ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கதம்ப சட்னி
தேவையானவை: பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, துருவிய தேங்காய் - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 2 பல், கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி, புதினா - தலா ஒரு கைப்பிடி அளவு, புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, வெந்தயம் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு சேர்க்கவும். வெடித்ததும் உளுந்து, கடலைப்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிள காய், வெந்தயம், பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, நறுக்கிய தக்காளி, இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, உப்பு சேர்த்து, எல்லாம் நன்கு வதங்கியதும் புளிக்கரைசல், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியதும் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
இது வெள்ளைப் பணியாரம், வடை, தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது. சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.
- எஸ்.சந்திரா, சென்னை-56
வாழைத்தண்டு ஜாமூன்
தேவையானவை: ரவுண்டாக நறுக்கிய வாழைத்தண்டு துண்டுகள் - 10, பொடித்த வெல்லம் - அரை கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், பாதாம், பிஸ்தா, முந்திரி (பொடியாக்கியது) - கால் கப்.

செய்முறை: ரவுண்டாக நறுக்கிய வாழைத்தண்டை தண்ணீரில் போட்டு வைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து, தண்ணீர் ஊற்றி, கரைந்ததும் வடிகட்டி எடுத்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். பாகு ஒரு கம்பி பதம் வந்ததும் அதில் வாழைத்தண்டைப் போட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் வாழைத்தண்டைப் பரப்பி, அதன் மீது பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி தூவி பரிமாறவும்.
வாழைத்தண்டை விரும்பாதவர்களும் இதை ருசித்துச் சாப்பிடுவார்கள்.
- ஜி.ராணி, மாதவரம்
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து சமைத்து வழங்கியிருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்