Published:Updated:

வாசகிகள் கைமணம்

வாசகிகள் கைமணம்

வாசகிகள் கைமணம்

 போஹா வடை

தேவையானவை: கெட்டி அவல் - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று, வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப்,  பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 3, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வாசகிகள் கைமணம்
##~##

செய்முறை: சுத்தப்படுத்திய அவலை கால் மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டவும். இத்துடன் மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, சீரகம் சேர்த்து நன்றாகப் பிசையவும். இந்தக் கலவையை சிறு சிறு  வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு, பொன்னிறமாகப் பொரித்து எடுத்து, சூடாகப் பரிமாறவும்.

- வே.சித்ரா வேடியப்பன், ஊதப்பூண்டி

மும்மா ஸ்வீட்

தேவையானவை: சோயா மாவு - ஒரு கப், மைதா மாவு - ஒன்றரை கப், முந்திரி மாவு கைப்பிடியளவு (முந்திரியை மிக்ஸியில் பொடித்த மாவு) - ஒரு கப், சர்க்கரை- 3 கப், பால் - ஒரு கப், நெய் - ஒரு கப், எண்ணெய் - தேவையான அளவு

வாசகிகள் கைமணம்

செய்முறை: பாலில் பாதியளவு சர்க்கரையை சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். வாயகன்ற பாத்திரத்தில் சோயா மாவு, மைதா மாவு, முந்திரி மாவு சேர்த்து, நெய் விட்டு நன்கு பிசிறவும். பிறகு, சர்க்கரை சேர்த்த பால் விட்டு பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். அரை மணி நேரத்துக்குப் பிறகு, மாவிலிருந்து பெரிய உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி போல உருட்டி... விரும்பிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். மீதமுள்ள சர்க்கரையைப் பொடித்துக் கொள்ளவும்.

எண்ணெயைக் காய வைத்து, வெட்டி வைத்துள்ள துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். உடனே அவற்றை பொடித்து வைத்துள்ள சர்க்கரையில் புரட்டி எடுத்து, தட்டில் வைத்து பரிமாறவும். இதை சில நாட்கள் வைத்திருந்தும் சாப்பிடலாம்.

- தாரா மணிவண்ணன், கோவை

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து,  சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

போஹா வடை: அவலுடன், பொடித்த பொட்டுக்கடலை மாவு அல்லது அரைத்த துவரம்பருப்பு மாவும் சேர்த்தால் வடை 'மொறுமொறு’ என்று ருசியாக இருக்கும்.

மும்மா ஸ்வீட்: முந்திரி மாவுடன் கொஞ்சம் பொடித்த பாதாம் மாவும் சேர்த்தால் டேஸ்ட் சூப்பராக இருக்கும்.

படங்கள்: எம்.உசேன்