Published:Updated:

இன்றைய சமையல்! - 16

பலாப்பழ பால் பாயசம்

இன்றைய சமையல்! - 16

பலாப்பழ பால் பாயசம்

Published:Updated:
இன்றைய சமையல்! - 16

''இது பலாப்பழ சீஸன். எங்கு திரும்பினாலும் பலாப்பழ வாசம் மூக்கைத் துளைக்கிறது. அதை வைத்து பால் பாயசம் ஒன்றை செய்ய உங்களுக்கு சொல்லித் தருகிறேன்'' என்றபடியே செஃப் தாமு, சென்னையைச் சேர்ந்த அஞ்சனா ராவுக்கு ரெசிபி சொல்ல ஆரம்பித்தார்.

அதை கவனமாகக் கேட்டுக் கொண்ட அஞ்சனா ராவ், அட்டகாசமாக செய்துகாட்டுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேவையானவை: பலாப்பழம் - 8 சுளை, கொப்பரைத் தேங்காய் - கால் மூடி (சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கவும்), நெய் - 6 டீஸ்பூன், முந்திரி - 10, உலர்திராட்சை - 10, தேங்காய்ப்பால் - அரை லிட்டர், வெல்லம் - 200 கிராம்.

இன்றைய சமையல்! - 16

செய்முறை: ஒவ்வொரு பலாச்சுளையையும் க்யூப் வடிவில் எட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய பலா துண்டுகளைப் போட்டு லேசாக வதக்குங்கள். பின்பு, வாணலியில் மீதமிருக்கும் நெய்யிலேயே முந்திரி, உலர்திராட்சை, சின்ன துண்டுகளாக நறுக்கிய கொப்பரைத் தேங்காய் ஆகியவற்றை போட்டு வதக்கி ஆறவிடுங்கள். இனி, வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, தனியாக ஒரு கப்பில் எடுத்து வையுங்கள். அடுப்பை மூட்டி வாணலியை வைத்து, அதில் வதக்கிய பலாத்துண்டுகளைப் போட்டு, வெல்லக் கரைசலை ஊற்றி... திராட்சை, முந்திரி, கொப்பரைத் தேங்காய் போட்டு இரண்டு நிமிடம் நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும். பிறகு, தேங்காய்ப்பாலை ஊற்றிக் கலந்து சாப்பிடவும்.

- கமகமக்கும்...