ஸ்பெஷல் 1
Published:Updated:

 இன்றைய சமையல்! - 17

'செஃப்’ தாமு,    படங்கள்: எஸ்.பி.ஜெர்ரி ரினால்டு விமல் 

 இன்றைய சமையல்! - 17

''குழந்தைகளுக்குப் பிடித்த உணவைத் தயாரித்துக் கொடுப்பதே சற்று புதுமையான விஷயம்தான். அந்த வகையில் சீஸனுக்கு ஏற்ற பழங்களை வைத்து மில்க் ஷேக் செய்ய இந்த முறை ரெசிப்பி சொல்கிறேன்...'' என்றபடியே செஃப் தாமு சொன்ன இரண்டு மில்க் ஷேக் ரெசிப்பிகளையும் குறித்துக்கொண்டு, சூப்பராக செய்து அசத்தினார் சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி அஞ்சனா ராவ்.

மாம்பழ மில்க் ஷேக்

தேவையானவை: மாம்பழம் - 200 கிராம் அளவுக்கு இருக்கும் 2 பங்கனபள்ளி அல்லது மல்கோவா, காய்ச்சி ஆற வைத்த பால் - 2 கிளாஸ், மாம்பழ ஐஸ்க்ரீம் - 3 ஸ்கூப், மாம்பழ எசன்ஸ் - 2 துளிகள், சர்க்கரை - 6 டீஸ்பூன், ஐஸ்க்யூப்ஸ் - 2 டிரே.

செய்முறை: மாம்பழத்தின் சதைப்பகுதியை மட்டும் மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன், காய்ச்சி ஆறவைத்த பால், சர்க்கரை, மாம்பழ எசன்ஸ், இரண்டு ஸ்கூப் மாம்பழ ஐஸ்க்ரீம் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். வாய் அகன்ற ஒரு பாத்திரத்தின் உள்ளே ஐஸ்கட்டிகளைப் போட்டு, அதன் உள்ளே ஒரு சிறிய பாத்திரத்தை வைத்து, தயாரித்திருக்கும் மில்க் ஷேக்கை அதில் ஊற்றுங்கள். பரிமாறும்போது, இதை ஒரு கிளாஸில் ஊற்றி, மீதமிருக்கும் ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீமை அதன் மேல் வைத்தால்... அசத்தலாக இருக்கும்!

 இன்றைய சமையல்! - 17

வாழைப்பழ மில்க் ஷேக்

தேவையானவை: வாழைப்பழம் (பூவன்பழம்) - 4, காய்ச்சி ஆறவைத்த பால் - 2 கிளாஸ், வெனிலா ஐஸ்க்ரீம் - 3 ஸ்கூப், வெனிலா எசன்ஸ் - 2 துளிகள், சர்க்கரை - 6 டீஸ்பூன். ஐஸ்க்யூப்ஸ் - 2 டிரே.

செய்முறை: தோல் நீக்கிய வாழைப்பழத்தை மிக்ஸியில் போட்டு மையாக அரைத்து, அதனுடன் இரண்டு ஸ்கூப் வெனிலா ஐஸ்க்ரீம், வெனிலா எசன்ஸ், பால், சர்க்கரை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுங்கள். வாய் அகன்ற பாத்திரத்தின் உள்ளே ஐஸ்கட்டிகளைப் போட்டு, அதனுள்ளே ஒரு சிறிய பாத்திரத்தை வைத்து, தயாரித்த மில்க் ஷேக்கை அதில் ஊற்றுங்கள். பரிமாறும்போது, இதை ஒரு கிளாஸில் ஊற்றி, மீதம் இருக்கும் ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீமை அதன் மேல் வைத்துக் கொடுத்தால், சூப்பராக இருக்கும்!

கமகமக்கும்..