Published:Updated:

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

சாமை கொழுக்கட்டை... சபாஷ்! வாசகிகள் பக்கம், படங்கள் : எம்.உசேன்

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

சாமை கொழுக்கட்டை... சபாஷ்! வாசகிகள் பக்கம், படங்கள் : எம்.உசேன்

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

 200   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

சாமை  குதிரைவாலி நீர்க்கொழுக்கட்டை

தேவையானவை: சாமை, குதிரைவாலி - தலா 100 கிராம், ஓட்ஸ், சம்பா ரவை, பச்சரிசி - தலா 3 டீஸ்பூன், முழு உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு (தாளிக்க) - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், சமையல் எண்ணெய் - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, பெருங்காயம் - சிறிதளவு, உப்பு -  தேவைக்கேற்ப.

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

செய்முறை: சாமை முதல் கடலைப்பருப்பு வரை கொடுத்துள்ள அனைத்தையும் மிக்ஸியில் போட்டு 3 நிமி டங்கள் அரைக்கவும் (சன்ன ரவை போல). கடைசியில் மிளகு - சீரகம் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய்  விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் போட்டு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் விட்டு, உப்பு போட்டு கொதிக்கவிடவும். இதனுடன் அரைத்ததை சேர்த்துக் கிளறி...  தேங்காய் துருவல் போட்டு மேலும் கிளறி இறக்கவும். பெருங்காயத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். ஆறிய பின் சிறு பிடிகொழுக்கட்டைகளாகப் பிடித்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

மிகவும் சத்தான, இரவு நேர உணவு இது. காரச் சட்னி இதற்கு நல்ல காம்பினேஷன்.

- சந்திரா ஜானகிராமன், மயிலாப்பூர்

தேசி டவ்நட்

தேவையானவை: சன்ன ரவை - ஒரு கப், மைதா - கால் கப், வெண்ணெய் - 50 கிராம், பால் - அரை கப், சர்க்கரைப் பொடி - கால் கப், மில்க் சாக்லேட் - 50 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

செய்முறை: ரவை, மைதா, வெண்ணெய் மூன்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். பால்விட்டு கெட்டியாக பிசையவும். கிரிக்கெட் பந்து அளவு மாவை எடுத்து, நீளவாக்கில் உருட்டவும். தேவையான அளவில் வட்டமாக சுற்றி இரண்டு முனைகளையும் ஒட்டவும்.        

பிறகு, இதை சூடான எண்ணெயில் பொரிக்கவும். சர்க்கரைப் பொடி, சாக்லெட் துருவல் தூவி அலங்கரிக்கவும்.

- பார்வதி, பெங்களூரு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism