Published:Updated:

இன்றைய சமையல்! - 15

சம்மரை சமாளிக்கலாம்... வாங்க!'செஃப்’ தாமு, படங்கள் : எம்.உசேன்

இன்றைய சமையல்! - 15

சம்மரை சமாளிக்கலாம்... வாங்க!'செஃப்’ தாமு, படங்கள் : எம்.உசேன்

Published:Updated:
இன்றைய சமையல்! - 15

''கோடைகாலத்தில் மிகப்பெரிய பிரச்னை... தாகம், நாவறட்சி! அதற்கு நிவாரணமாக குடும்பத்தினருக்கு செயற்கை பானங்களைக் கொடுப்பதற்கு பதிலாக.... சிம்பிளாக செய்யக்கூடிய, ஹெல்தியான இயற்கை பானங்களை எப்படி செய்து தருவது என்று சொல்கிறேன். நான் சொல்கிற இந்த பானங்களை எல்லாம் தயாரித்த உடனேயே அருந்தக் கொடுங்கள். அதிக நேரம் வெளியிலோ அல்லது ஃப்ரிட்ஜிலோ வைத்திருக்க வேண்டாம். இந்த ஜூஸ்களை குடித்தவுடன் உங்கள் குழந்தைகள் 'வீ வாண்ட் டிரிங்ஸ் அகெய்ன்'' என்று உற்சாகக் கூச்சலிடுவார்கள்'' என்று செஃப் தாமு அக்கறையுடன் கொடுத்த குறிப்புகளை, ஆவலுடன் கேட்டுக்கொண்டு, அவற்றை அசத்தலாக செய்து காட்டுகிறார், சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி அஞ்சனா ராவ்.

தாளிச்ச மோர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேவையானவை: தயிர் - ஒரு கப், ஐஸ் வாட்டர் - தேவையான அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: தயிரை மண் சட்டியில் விட்டு, ஐஸ் வாட்டர் ஊற்றி நன்கு கடைந்து, உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு, அடுப்பில் வாணலியை வைத்து, சூடானதும் எண்ணெய் ஊற்றி... கடுகு, காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, அதனை அப்படியே மோரில் சேர்த்துவிட்டால்... வெயிலுக்கு இதமான தாளிச்ச மோர் ரெடி!

இன்றைய சமையல்! - 15

கேரட்  ஆரஞ்சு ஜூஸ்

தேவையானவை: கேரட், ஆரஞ்சுப்பழம்  - தலா ஒன்று, தேன் - ஒன்றரை டீஸ்பூன், புதினா - 5 இலைகள், ஐஸ் கட்டிகள் - சிறிதளவு.

செய்முறை: கேரட் மற்றும் ஆரஞ்சு பழத்தை தோல் நீக்கி சதைப்பற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து இறுத்து ஜூஸ் எடுத்துக்கொள்ளுங்கள். இதை ஒரு கிளாஸில் ஊற்றி... தேன், பொடியாக நறுக்கிய புதினா இலைகள், ஐஸ்கட்டிகள் சேர்த்தால்... அட்ட காசமான சுவையில் ஜூஸ் ரெடி.

குழந்தைகள் பெரும்பாலும் கேரட் ஜூஸை விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு இப்படிக் கொடுத்தால் 'மடமட’வென்று குடித்து விட்டு, 'ஒன்ஸ்மோர்’ கேட்பார்கள்.

இன்றைய சமையல்! - 15

தர்பூசணி ஜூஸ்

தேவையானவை: தர்பூசணி சாறு - ஒரு கிளாஸ் (விதைகளை நீக்கி அதன் சதைப் பகுதியை மட்டும் மிக்ஸியில் போட்டு ஜூஸ் எடுத்துக்கொள்ளுங்கள்), எலுமிச்சை - ஒரு மூடி, புதினா - 5 இலைகள், ஐஸ் கட்டிகள் - சிறிதளவு, தேன் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன், பச்சை கலர் ஃபுட் கலர் - சிறிதளவு, இஞ்சிச்சாறு - 2 டீஸ்பூன்.

செய்முறை: தர்பூசணி சாறுடன் எலுமிச்சைச் சாறு, இஞ்சிச்சாறு, தேன், நறுக்கிய புதினா இலைகள், ஐஸ் கட்டிகள் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு, ஒரு தட்டில் சர்க்கரையைப் பரப்பி அதில் பச்சை கலர் ஃபுட் கலரை சேர்த்துக் கிளறினால், சர்க்கரை பச்சை நிறத்தில் மாறிவிடும். இனி, ஜூஸ் கிளாஸை எடுத்து அதன் வாய்ப்பகுதியில் சிறிது தண்ணீர் தடவி, அப்படியே சர்க்கரை பரப்பிய தட்டில் கவிழ்த்து வைத்தால், கிளாஸின் வாய்ப்பகுதியில் பச்சை நிற சர்க்கரை ஒட்டிக் கொள்ளும். இந்த கிளாஸில் ரெடி செய்த ஜூஸை ஊற்றி, குழந்தைகளிடம் கொடுத்தால்  நிமிடத்தில் காலியாகிவிடும்.

வசந்த நீர்

தேவையானவை: இளநீர் காய்கள் - 2 (காய்களில் உள்ள தண்ணீரை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். இளநீர் வழுக்கையை பொடியாக நறுக்கிக்கொள் ளுங்கள்), தேன் - ஒரு டீஸ்பூன், எலு மிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், துளசி இலை - 5, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை: வாய் அகன்ற ஒரு சட்டியில் ஐஸ் கட்டிகளைப் போட்டுவிடுங்கள். இப்போது அதன் உள்ளே இன்னொரு சிறிய பாத்திரத்தை வைத்து அத்தனையையும் கலந்துவிட்டால் அற்புத மான வசந்த நீர் தயார் (இளநீரோடு ஐஸ்கட்டிகளை கலந்தால் 'சொதசொத’ என்றாகிவிடும் என்பதால்தான் இந்த ஏற்பாடு). தேவைப்படும்போது கிளாஸில் வசந்த நீரை ஊற்றிக் கொடுக்கலாம்.

இன்றைய சமையல்! - 15

முலாம்பழ டிலைட்

தேவையானவை: முலாம் பழம் - ஒன்று, நாட்டுச்சர்க்கரை - 3 டீஸ்பூன், இஞ்சிச் சாறு - 2 டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் - ஒரு துளி, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை: முலாம் பழத்தை தோல் சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கப்பில் நறுக்கிய முலாம் பழத்தைப் போட்டு, மேலே கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும்  சேர்த்துக் கலந்தால்... சத்தான முலாம்பழ டிலைட் ரெடி!

கமகமக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism