Published:Updated:

கமகம பிரியாணி... விறுவிறு சூப்!

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்படங்கள்: எம்.உசேன்

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து  சமைத்து வழங்கியிருப்பவர்  'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

  ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கமகம பிரியாணி... விறுவிறு சூப்!

 200

பீர்க்கங்காய் சூப்

தேவையானவை: பீர்க்கங்காய் இளசு - 300 கிராம், பெரிய வெங்காயம் - ஒன்று, சோள மாவு - 2 டீஸ்பூன், தண்ணீர் - ஒன்றரை டம்ளர், நெய் - 2 டீஸ்பூன், பால் - அரை டம்ளர், சர்க்கரை, மிளகுத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

கமகம பிரியாணி... விறுவிறு சூப்!

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கவும். பீர்க்கங்காயை தோல் நீக்கி, பொடியாக நறுக்கி, தண்ணீர் விட்டு குக்கரில் வேகவைத்து, மத்தினால் கடையவும் (மிக்ஸியிலும் அடிக்கலாம்). பிறகு, வடிகட்டவும். வடிகட்டிய நீருடன் வதக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். சோள மாவை பாலில் கரைத்துச் சேர்த்து கொதிக்கவைக்கவும். இதில் சர்க்கரை, மிளகுத்தூள், உப்பு சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

- ஹர்ஷா ஸ்ரீ, ஈரோடு  

அவல் பிரியாணி

தேவையானவை: கெட்டி அவல் - ஒரு கப், கடலை மாவு - கால் கப், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, சோம்பு - ஒரு டீஸ்பூன், பட்டை - ஒரு சிறிய துண்டு, வெங்காயம் - 1, பிரிஞ்சி இலை - ஒன்று, ஏலக்காய், லவங்கம் - தலா 2, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித் தழையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். பட்டை, லவங்கம், ஏலக்காயைத் தட்டிக்கொள்ளவும். சோம்பை தூளாக்கிக் கொள்ளவும். அவலை சிறிதளவு தண்ணீர் விட்டுக் கழுவி, நீரை வடிகட்டி, உப்பு, சோம்புத்தூள், கடலை மாவு சேர்த்துக் கலந்து வைத்துக்கொள்ளவும்.

கமகம பிரியாணி... விறுவிறு சூப்!

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கி... இஞ்சி, பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து சிவக்க வறுக்கவும். அதனுடன் அவல் கலவையை சேர்த்துக் கிளறவும். வெந்ததும், கொத்தமல்லித் தழையை சேர்த்துக் கிளறி, கடைசியாக எலுமிச்சைச் சாறு கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

இந்த அவல் பிரியாணியை, தக்காளிக் குழம்போடு சூடாகச் சாப்பிட்டால்... சுவையோ சுவை!

- பி.கார்த்திகாராணி, காஞ்சிபுரம்