Published:Updated:

சமையல் சந்தேகங்கள் 35 - வாயில் கரையும் மைசூர்பாகு... சாஃப்ட் பனீர்... முட்டையில்லாத பான் கேக்....

தேங்காய் துருவல்
பிரீமியம் ஸ்டோரி
தேங்காய் துருவல்

சமையல் சந்தேகங்களுக்கு பதில் சொல்கிறார் செஃப் சித்தார்த் | எஸ்.சித்ரா

சமையல் சந்தேகங்களுக்கு பதில் சொல்கிறார் செஃப் சித்தார்த்

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சமையல் சந்தேகங்கள் 35 - வாயில் கரையும் மைசூர்பாகு... சாஃப்ட் பனீர்... முட்டையில்லாத பான் கேக்....

பனீர் வைத்து கிரேவி செய்யும்போது நேரம் ஆக ஆக, பனீர் துண்டுகள் கடினமாக ஆகிவிடுகின்றன. பனீர் துண்டுகள் சாஃப்டாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

- கனகசபாபதி, செங்கோட்டை

பனீர் துண்டுகளைப் பொரித்து எடுத்தாலும் அல்லது பானில் டாஸ் செய்தாலும் ஒரு பாத்திரத்தில் இளம்சூடான நீரில் சிறிது உப்பு கலந்து, பொரித்த பனீர் துண்டுகளை அதில் ஊறவைக்கவும். பனீர் இளம் சூடான நீரில் ஊறும் போது சாஃப்ட்டாக மாறிவிடும். அடுத்த முறை கிரேவி செய்யும்போது இதுபோல செய்து பாருங்கள்.

சமையல் சந்தேகங்கள் 35 - வாயில் கரையும் மைசூர்பாகு... சாஃப்ட் பனீர்... முட்டையில்லாத பான் கேக்....

சர்க்கரைவள்ளிக்கிழங்கை வைத்து எந்த வகையான உணவுகள் செய்யலாம்?

- வே.தேவஜோதி, மதுரை-17

சர்க்கரைவள்ளிக்கிழங்கில் பணியாரம், சுழியம், போளி, கட்லெட், வறுவல், புட்டு மற்றும் பாயசம் போன்ற விதம்விதமான உணவுகளைத் தயார் செய்யலாம். ஆலு பராத்தா செய்வதுபோல உருளைக்கிழங்குக்கு பதிலாக சர்க்கரைவள்ளிக்கிழங்கை நன்றாக வேகவைத்து மசித்து மசாலா சேர்த்து பூரணமாகச் செய்து சர்க்கரைவள்ளிக்கிழங்கு பராத்தா செய்யலாம்.

சமையல் சந்தேகங்கள் 35 - வாயில் கரையும் மைசூர்பாகு... சாஃப்ட் பனீர்... முட்டையில்லாத பான் கேக்....

வீட்டில் குழம்பு மிளகாய்த்தூள் தயாரிக்கும்போது காஷ்மீர் மிளகாயைப் பயன்படுத்தலாமா? இதனால் டேஸ்ட் மாறி விடுமா?

- மகாலெட்சுமி, காரைக்கால்

காஷ்மீர் மிளகாயை தாராளமாகப் பயன்படுத்தலாம். உணவுகளில் அதன் நிறத்தை அழகாக எடுத்துக்காட்டுமே தவிர, மற்றபடி இதனால் சுவை குறையாது. நன்றாகவே இருக்கும்.

சமையல் சந்தேகங்கள் 35 - வாயில் கரையும் மைசூர்பாகு... சாஃப்ட் பனீர்... முட்டையில்லாத பான் கேக்....

முட்டை சேர்க்காமல் பான் கேக் (Pan Cake) செய்ய லாமா... முட்டைக்கு பதிலாக என்ன சேர்க்க வேண்டும்?

- மகேஷ்வரி, தஞ்சாவூர்

முட்டை சேர்க்காமல் பான் கேக் செய்வது மிகவும் எளிது. மைதா மாவு, பேக்கிங் பவுடர், சிறிது வினிகர் மற்றும் வெண்ணெய் சேர்த்துக் கலந்து சர்க்கரை அல்லது தேன் கலந்து முட்டைக்கு பதிலாக பால் அல்லது தயிர் சேர்த்து பான் கேக் செய்யலாம்.

சமையல் சந்தேகங்கள் 35 - வாயில் கரையும் மைசூர்பாகு... சாஃப்ட் பனீர்... முட்டையில்லாத பான் கேக்....

கடைகளில் இருப்பது போல சாஃப்டாக மைசூர்பாகு செய்யும் முறை பற்றிச் சொல்லுங்கள். மைசூர்பாகு செய்யும்போது சர்க்கரைப் பாகு எந்தப் பதத்தில் இருக்க வேண்டும்?

- நிர்மலா ராவ், சென்னை-73

கடைகளில் இருப்பது போன்று மைசூர்பாகு தயார் செய்ய சர்க்கரைப் பாகின் பதம் மிகவும் முக்கியம். ஒரு கம்பிப் பதத்துக்கு முன்னதாகவே மாவைக் கொட்டிக் கிளற வேண்டும். ஒரு பங்கு மாவுக்கு இரண்டு பங்கு சர்க்கரை, இரண்டு பங்கு நெய் என்ற அளவில் மைசூர்பாகு தயாரிக்க வேண்டும். சர்க்கரைப் பாகில் மாவைக் கொட்டி கிளறும்போது நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக விட வேண்டும். நன்றாகக் கிளறி இறக்கி பெரிய தாம்பாளத்தில் கொட்டி வைக்க வேண்டும். மைசூர்பாகு தயாரிப்பதற்கு அடிப்பகுதி கனமாக உள்ள வாணலியைத்தான் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் சூட்டின் தன்மை சீராக இருக்கும். சர்க்கரைப் பாகு காய்ச்சும்போது ஒரு டீஸ்பூன் அளவு பால் சேர்த்தால் சர்க்கரையில் இருக்கும் கசடு மிதந்து மேலே வரும். சிறிய ஸ்பூனால் அதை எடுத்து விடலாம். வாயில் கரையும்படியான மிருதுவான மைசூர்பாகு வேண்டும் என்று நினைத்தால் அரைக்கம்பிப் பதம் போதுமானது.

சமையல் சந்தேகங்கள் 35 - வாயில் கரையும் மைசூர்பாகு... சாஃப்ட் பனீர்... முட்டையில்லாத பான் கேக்....

இனிப்பு வகைகளுக்கு தேவைப்படும் டெசிக்கேட்டடு தேங்காய்த்துருவலை வீட்டிலேயே செய்ய முடியுமா?

- செல்வி சண்மதி, நாகர்கோவில்

தேங்காயில் இருக்கும் வெள்ளைநிற பகுதியைத் துருவி சிறிது நேரம் வெயிலில் காயவைத்து கடாயில் மிதமான சூட்டில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். குழந்தைகள் விரும்பும் தேங்காய் லட்டு, டிரை ஃப்ரூட்ஸ் லட்டு, சோமாஸ் போன்ற இனிப்பு வகைகளுக்கு உபயோகப்படுத்தலாம். கொப்பரைத் தேங்காயைத் துருவி லேசாக வறுத்து அதையும் இனிப்பு வகைகளுக்குச் சேர்த்துக் கொள்ளலாம்.