Published:Updated:

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

ஃப்ரூட் லாலிபாப்... குட்டீஸ் ஸ்பெஷல்!படங்கள்: எம்.உசேன்

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

ஃப்ரூட் லாலிபாப்... குட்டீஸ் ஸ்பெஷல்!படங்கள்: எம்.உசேன்

Published:Updated:

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து  சமைத்து வழங்கியிருப்பவர்  'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 200

ஜவ்வரிசி கார அப்பம்

தேவையானவை: ஜவ்வரிசி - 100 கிராம், அரிசி மாவு - 100 கிராம், மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், தேங்காய் - ஒன்று, தயிர் - ஒரு கப், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் 2 டீஸ்பூன் நெய் விட்டு ஜவ்வரிசியை வறுக்கவும். தேங்காயைத் துருவி கெட்டியான பால் எடுத்து, வறுத்த ஜவ்வரிசியை இதில் ஊறவைக்கவும். ஊறியதும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். இதனுடன் அரிசி மாவு, உப்பு, மிளகுப்பொடி, சீரகப்பொடி, பெருங்காயத்தூள், தயிர், கிள்ளிய கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்துக் கலந்து, இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

குழியப்பக் கல்லை அடுப்பில் வைத்து, நெய் விட்டு, காய்ந்ததும், மாவை ஊற்றி சுட்டு எடுக்கவும். அல்லது வாணலியை அடுப்பில் வைத்து, நெய் விட்டு கரண்டியில் மாவை எடுத்து அப்பம் போல் ஊற்றி, வெந்ததும் திருப்பிப் போட்டு பொன்னிறமானதும் எடுத்து பரிமாறவும்.

- அங்கயற்கண்ணி அம்மையப்பன், மதுரை

மாதுளை லாலிபாப்

தேவையானவை: மாதுளம்பழ ஜூஸ் - அரை கப், சர்க்கரை - ஒரு கப், மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன், வெண்ணெய் அல்லது நெய் - 2 டேபிள்ஸ்பூன், டூத் பிக் குச்சி - தேவையான அளவு.

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

செய்முறை: மாதுளம்பழ ஜூஸுடன் சர்க்கரை சேர்த்து வாணலியில் கொதிக்கவிடவும். பாகு உருட்டு பதம் வரும் சமயம் (கலவையிலிருந்து சிறிது எடுத்து உருட்டினால், உருண்டை செய்ய வர வேண்டும்), மில்க்மெய்ட் சேர்த்துக் கிளறவும். அதனுடன் வெண்ணெய் (அ) நெய் சேர்க்கவும். பிறகு, கீழே இறக்கி வெண்ணெய் தடவிய தட்டில் கொட்டி, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, டூத் பிக் செருகினால்... குழந்தைகளின் மனம் கவரும் மாதுளை லாலிபாப் தயார்!

இதேபோல் விதம்விதமான பழ ஜூஸ்களைக் கொண்டு லாலிபாப் செய்து தரலாம்.

- வி.சுமித்ரா, சின்னக்கொடுங்கையூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism