Published:Updated:

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

சாண்ட்விச் பஜ்ஜி... ருசியோ ருசி!  படங்கள் : எம்.உசேன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

  200  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

சாண்ட்விச் பஜ்ஜி

தேவையானவை: பெரிய சைஸ் உருளைக்கிழங்கு - 4, கடலைமாவு - ஒரு கப், பச்சைப் பட்டாணி - 100 கிராம், பெரிய வெங்காயம் - ஒன்று, பூண்டு - 6 பல், பச்சை மிளகாய் - 4, சீஸ் - 50 கிராம் (துருவிக்கொள்ளவும்), மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சைப் பட்டாணி, பூண்டு, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை வதக்கி அரைத்து, தேவையான உப்பு சேர்த்து வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி வட்ட வில்லைகளாக நறுக்கவும். ஒரு வில்லையில் அரைத்த விழுதை பூசி, சீஸ் துருவலை தூவவும். அதை மற்றொரு உருளைக்கிழங்கு வில்லையால் மூடி வைக்கவும்.

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

கடலை மாவுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, நீர் விட்டு, கெட்டியாகக் கரைக்கவும். செய்துவைத்துள்ள உருளைக்கிழங்கு 'சாண்ட்விச்’சை மாவில் முக்கி எடுத்து, சூடான எண்ணெயில் பொரிக்கவும்.

உருளைக்கிழங்குக்கு பதில் பனீரை அகல துண்டுகளாக நறுக்கியும் இதேபோல் பஜ்ஜி செய்யலாம்.

- பத்மஜா ராமகோபால், பெங்களூரு

பீட்ரூட் சம்மி

தேவையானவை: கொண்டைக்கடலை - அரை கப், துருவிய பீட்ரூட் - அரை கப், சுக்குப் பொடி - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், கடலை மாவு - கால் கப், எண்ணெய் - தேவையான அளவு.

ஸ்டஃப்பிங் செய்ய: முளைகட்டிய பாசிப்பயறு - அரை கப், முந்திரிப் பருப்பு - 10, உலர்திராட்சை - 10, சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), உப்பு - தேவையான அளவு.

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

செய்முறை: கொண்டைக்கடலையை ஊறவைத்து வேகவிடவும். துருவிய பீட்ரூட்டை உப்பு கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும். வேக வைத்த கொண்டைக்கடலையை கட்டி இல்லாமல் மசித்துக் கொள்ளவும். பீட்ரூட்டை பிழிந்து பாத்திரத்தில் போட்டு, சுக்குப் பொடி, கரம் மசாலாத்தூள், கடலை மாவு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். ஸ்டஃப்பிங் செய்ய கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்துப் பிசையவும்.

பிசைந்து வைத்த கொண்டைக்கடலை கலவையை உருண்டைகளாக உருட்டி, அதை கைகளால் கிண்ணம் போல் செய்துகொள்ளவும். அதனுள் ஸ்டஃப்பிங் கலவையை வைத்து மூடி, உருண்டைகளாக உருட்டவும். எண்ணெயைக் காயவைத்து, அதில் உருண்டைகளைப் போட்டு பொரிக்கவும். சூடாக பரிமாறவும்.

- பூர்ணிமா கிருஷ்ணன், சேலம்