Published:Updated:

இன்றைய சமையல்! - 12

வெஜிடபிள் மசாலா பாத் செஃப் தாமு, படம்: எம்.உசேன்

இன்றைய சமையல்! - 12

''நாம் செய்கிற சமையலில் சின்னச் சின்ன வித்தியாசங்களைப் புகுத்தினால்... சுவையிலும், புதுமையிலும் பெரிதாகப் பேசப்படும். அப்படி ஒரு கிரியேட்டி விட்டியான சமையல்தான் வெஜிடபிள் மசாலா பாத்'' என்று இன்ட்ரோ கொடுத்தார் செஃப் தாமு. அவருடைய கிரியேட்டிவிட்டியை அப்படியே சமையலில் புகுத்தி அசத்தினார், சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி அஞ்சனா ராவ்.

தேவையானவை: அரிசி - ஒன்றரை டம்ளர், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு (அனைத்தும் சேர்த்து) - அரை கிலோ, பெரிய வெங்காயம் - கால் கிலோ, தக்காளிப் பழம் - கால் கிலோ, பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை - தலா 2, துவரம் பருப்பு - 2 கைப்பிடி அளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், தனியாத்தூள் - 3 டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இன்றைய சமையல்! - 12

செய்முறை: காய்கறிகளை ஓரளவுக்கு பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக்கொள்ளுங்கள். துவரம்பருப்பை அரை வேக்காடாக வேகவைத்துக் கொள்ளுங்கள். குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும்... பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, நீளமாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து, நிறம் மாறும் வரை நன்கு வதக்க வேண்டும். பிறகு, நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி, நறுக்கிய காய்களையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதில்... மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் மற்றும் கழுவி, நீரை வடித்த அரிசியைச் சேர்த்து, ஒருமுறை கிளறுங்கள். துவரம்பருப்பு, உப்பு, இரண்டே கால் கப் தண்ணீர் சேர்த்துக் கலக்கி, குக்கரை மூடுங்கள். மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். எந்த வித சைட் டிஷ் இல்லாமல் அப்படியே சாப்பிடக் கூடிய வெஜிடபிள் மசாலா பாத் ரெடி!

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இந்த வெஜிடபிள் மசாலா பாத்.

கமகமக்கும்...