Published:Updated:

பிரெட் - பனீர் ரோல் | பிரெட் பீட்சா | பிரெட் குலாப் ஜாமூன் - பிரெட் ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

வீக் எண்ட் ரெசிப்பீஸ்
News
வீக் எண்ட் ரெசிப்பீஸ்

பிரெட் நோயாளிகளின் உணவு என்பது சிலரின் எண்ணம். சாண்ட்விச், பிரெட் ரோல் என சமீப காலங்களில்தான் அதன் மகத்துவம் பலருக்கும் புரிய ஆரம்பித்திருக்கிறது. இந்த வார வீக் எண்டை கொஞ்சம் சிம்பிளாக, அதே நேரம் சுவையாக பிரெட் சமையலில் என்ஜாய் செய்யலாமா?

பிரெட், நோயாளிகளின் உணவு என்பது சிலரின் எண்ணம். சாண்ட்விச், பிரெட் ரோல் என சமீப காலங்களில்தான் அதன் மகத்துவம் பலருக்கும் புரிய ஆரம்பித்திருக்கிறது. இந்த வார வீக் எண்டை கொஞ்சம் சிம்பிளாக, அதே நேரம் சுவையாக பிரெட் சமையலில் என்ஜாய் செய்யலாமா?

பிரெட் - பனீர் ரோல்

தேவையானவை:

பிரெட் ஸ்லைஸ் - 6
பனீர் - 100 கிராம் (துருவவும்)
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிரெட் - பனீர் ரோல்
பிரெட் - பனீர் ரோல்

செய்முறை:

பனீர் துருவலுடன் வெங்காயம், சில்லி ஃப்ளேக்ஸ், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை வெட்டி எடுத்துவிட்டு, தண்ணீரில் முக்கி எடுத்து ஓர் உள்ளங்கையில் வைத்து, மற்றோர் உள்ளங்கையால் அழுத்தித் தண்ணீரைப் பிழிந்து எடுக்கவும். அதன்மீது பனீர் கலவையைப் பரப்பி பாய் போல சுருட்டவும். தோசைக்கல்லைக் காயவைத்து எண்ணெய்விட்டு பிரெட் ரோல்களை வைத்துப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

குறிப்பு:

எண்ணெயிலும் பொரித்தெடுக்கலாம். சில்லி ஃப்ளேக்ஸுக்குப் பதிலாகப் பச்சை மிளகாயும் சேர்க்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
பிரெட் பீட்சா

தேவையானவை:

கிரீன் சட்னி செய்ய:

புதினா, கொத்தமல்லித்தழை - தலா ஒரு கப்
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

பீட்சா செய்ய:

பிரெட் ஸ்லைஸ் - 4
கிரீன் சட்னி - ஒரு கப்
குடமிளகாய் (மஞ்சள், சிவப்பு) - தலா அரை கப் (பொடியாக நறுக்கியது)
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
மொஸரெல்லா சீஸ் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
ஓரிகானோ - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

பிரெட் பீட்சா
பிரெட் பீட்சா

செய்முறை:

கிரீன் சட்னி செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து அரைத்து எடுக்கவும். பிரெட் ஸ்லைஸ்களின் மீது கிரீன் சட்னியைத் தடவவும். அதன் மேல் குடமிளகாய் கலவையைப் பரப்பவும். அதன் மேலே சீஸ் துருவல், ஓரிகானோ, உப்பு, மிளகுத்தூளைத் தூவவும். பிறகு இதை மைக்ரோவேவ் அவனில் மீடியம் பவரில் ஐந்து நிமிடங்கள் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு:

கிரீன் சட்னிக்குப் பதிலாகத் தக்காளி சாஸ் பயன்படுத்தலாம். விரும்பினால் காரத்துக்கு சில்லி ஃப்ளேக்ஸ் சேர்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரெட் உப்புமா

தேவையானவை:

பிரெட் ஸ்லைஸ் - 6 (சிறிய துண்டுகளாக்கவும்)
பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
தோல் சீவிய இஞ்சி - ஒரு இஞ்ச் அளவு (பொடியாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

பிரெட் உப்புமா
பிரெட் உப்புமா

செய்முறை:

வாணலியில் நெய்விட்டு பிரெட் துண்டுகளை வறுத்து எடுக்கவும். பிறகு, அதே வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, கால் கப் தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். பச்சைவாசனை போனபிறகு வறுத்த பிரெட் துண்டுகளைச் சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லித்தழைத் தூவி இறக்கவும்.

குறிப்பு:

கேரட், குடமிளகாய், வேகவைத்த பச்சைப் பட்டாணி சேர்த்தும் செய்யலாம்

பிரெட் குலாப் ஜாமூன்

தேவையானவை - ஜாமூன் செய்ய:

பிரெட் ஸ்லைஸ் - 4 (ஓரங்களை நீக்கவும்)
காய்ச்சி ஆறவைத்த பால் - 4 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

சர்க்கரைப் பாகு செய்ய:

சர்க்கரை, தண்ணீர் - தலா அரை கப்
ஏலக்காய்த்தூள், ரோஸ் எசென்ஸ் - தலா கால் டீஸ்பூன்

பிரெட் குலாப் ஜாமூன்
பிரெட் குலாப் ஜாமூன்

செய்முறை:

பிரெட் ஸ்லைஸ்களை பாலில் முக்கி எடுத்துப் பிழியவும். பிறகு, மிருதுவாகப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். சர்க்கரையுடன் தண்ணீர், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்து பிசுக்கு பதத்தில் பாகு வந்தவுடன் இறக்கி, ரோஸ் எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும் வாணலியில் நெய்யுடன் எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி, பிரெட் உருண்டைகளைச் சேர்த்துப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சிறிது நேரம் கழித்து, சர்க்கரைப் பாகில் போட்டு ஊறவிடவும். இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு பரிமாறவும்.

குறிப்பு:

ஜாமூன்களைச் சிறு தீயில் பொரித்தெடுக்கவும். அழுத்திப் பிசையாமல் மாவை மிருதுவாகப் பிசைய வேண்டும். அழுத்திப் பிசைந்தால் ஜாமூன் கல் போல ஆகிவிடும்.

பிரெட் அல்வா

தேவையானவை:

ஸ்வீட் பிரெட் - 6 ஸ்லைஸ் (சிறிய துண்டுகளாக்கவும்)
சர்க்கரை - அரை கப்
காய்ச்சி ஆறவைத்த பால் - 2 கப்
நெய் - 6 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
முந்திரி - 10
உலர்திராட்சை - 10

பிரெட் அல்வா
பிரெட் அல்வா

செய்முறை:

வாணலியில் சிறிதளவு நெய்விட்டு சூடாக்கி முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துத் தனியாக வைக்கவும். அதே நெய்யில் பிரெட் துண்டுகளைச் சேர்த்துக் கருகாமல் வறுக்கவும். அதனுடன் பாலை ஊற்றி நன்றாகக் கலந்து வேகவிடவும். பிறகு, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். நடு நடுவே நெய் சேர்த்துக் கிளறவும். கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் நெய் பிரிந்து வரும்போது ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கவும்.