பத்துநாள்களுக்கு முன்புவரை 'அடிக்குது குளிரு' என நடுங்கிக்கொண்டிருந்தோம். இப்போது சுளீர் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. வெயிலுக்கு இதமாகவும், அதே நேரம் வயிற்றுக்கு குளுமையாகவும் வீக் எண்டை வித்தியாசப்படுத்த ஸ்பெஷல் ரெசிப்பீஸ் இங்கே...
தேவையானவை:
* நன்கு கனிந்த பட்டர் ஃப்ரூட் (அவகாடோ) - 2
* கெட்டியான பாதாம் மில்க் - அரை கப்
* கோகோ பவுடர் - அரை கப்
* துருவிய டார்க் சாக்லேட் - கால் கப்
* நாட்டுச் சர்க்கரை - அரை கப்
அலங்கரிக்க:
சாக்கோ சிப்ஸ், பழத்துண்டுகள், வீட்டிலேயே செய்த கோதுமை வேஃபல், ஐஸ்க்ரீம் - தேவைக்கேற்ப

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செய்முறை:
அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பிளெண்டரில் போட்டு நான்கு நிமிடங்களுக்கு அடிக்கவும். குளிரவைத்து, அழகான டம்ளர்களில் ஊற்றி, அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களில் உங்களுக்கு விருப்பமானவற்றைத் தூவிப் பரிமாறவும்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதேவையானவை:
* பச்சை வேர்க்கடலை (தோலுடன்) - 100 கிராம்
* பேரீச்சம்பழம் - 3 (கொட்டை நீக்கவும்)
* வாழைப்பழம் - 2
* தண்ணீர் - 2 கப்
* லவங்கப்பட்டைத்தூள் - அரை சிட்டிகை

செய்முறை:
வேர்க்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலை, ஊறவைத்த வேர்க்கடலையுடன் மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டிப் பரிமாறவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தேவையானவை:
* கெட்டியான தேங்காய்ப்பால் - ஒரு கப் (கடைகளிலும் ரெடிமேடாகக் கிடைக்கிறது)
* வறுத்த பிஸ்தா - 150 கிராம்
* நாட்டுச் சர்க்கரை - ஒரு கப்
* ஃபிரஷ்ஷான ஸ்ட்ராபெர்ரி - ஒரு கப்

செய்முறை:
ஸ்ட்ராபெர்ரி தவிர மற்ற பொருள்களை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். இதை ஒரு மணி நேரம் குளிரவைக்கவும். ஸ்ட்ரா பெர்ரியை அதில் டிப் செய்து சாப்பிடும்படி இரண்டையும் ஒன்றாகப் பரிமாறவும்.
தேவையானவை:
* சோயா மில்க் - 2 கப் (கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கும்)
* தேன் அல்லது பனங்கற்கண்டு - 2 டேபிள்ஸ்பூன்
* மஞ்சள்சாறு (பசுமஞ்சளை அரைத்து சாறு எடுக்கவும்) - 2 டீஸ்பூன்
* இஞ்சிச்சாறு - ஒரு டீஸ்பூன்
* ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
* மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:
சோயா மில்க்கை வெதுவெதுப்பாகச் சூடாக்கவும். அதில் மற்ற பொருள்களைச் சேர்த்து 5 நிமிடங்களுக்கு மூடிவைக்கவும். பிறகு வடிகட்டவும். இத்துடன், வீட்டிலேயே தயார் செய்த சாக்கோ வால்நட் குக்கீஸைப் பரிமாறலாம்.