ஸ்பெஷல் 1
Published:Updated:

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

ஆக்ரா பேடா லட்டு... அடடா, என்ன ருசி! வாசகிகள் பக்கம்,   படங்கள் : எம்.உசேன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

 200

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து  சமைத்து வழங்கியிருப்பவர்  'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

ஆக்ரா பேடா லட்டு

தேவையானவை: ஆக்ரா பேடா (பூசணிக்காய் இனிப்பு - ஸ்வீட் ஸ்டால்களில் கிடைக்கும்) - 200 கிராம், இனிப்பில்லாத கோவா - 50 கிராம், பாதாம் - முந்திரி பொடி - தேவைக்கேற்ப, தேங்காய்ப் பொடி (டெசிக்கேட்டட் கோகனட் - பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், செர்ரிப்பழம் - சிறிதளவு.

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

செய்முறை: ஆக்ரா பேடாவை நன்றாக துருவிக்கொள்ளவும். கடாயில் நெய் விட்டு பேடா துருவல், கோவா சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி இறக்கவும். இதனுடன் பாதாம் - முந்திரிப் பொடி, பாதி அளவு தேங்காய்ப் பொடி, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கலந்து உருண்டைகளாக உருட்டவும். மீதமுள்ள தேங்காய்ப் பொடியில் உருண்டைகளைப் புரட்டி எடுத்து, செர்ரி பழத் துண்டுகளால் அலங்கரிக்கவும்.

- எம்.சங்கரி, சென்னை-91

மாங்காய்  தேங்காய்ப்பால் குழம்பு

தேவையானவை: மாங்காய் - ஒன்று, மிளகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய்ப்பால் - ஒரு டம்ளர், சீரகம் - சிறிதளவு, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

செய்முறை: மாங்காயைப் பொடியாக நறுக்கி... இஞ்சி, மிளகு சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். அதில் தேங்காய்ப்பால் விட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சீரகம், கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்து குழம்புடன் சேர்க்கவும்.

இதை ஆப்பம், இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். அல்லது சூப் போல அப்படியே பருகலாம்.

- விஜயலட்சுமி, பெங்களூரு