பேஸ் - 50 கிராம், வொயிட் காம்பவுண்ட் பேஸ் - 50 கிராம் (இரண்டு 'பேஸ்’களும் டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்), முந்திரி - 25 கிராம், பாதாம், பிஸ்தா (தேவைப்பட்டால்) - தலா 25 கிராம், க்ரன்சீஸ் (Crunchies) - 25 கிராம், சுகர் ஸ்ட்ரிங்ஸ் (குச்சி குச்சியாக இருக்கும் - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 25 கிராம், சிலிக்கான் மோல்ட், பிளாஸ்டிக் மோல்ட் (தேவையான டிசைன்களில்) அல்லது சிறிய பிளேட்.

அசத்தும் ப்ரவுனி கேக்... மயக்கும் மக்ரூன்!

செய்முறை: மில்க் காம்பவுண்ட் பேஸ், வொயிட் காம்பவுண்ட் பேஸ், முந்திரி ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும். நறுக்கிய இரண்டு பேஸ்களையும் சிறிய அலுமினிய பாத்திரம் ஒன்றில் வைக்கவும். பிறகு, ஒரு பெரிய அலுமினிய பாத்திரத்தில் நீரைக் கொதிக்கவிட்டு, சிறிய அலுமினிய பாத்திரத்தை அதற்குள் வைத்து, டபுள் பாய்லிங் முறையில் கிரீம் ஆகும்வரை நன்றாகக் கிளறவும். கிரீம் ஆகும்போது, நறுக்கப்பட்ட முந்திரியை சேர்த்து (பாதாம், பிஸ்தா தேவைப்பட்டால் சேர்க்கலாம்) கிளறி இறக்கி, 30 நொடிகள் ஆற வைக்கவும். பிறகு, சிலிக்கான் மோல்ட், பிளாஸ்டிக் மோல்ட் அல்லது வீட்டில் உள்ள சிறிய பிளேட்டில் இதை ஊற்றி, லேசாகத் தட்டவும். அப்போதுதான் அதில் உள்ள காற்றுக் குமிழ்கள் வெளியேறி... சாக்லேட் அழகான வடிவம் பெறும்.

க்ரன்சீஸ், சுகர் ஸ்ட்ரிங்ஸ் ஆகியவற்றை மொறுமொறுப்புக்காக சாக்லேட்டின் மீது தூவிக் கொள்ளலாம். 10 நிமிடம் ஆற வைத்து, 15 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து, ஒரு பெரிய பிளேட்டில் அந்த மோல்டை தலைகீழாக தட்டுங்கள். அரை மணி நேரத்தில், அசத்தலான ஹோம்மேட் சாக்லேட் ரெடி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism