ஸ்பெஷல் 1
Published:Updated:

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

படங்கள் : எம்.உசேன் வாசகிகள் பக்கம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

 200,   

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

ஆரஞ்சு - மிளகு ரசம்

தேவையானவை: பழுத்த ஆரஞ்சு - 2,  மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம், கடுகு - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, எலுமிச்சை பழம் - அரை மூடி, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

செய்முறை: ஆரஞ்சு பழத்தை உரித்து, விதைகளை நீக்கி, சுளைகளை மிக்ஸியில் போட்டு அடித்து, சக்கையை வடிகட்டி, சாறு எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும். மிளகு - சீரகத்தை பொடித்துக்கொள்ளவும். இந்தப் பொடியை 4 டம்ளர் தண்ணீரில் கலக்கவும். கடாயில் நெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து... மிளகு - சீரக தண்ணீர், உப்பு, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்கவிட்டு, இறக்கவும். இதில் ஆரஞ்சு சாறு விட்டுக் கலக்கி... எலுமிச்சையைப் பிழியவும். பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.

இந்த ரசம்... புது நிறத்தோடு, சுவையில் அசத்தும்! புளியில்லா பத்தியம் இருப்பவர்களுக்கு மிகவும் ஏற்றது.  

- பிரியா கிஷோர், மயிலாப்பூர்

பலாப்பழ இட்லி

தேவையானவை: கேழ்வரகு மாவு, அரிசி மாவு, ஓட்ஸ் - தலா ஒரு கப், தேங்காய்த் துருவல் - அரை கப், பலாச்சுளைகள் - 8, வெல்லப்பாகு - தேவையான அளவு, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள், உப்பு - தலா ஒரு சிட்டிகை.

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

செய்முறை: தேங்காய்த் துருவல், பலாச்சுளையை சேர்த்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும். இதனுடன் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, ஓட்ஸ், வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள், உப்பு, நெய் ஆகியவற்றை கலந்து, தண்ணீர் விட்டு, இட்லி மாவு பதத்தில் கலந்து வைக்கவும். அரை மணி நேரத்துக்குப் பிறகு, மாவை இட்லித் தட்டில் ஊற்றி, ஆவியில் வேகவைத்துப் பரிமாறவும்.

வெல்லப்பாகுக்கு பதில், சர்க்கரைப் பாகு சேர்த்தும் தயாரிக்கலாம்.

- இ.டி.ஹேமமாலினி, அயனாவரம்