ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ரவாபூரி பாயசம்
தேவையானவை: பேணி ரவை - அரை கப், சர்க்கரை - ஒரு கப், பால் - அரை லிட்டர், நெய் - பொரிக்கத் தேவையான அளவு, குங்குமப்பூ - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - 6.

செய்முறை: பேணி ரவையை சிறிதளவு நீர் தெளித்துப் பிசைந்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, மீண்டும் அடித்துப் பிசைந்து, சிறு சிறு மெல்லிய அப்பளங்கள் போல இட்டு, ஈரம் போக உலரவிட்டு, நெய்யில் பொரித்தெடுக்கவும் (அடுப்பை சிறு தீயில் வைத்து பொரிக்கவும்). பாலைக் காய்ச்சி, அதில் பொரித்து வைத்தவற்றை நொறுக்கிப் போட்டு வேகவைக்கவும். அதனுடன் சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து, எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்கி வைக்கவும்.
பேணி ரவை இல்லாவிட்டால், சாதாரண ரவையிலும் தயாரிக்கலாம்.
- ஆர்.பத்மப்ரியா, திருச்சி
ஆப்பிள் - பப்பாளி அல்வா
தேவையானவை: பப்பாளிக்காய் (துருவியது), ஆப்பிள் (துருவியது), - தலா அரை கப், பால் - அரை கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - அரை கப், முந்திரி, திராட்சை - சிறிதளவு, விரும்பிய எசன்ஸ் (பாதாம், வெனிலா, ரோஸ்) - சிறிதளவு.

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு... பப்பாளி, ஆப்பிள் துருவல்களைப் போட்டுக் கிளறவும். பிறகு, பாலை சேர்த்து வேகவிட்டு, சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். அனைத்தும் நன்றாக கலந்த பிறகு, நெய் விட்டுக் கிளறி, கலவை சுருண்டு, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் சமயம், எசன்ஸ் சேர்த்துக் கலந்து இறக்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, அல்வாவின் மீது பரவலாகத் தூவி அலங்கரிக் கவும்.
விருப்பப்பட்டால், சிறிதளவு ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம்.
- அனுராதா மணிவண்ணன், கோயம்புத்தூர்