Published:Updated:

டு மினிட்ஸ் கிச்சன் கில்லாடிகள் !

டு மினிட்ஸ் கிச்சன் கில்லாடிகள் !

வாசகிகள் பக்கம்

 ''ஆயிரம்தான் புதுசு புதுசா ரெசிபிகள் வந்தாலும், நம்ம ஊருல பரம்பரை பரம்பரையா நாம பயன்படுத்திக்கிட்டிருக்கற சமையல் அயிட்டங்கள்கிட்ட அதெல்லாம் நெருங்கவே முடியாதுங்கறதுதான் உண்மை. ஏன்னா, நம்மளோட உணவுங்க எல்லாமே... சுவைக்காக மட்டுமில்லாம... ஆரோக்கியம், ஆயுள்னு பலதையும் மனசுல வெச்சு உருவானது'' என்று சொல்லும் 'சமையல் திலகம்' ரேவதி சண்முகம், அந்த வகையில் வாசகிகள் தயாரித்து அளித்திருக்கும் இரண்டு அயிட்டங்களை ருசி பார்த்து, தன் கமென்ட்ஸுடன் இங்கே படைக்கிறார்...

டு மினிட்ஸ் கிச்சன் கில்லாடிகள் !

மணத்தக்காளி தயிர் பச்சடி

##~##

பத்து மணத்தக்காளி இலையை நன்றாக வதக்கி, ஒரு பச்சை மிளகாய், 2 ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து, சிறிதளவு உப்புடன் தயிரில் சேர்க்கவும். பிறகு... கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். வாய்ப்புண் உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது.

- நிர்மலா கோபாலகிருஷ்ணன், பெங்களூரு

கமென்ட்: தோல் எடுக்கப்பட்ட பாதாமையும் கூடவே அரைத்துச் சேர்த்தால்... கூடுதல் ருசியோடு கூடுதல் மணமும் சேரும்.

கம்பு கொழுக்கட்டை

கம்பை நன்றாக சிவக்கும் பதத்தில் வறுத்து அரைத்து, இரண்டு சிறிய வெங்காயம், கடலைப்பருப்பு, கொத்தமல்லி தழை, 2 பச்சை மிளகாய், கறிவேப்பிலை இவற்றை எல்லாம் ஒன்றாக வறுத்துக் கொட்டி, சிறிதளவு உப்பு சேர்த்து, அதில் தண்ணீர் தெளித்து அப்படியே பிடித்து இட்லி தட்டில் வைத்து இறக்கினால்... சுவையான கம்பு கொழுக்கட்டை ரெடி.

- மனோன்மணி, கோவை-6

கமென்ட்: கம்பை வறுக்கும்போது ஒரு கப் கம்புக்கு, கால் கப் புழுங்கல் அரிசியையும் சேர்த்துக் கொண்டால்... கூடுதல் ருசி கிடைக்கும்.

நீங்களும் டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடியா..? இரண்டே நிமிடத்தில் செய்யக்கூடிய அறுசுவை தரும் அருமையான ரெசிபியை, உங்கள் குரலில் இங்கே பதிவு செய்யுங்கள் இரண்டே நிமிடத்தில்! சிறந்த ரெசிபிகளுக்கு சிறப்பான பரிசு உண்டு!

ரெசிபிகள் விகடன் டாட் காம் (WWW.Vikatan.com) மூலம் உலகம் முழுக்க உங்கள் குரலிலேயே

வலம் வரும்! உங்கள் செல்போனில் இருந்து

04442890002 என்ற எண்ணை அழுத்துங்கள். இணைப்பு கிடைத்தவுடன், கணினி குரல் ஒலிக்கும். பீப் ஒலிக்குப் பிறகு, உங்கள் பெயர், முகவரி மற்றும் ரெசிபியைச் சொல்லுங்கள்.

வழக்கமான செல்போன் கட்டணங்களுக்கு உட்பட்டது.

படங்கள்: வி.செந்தில்குமார், வீ.நாகமணி

அடுத்த கட்டுரைக்கு