ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

இது போராட்ட சமையல்!

3Gகேட்டரிங் கட்டுரை : ம.பிரியதர்ஷினி; படங்கள் : தி.குமரகுருபரன்

##~##

ஹோட்டல்களில் 'செஃப்’ வேலை பார்க்கும் பெண்களைப் பார்த்து, 'நாம வீட்டுல சமைக்கறத... யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு ஹோட்டல்ல சமைக்கறாங்க. இதுக்காக கை நிறைய சம்பளமும் வாங்குறாங்க. ம்... கொடுத்து வெச்சவங்க!’ என்று சிலர் பெருமூச்சுவிடலாம். ஆனால், இந்தத் துறையில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் சங்கடங்களும், சவால்களும் அதிகம். துறை சார்ந்த இந்தப் பெண்கள் சொல்வதைக் கேளுங்கள்... அடுத்த முறை 'ரெஸ்டாரன்ட்’ செல்லும்போது 'லேடி செஃப்' பற்றிய உங்களின் எண்ணம் மாறியிருக்கும்!

''அங்கீகாரம் கிடைக்க நாள் எடுக்கும்!''

சமையல் கலைஞர் ரேவதி சண்முகம்

''வீட்டுல சமையல் செய்ற பெண்களை மதிக்காதது மாதிரியே, சமையலை தொழிலா எடுக்கிற பெண்களையும் இந்த உலகம் பெரிசா மதிக்கிறதில்ல. முதலில் ஏளனமா பார்ப்பாங்க, அப்புறம் சந்தேகமா சாப்பிடுவாங்க, இறுதியா அங்கீகாரம் கிடைக்கறதுக்கு நாள் எடுக்கும். இப்போ கொஞ்சம் நிலைமை மாறியிருக்கு. 'செஃப்’னா மதிக்கிறாங்க, பத்திரிகைகளில் சமையல் பக்கங்களில் வாய்ப்பு தர்றாங்க, டி.வி. நிகழ்ச்சிகளுக்கு கூப்பிடறாங்க. இதெல்லாம், நிறைய இல்லத்தரசிகள் சமையலை தொழிலா எடுத்துச் செய்யுற அளவுக்கான தைரியத்தை இப்ப கொடுத்திருக்கு. பொதுவா பொண்ணுங்க எந்தத் துறையிலயும் போராடித்தான் வரணும், அதுபோல்தான் இந்தத் துறையும்! ஆனா, இங்க கொஞ்சம் அதிகமாவே போராட வேண்டியிருக்கும்... அவ்வளவுதான்!''

இது போராட்ட சமையல்!

''44 வருட வரலாற்றில் ஒரே பெண்!''

கவிதா, எக்ஸிக்யூட்டிவ், 'மால்குடி ரெஸ்டாரன்ட்', சவேரா ஹோட்டல் குரூப்ஸ், சென்னை

''கேட்டரிங் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடிச்சுட்டு, டி.டி.கே ரோட்டுல இருக்கும் ஒரு ஹோட்டல்லதான் முதன் முதலா வேலைக்குச் சேர்ந்தேன். அந்த கிச்சன்ல, 35 ஆண்களுக்கு நடுவில் வேலை செய்யும் ஒரே பெண்ணா நான் இருந்தேன். 99-ம் வருஷத்துல, அது ஆச்சர்யமான விஷயம்ங்கறதைவிட, சிரமமான விஷயம். ஒரு பெண் தங்களுக்கு இணையா வேலை பார்க்க வந்ததை அவங்களால சகிச்சுக்க முடியல. அடிமையா நடத்துறது, அதிகமா வேலை வாங்கறது, எப்பவும் மட்டம் தட்டுறது, கீழ்மட்ட வேலைகளைப் பார்க்க வைக்கறதுனு கஷ்டங்கள் கொடுப்பாங்க. தட்டு கழுவுறது, ஃப்ரிட்ஜ் க்ளீன் பண்றது, காய்கறி நறுக்கறது, மாவாட்டுறது, ஸ்டோர் ரூம் க்ளீன் பண்றது மாதிரியான வேலைகள்தான் அதிகமா தந்தாங்க. இந்த ஃபீல்ட்ல புதுசா நுழையற பசங்களுக்கும் இந்த மாதிரி 'வரவேற்பு'தான். என்றாலும், பொண்ணுங்கனா... அது ரெண்டு மடங்கா இருக்கும்.

ஏதாவது ஒரு ஆலோசனை சொன்னா, 'இவ என்ன சொல்றது, நாம கேட்கறது’னு அதுக்கு நேர்மாறா நடப்பாங்க. அப்படித்தான் ஒருமுறை, 'முதல் நாள் அரைச்ச தோசை மாவு இருக்கே’னு சொன்னேன். உடனே அந்த மாவை வேணும்னே வீணாக்கி, 'இப்போ அரிசி, உளுந்து ஊற வெச்சு, புது மாவு அரைச்சு வெச்சுட்டுப் போ’னு சொன்னாங்க. 'வீட்டுல ஆக்கிப் போடுறதை விட்டுட்டு, இங்க வந்து ஏன் உயிரை வாங்குறே?’னு எல்லாம் திட்டுவாங்க. எதையும் நமக்கு கற்றுக் கொடுக்க மாட்டாங்க. நாமளா விழுந்து எழுந்துதான் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்.

இது போராட்ட சமையல்!

ஒரு கட்டத்துல பொறுக்க முடியாம அங்கிருந்து வெளியேறிட்டேன். அதுக்கு அப்புறம் இன்னொரு ஹோட்டல்ல, 6,000 சம்பளத்துக்கு 1,600 பேருக்கு சமைக்கிற வேலை. அடுத்ததா இன்னொரு ஹோட்டல்ல 'செஃப் தி பார்ட்டி’ங்கற பதவியில சேர்ந்தேன். மெனு பிளானிங், குவாலிட்டி கன்ட்ரோல், மேன்பவர் அலாட்மென்ட், குக்கிங்னு மரியாதையான பொறுப்புகள் கிடைச்சுது. கிட்டத்தட்ட 12 வருஷ போராட்டத்துக்கான அங்கீகாரமா, 'சவேரா’ ஹோட் டல்ல 'மால்குடி’ங்கிற தனி ரெஸ்டாரென்ட்டுக்கு சீஃப் எக்ஸிக்யூட்டிவா வளர்ந்து வந்திருக்கேன். இந்த ஹோட்டலோட 44 வருஷ வரலாற்றில், யூனிட் செஃப் அந்தஸ்துக்கு வந்த ஒரே பெண் நான்தான். சென்னையைப் பொறுத்தவரைக்கும் 10 பொண்ணுங்க இந்தத் துறையில இருக்கிறதே பெரிய விஷயம்!

இது நேரம் காலம் பார்க்காம செய்ய வேண்டிய வேலை. தவிர, உலகமே ஃப்ரீயா இருக்கிற சனி, ஞாயிறுகளில் நாங்க பிஸியா இருக்கணும். இதை புரிஞ்சுக்கிற குடும்பம் அமையணும். எங்கூட படிச்ச பல பொண்ணுங்களும் வேற ஃபீல்டுக்கு மாறிட்டாங்க. இதை எல்லாம் கடந்துதான் நம்ம திறமையை நிரூபிக்கணும்.''

''படிச்சது சமையல்... கழுவுறது பாத்ரூமா?''

தேவி, அசிஸ்டென்ட் டு செஃப், க்ளாரியன் ஃபோர் ஸ்டார் ஹோட்டல், சென்னை

''டிப்ளோமா இன் கேட்டரிங் டெக்னாலஜி படிச்சுட்டு, கன்னியா குமரியில ஒரு ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்தேன். கிச்சன்ல கலக்கணும்னு ஆர்வமா இருந்த வளை, டிரெயினிங் பீரியட்ல ஹவுஸ் கீப்பிங் செக்ஷன்ல போட் டாங்க. அதாவது ஒரு கெஸ்ட், ரூமை காலி பண்ணினதுக்கு அப் புறம்... அந்த ரூமில் பெட் ஸ்ப் ரெட், பெட் ஷீட் மாத்தி, ரூமை கூட்டி, துடைத்து, பாத்ரூம் கழுவி, ரூம் ஃப்ரெஷர்னு அடிச்சுனு, அந்த அறையை மறுபடியும் நீட்டா ரெடி பண்ணணும். 'செஃப் வேலைக்கு வந்தவளுக்கு, பாத்ரூம் க்ளீன் பண்ற வேலை எதுக்கு?’னு கேள்வி கேட்க முடியாது. அதி லும், பெண் ஊழியர்னா... 'இல்லை’, 'ஏன்’, 'முடியாது’ என்ற வார்த்தை எல்லாம் பேசவே கூடாது.

தொடர்ந்து, ஊட்டியில ஒரு ஹோட்டலில் ஃபுட் அண்ட் டெவலப்மென்ட் கன்ட்ரோலரா வேலை. அதுக்கப்புறம் சிங்கப் பூர்ல ரெண்டு வருஷம் குக் வேலை பார்த்தேன். அந்த அனு பவம்தான், 'க்ளாரியன்’ ஹோட் டல்ல வேலை வாங்கிக் கொடுத் தது. ஒரு நாளைக்கு மூணு கிலோ பூண்டு உரிக்கறது, காய்கறி நறுக் கறது, வீட்டுக்குக் கிளம்புற நேரத் துலகூட, வெங்காயம் நறுக்கிக் கொடுக்கச் சொன்னா, முகம் மாறாம செய்றதுனு கொடுத்த வேலையை தட்டாமல், தவறாமல் செய்தேன். இப்போ நான் இங்க 'அசிஸ்டென்ட் டு செஃப்’ பதவிக்கு உயர்ந்திருக்கேன்.''