Published:Updated:

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

வாசகிகள் பக்கம்உள்ளம் கேட்குமே... மில்லட் கபாப்!படங்கள் : எம்.உசேன்

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

வாசகிகள் பக்கம்உள்ளம் கேட்குமே... மில்லட் கபாப்!படங்கள் : எம்.உசேன்

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

 200    

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

மில்லட் கபாப்

தேவையானவை: கம்பு, பச்சைப் பயறு, கொண்டைக்கடலை (மூன்றும் முளைகட்டியவை) - தலா அரை கப், துருவிய கேரட், முட்டைகோஸ் - தலா கால் கப், நறுக்கிய வெங்காயம் - அரை கப், பிரெட் ஸ்லைஸ் - 2, இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 3 பல், சோம்பு, சீரகம், மிளகு, பட்டை (சிறிய துண்டுகளாகவும்) - தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

செய்முறை: முளைகட்டிய மூன்று தானியங்களையும் குக்கரில் வேகவைத்து, ஆறியவுடன் மிக்ஸியில், மையாக அரைக்கவும். அதனுடன் நறுக்கிய காய்கறிகள், பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பூண்டு, பட்டை, சோம்பு, சீரகம், மிளகு, மிளகாய்த்தூள் ஆகியவற்றை கலந்து பிசையவும். பிரெட் ஸ்லைஸை நீரில் நனைத்து பிழிந்துவிட்டு, அதையும்  சேர்த்துப் பிசைந்து... எலுமிச்சைச் சாறு, உப்பு கலந்து சிறு உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு, செய்து வைத்த உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

- என்.சாந்தினி, மதுரை

கற்றாழை லஸ்ஸி

தேவையானவை: சோற்றுக்கற்றாழை (மேல்தோலை சீவி, உள்ளே இருக்கும் சதைப்பகுதியை எடுத்துக்கொள்ளவும்) - ஒரு கப், தயிர் - ஒரு கப், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 4.

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

செய்முறை: சோற்றுக்கற்றாழையின் சதைப்பகுதியை  மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும். அந்த ஜூஸ் அரை கப் இருக்க வேண்டும். அதனுடன் தயிர், சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து நுரைக்க அடித்து, டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும்.

கோடையில் உடலைக் குளிரவைக்கும் அற்புத லஸ்ஸி இது.

- பி.சுமித்ரா, சென்னை-11

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism