நுங்கு ஃப்ரூட் சாலட்

தேவையானவை: தோல் நீக்கிய நுங்கு - 8, தர்பூசணி துண்டுகள் (சிறிய சைஸ்) - 6, கறுப்பு திராட்சை - 100 கிராம், மாம்பழத்துண்டுகள் - 5, பாதாம் மற்றும் பிஸ்தா பருப்பு - 50 கிராம் (பொடிக்கவும்), எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், ஆலிவ் ஆயில் - சிறிதளவு, ஐஸ்க்ரீம் - 100 மில்லி, உப்பு - தேவைக்கேற்ப.

கூல் சாலட்... டேஸ்ட்டி குல்சா!

செய்முறை: பழங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்துகொள்ளவும், இதனுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, ஆலிவ் ஆயில் சேர்க்கவும். பிறகு, நுங்கை பொடிப்பொடியாக நறுக்கி சேர்க்கவும். அதன் மேல் ஐஸ்க்ரீமை போட்டு, பாதாம் - பிஸ்தா பொடியை தூவி, சாப்பிடக் கொடுக்கவும்.

- எஸ்.ஈஸ்வரி, தேனி

காஷ்மீரி குல்சா

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், தயிர், பால் - தலா அரை கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், சமையல் சோடா - கால் டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன், வெண்ணெய் - 4 டீஸ்பூன், கரகரப்பாக பொடித்த பாதாம் - முந்திரி - தேவையான அளவு, நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

கூல் சாலட்... டேஸ்ட்டி குல்சா!

செய்முறை: கோதுமை மாவு, சர்க்கரை, உப்பு, சமையல் சோடா, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்த்து கலந்துகொள்ளவும். இதனுடன் தயிர், பால் சேர்த்து, இரண்டு டீஸ்பூன் வெண்ணெயை உருக்கி ஊற்றிப் பிசையவும். அரை மணி நேரம் ஊறவைக்கவும்.  பின்னர் மாவை உருண்டைகளாக உருட்டவும். பிளாஸ்டிக் ஷீட்டில் நெய் தடவி அதில் உருண்டையை வைத்து அதே ஷீட்டை மடித்து மூடி, குழவியால் தேய்க்கவும் (சப்பாத்தி போல்). சூடான தோசைக்கல்லில் சிறிதளவு வெண்ணெய் போட்டு, உருகியதும் அதில் சப்பாத்தியை போட்டு, பொடித்த பாதாம் - முந்திரி தூவி கையால் அழுத்திவிடவும். வெந்ததும் திருப்பி போட்டு, வெண்ணெய் தடவி, வேகவிட்டு எடுக்கவும். துண்டுகளாக போட்டு சாப்பிடக் கொடுக்கவும்.

- லக்ஷ்மி ராமச்சந்திரன், சேலம்

கூல் சாலட்... டேஸ்ட்டி குல்சா!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூபாய் 200;

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து  சமைத்து வழங்கியிருப்பவர்  'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு