Published:Updated:

ஸ்வீட்டாலஜி பாக்க வாரீயளா!

மாடல்: சிந்தியாதொகுப்பு: இந்துலேகா.சி, படங்கள்: தி.ஹரிஹரன்

ஸ்வீட்டாலஜி பாக்க வாரீயளா!

மாடல்: சிந்தியாதொகுப்பு: இந்துலேகா.சி, படங்கள்: தி.ஹரிஹரன்

Published:Updated:

ஸ்வீட் பிரியரா நீங்க? இந்த லிஸ்ட்ல உங்களுக்குப் பிடிச்ச ஸ்வீட் எதுனு டிக் பண்ணிட்டு, கீழுள்ள  பக்கத்துக்கு வாங்க! 'ஸ்வீட் அஸ்ட்ராலஜி’ மூலமா நீங்க யாருனு நாங்க சொல்றோம்!

• பால்கோவா

•  லட்டு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•  ஜிலேபி

•  அல்வா

• அதிரசம்

•  சோன்பப்டி

ஸ்வீட்டாலஜி பாக்க வாரீயளா!

உங்களுக்குப் பிடிச்ச ஸ்வீட் எது? அந்தந்த ஸ்வீட் விரும்பிகளுக்கான குணநலன்கள் இதோ....

லட்டு

பூந்திகளோட கூட்டு சேர்ந்து ஸ்ட்ராங்கா இருக்கும் லட்டு போல, ஃப்ரெண்ட்ஸுடன் ரொம்ப பிணைப்பா இருப்பீங்க. ஆனா, லட்டு தலையில ஒரு தட்டு தட்டினா பூந்தியெல்லாம் சிதறி ஓடுற மாதிரி, சமயத்துல காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு கொடுத்து தேடற அளவுக்கு, ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் விட்டுட்டு எஸ்கேப் ஆயிடுவீங்க. ஏன்னா, தனிமையை விரும்புறது உங்க பிறவிக் குணம். கண்ணை உறுத்தாத உடை அலங்காரம், பாரம்பர்யம்னு நீங்க பக்கா கலாசார விரும்பி. லேட்டஸ்ட்டா எவ்ளோ ஸ்வீட்ஸ் வந்தாலும், அந்தக்கால பெருசுல இருந்து நேத்து மழையில மொளச்ச காளான் வரைக்கும் எல்லாருக்கும் பிடிச்ச லட்டு மாதிரியே, உங்களையும் எப்பவும் எல்லாருக்கும் பிடிக்கும்!

ஸ்வீட்டாலஜி பாக்க வாரீயளா!

ஜிலேபி

உங்ககூட பழகுறது அவ்ளோ சுலபம் இல்ல. ஏன்னா, உங்களைப் பார்த்தா, இவங்க கொஞ்சம் சிக்கலானவங்களோன்னு யோசிக்கத் தோணும். பழகிப் பார்த்தவங்களுக்குதான் தெரியும்... நீங்க எவ்வளவு இனிப்பானவங்கனு! புடவையில பாந்தமாவும், ஜீன்ஸ்ல மாடர்னாவும் 'சந்திரமுகி’ ஜோதிகா கணக்கா... வெயிட் வெயிட்... தப்பா எடுத்துக்காதீங்க, டபுள் ஸ்டைல்லயும் கலந்துகட்டி கலக்குவீங்கனு அர்த்தம். ஜிலேபிதான் வழவழ கொழகொழ... ஆனா, நீங்க அப்படி இல்ல. சூடான ஜிலேபி மாதிரி ரொம்ப கிரிஸ்பா, எதையும் ஸ்டெரெயிட்டா பேசிடுவீங்க!

அதிரசம்

இந்த குடும்பக் குத்துவிளக்குனு சொல்லுவாங்களே... அது சாட்சாத் நீங்கதான். ஒரு கடை கண்ணிக்கோ, பார்க் பீச்சுக்கோ, கோயில் சினிமாவுக்கோ எதுவா இருந்தாலும் குடும்பத்தோடதான். சரியான வீட்டுப் பறவை. நட்பு வட்டம் ரொம்ப சிறுசுதான். ஆனா, ஆழம் அதிகம். பழகிப் பார்த்தா பச்சக் கொழந்தை... அதுதான் உங்க மனசு. விட்டுக்கொடுத்துப் போறதுதான் வாழ்க்கைங்கிறதுல நம்பிக்கை அதிகம். எப்பவுமே அழகா டிரெஸ் பண்ணி அம்சமா இருப்பீங்க. உங்ககூட பழகுறவங்கள்ல யாரை எந்த எடத்துல வெக்கணும்னு தெளிவா இருப்பீங்க. ஒரு டீச்சர் வேலைக்கான அத்தனை தகுதியும் திறமையும் உங்ககிட்ட இருக்கும்!

ஸ்வீட்டாலஜி பாக்க வாரீயளா!

சோன்பப்டி

சோன்பப்டி மாதிரியே பஞ்சு மனசுக்காரங்க நீங்க. எந்த சபைக்குப் போனாலும் பளிச்சுனு தனியா தெரியுற அளவுக்கு உங்களுக்குனு ஒரு தனித்துவம் இருக்கும். நீங்க எது செய்தாலும் புதுமையா இருக்கும். உலகத்தையே மறக்கற அளவுக்கு எந்நேரமும், ஏதாச்சும் யோசனை பண்ணிட்டே இருப்பீங்க. அதேசமயம் உங்களுக்குப் பிடிச்சவங்களோட இருந்தீங்கனா அப்படியே  ஜாலிவாலியா மாறிடுவீங்க. எப்பவும் மாடர்ன் டிரெஸ்ஸுக்குதான் உங்க ஓட்டு. சீனியர், ஜூனியர், ஏழை, பணக்காரன் வித்தியாசமெல்லாம் உங்களுக்கு இல்ல. முன்ன விட்டு பின்ன பேச மாட்டீங்க. யாருக்கும் முகத்துக்கு நேரா தரும் 'பளிச் பளிச்’ பதில், உங்க ஸ்பெஷல்!

பால்கோவா

டிரெடிஷனல், மாடர்ன் ரெண்டையும் மிக்ஸ் பண்ணின ஸ்டைல்ல டிரெஸ் பண்ணும் நீங்க, ஒரு நேச்சுரல் பியூட்டி. ஒரு வேலையை எடுத்துக்கிட்டா அதை நேர்த்தியா முடிக்கிறதுல உங்களை யாரும் அடிச்சுக்கவே முடியாது. என்னதான் இருந்தாலும் திரிஞ்ச பால்ல செஞ்சதுதானே பால்கோவானு சொல்ற மாதிரி, சிலசமயங்கள்ல சொதப்பல் வேலை செஞ்சு மாட்டிட்டு முழிப்பீங்க. இன்னொரு பக்கம், பால்வடியும் மொகத்தை வெச்சுக்கிட்டு பக்காவா பிளான் பண்ணி ஒவ்வொரு விஷயத்தையும் உங்களுக்கு சாதகமா மாத்திக்கிற அளவுக்கு ஜெகஜ்ஜால கில்லாடி நீங்க. எப்பவும் முகத்துல ஒரு புன்சிரிப்பை தவழவிட்டுக்கிட்டே எதிரியைக்கூட எகிற வெச்சுடுவீங்க!

அல்வா

புகழ்ச்சிக்கு எல்லோரும் அடிமைனு சொன்னா... நீங்க கிட்டத்தட்ட கொத்தடிமை. அதனாலேயே உங்ககிட்ட நெருங்கிப் பழகுறவங்ககூட, உங்களை நம்ப வெச்சு கடைசியில அல்வா கொடுத்துட்டுப் போயிடுவாங்க. சரி விடுங்க... எவ்ளோ பட்டாலும், கூடவே பொறந்த குணத்தை மாத்த முடியாது. ஆனா ஒண்ணுங்க... பல பேர்கிட்ட அல்வா வாங்கினாலும், பைசா விஷயத்துல சும்மா கில்லி மாதிரி கறாரா இருப்பீங்க. சந்தோஷமோ, கஷ்டமோ... எதையும் அலட்டிக்காம எதிர்கொள்வீங்க. ஆடை விஷயத்துல கைக்கு கிடைக்கிறதை எடுத்து மாட்டிக்கிட்டு, 'விடு ஜூட்’னு போயிடுவீங்க. உங்களோட ப்ளஸும், மைனஸும்... உங்க இளகிய மனசுதான்!

ஸ்வீட்டாலஜி பாக்க வாரீயளா!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism