Published:Updated:

சமையல் சந்தேகங்கள் - 37 - கடை சுவையில் காஜு கத்லி... பிசுபிசுக்காத பயறு... ஒட்டாத பாஸ்தா...

செஃப் திவாகர்
பிரீமியம் ஸ்டோரி
செஃப் திவாகர்

சமையல் சந்தேகங்களுக்கு பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த செஃப் திவாகர்

சமையல் சந்தேகங்கள் - 37 - கடை சுவையில் காஜு கத்லி... பிசுபிசுக்காத பயறு... ஒட்டாத பாஸ்தா...

சமையல் சந்தேகங்களுக்கு பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த செஃப் திவாகர்

Published:Updated:
செஃப் திவாகர்
பிரீமியம் ஸ்டோரி
செஃப் திவாகர்
செஃப் திவாகர்
செஃப் திவாகர்

- எஸ்.சித்ரா

வீட்டில் காஜு கத்லி செய்யும்போது முந்திரிப்பருப்பை எந்தப் பதத்தில் பொடிக்க வேண்டும், எந்த அளவு சர்க்கரை சேர்க்க வேண்டும்?

- செல்வி இளங்கோ, திருச்சி- 4

250 கிராம் முந்திரிப்பருப்பை மிக்ஸி ஜாரில் நைசாகப் பொடித்துக்கொள்ளவும். 200 கிராம் சர்க்கரையை ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைக்கவும். ஒரு கம்பிப் பதம் வந்ததும் பொடித்த முந்திரியைச் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கிளறவும். பின்னர் சிறிது ஏலக்காய்த்தூள் சேர்த்து மிதமான சூட்டில் கைவிடாமல் கிளறி கெட்டியாகும் போது கலவையை உருட்டிப் பார்க்கவும். விரல்களில் ஒட்டாமல் வருவதுதான் சரியான பதம். பிறகு இறக்கி நெய் தடவிய பட்டர் பேப்பரில் கலவையைக் கொட்டி லேசான சூட்டில் சப்பாத்தி மாவு போல் பிசைந்து மெல்லியதாகத் தேய்த்து, விருப்பமான வடிவில் வெட்டவும். காஜு கத்லிக்கு முக்கியமானது ஒரு கம்பிப்பதம். சரியான பதம் வந்ததும் முந்திரியைச் சேர்த்தால், கடைகளில் கிடைக்கும் வகையில் மிருதுவான காஜு கத்லியை வீட்டிலேயே செய்யலாம்.

சமையல் சந்தேகங்கள் - 37 - கடை சுவையில் காஜு கத்லி... பிசுபிசுக்காத பயறு... ஒட்டாத பாஸ்தா...

புரொக்கோலியை வேகவைத்துச் சமைக்கும்போது எத்தனை நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்?

- விக்னேஷ், பெங்களூரு-3

பொதுவாக புரொக்கோலியைத் தனியாக வேகவைத்து, பிறகு தேவையான உணவு வகையில் சேர்த்தால் சத்து குறையாது, குழைந்தும் போகாது. கொதிக்கும் நீரில் சிறிதளவு உப்பு, சர்க்கரை சேர்த்து சிறு சிறு பூக்களாகப் பிரித்து நறுக்கிய புரொக்கோலியைச் சேர்த்து ஆறு முதல் எட்டு நிமிடங்கள் போட்டு எடுத்து தண்ணீரை வடிகட்டிப் பயன்படுத்தவும். அதிக நேரம் கொதிக்கும் நீரில் இருந்தால் அதன் சுவையும் சத்துகளும் குறைந்துவிடும்.

சமையல் சந்தேகங்கள் - 37 - கடை சுவையில் காஜு கத்லி... பிசுபிசுக்காத பயறு... ஒட்டாத பாஸ்தா...

வீட்டில் பயறு அல்லது வெந்தயத்தை முளைக் கட்டும்போது பிசுபிசுப்புத்தன்மை வந்துவிடுகிறது. இதற்கு காரணம் என்ன? தண்ணீரில் எவ்வளவு நேரம் ஊறவைத்த பிறகு முளைக்கட்ட வைக்க வேண்டும்?

- அனிதா செந்தில், காஞ்சிபுரம்

எந்தப் பயறாக இருந்தாலும் நன்கு கழுவிய பின் அதை தேவையான அளவு தண்ணீர்விட்டு நான்கு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். பின்னர் தண்ணீரை முழுவதும் வடிகட்டி ஒரு துணியில் கட்டி, காற்றே போகாமல் வைத்தால் ஐந்து மணி நேரத்தில் முளைக்கட்ட ஆரம்பித்துவிடும். தண்ணீர் இருந்தால் சீக்கிரம் கெட்டுப் போக ஆரம்பிக்கும். பிசுபிசுப்புத் தன்மையும் வந்து விடும்.

பாஸ்தா வேகவைப்பதற்கு சரியான முறை என்ன? ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் வர என்ன செய்ய வேண்டும்?

- விஷாலி பாலா, சங்கரன்கோவில்

ஒரு பங்கு பாஸ்தாவுக்கு பத்து பங்கு தண்ணீர் வைக்க வேண்டும். உதாரணத்துக்கு 250 கிராம் பாஸ்தாவுக்கு 2.5 லிட்டர் தண்ணீர் தேவை. அகலமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்ததும் உப்பு சேர்த்து பாஸ்தாவையும் சேர்த்து ஏழு முதல் ஒன்பது நிமிடங்கள் வேகவிடவும். வேகும்போது நடு நடுவே கிளறிவிடலாம். பாஸ்தாவின் அளவைப் பொறுத்து நேரம் சிறிது மாறுபடும். பாஸ்தா வெந்ததும் தண் ணீரை வடிகட்டி ஒரு தட்டில் மாற்றி சிறிது எண்ணெய் விட்டு கிளறி ஆறவைத்துக் கொண்டால் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.

சமையல் சந்தேகங்கள் - 37 - கடை சுவையில் காஜு கத்லி... பிசுபிசுக்காத பயறு... ஒட்டாத பாஸ்தா...

பாஸ்தா வகைகளுக்கு பார்மேசன் சீஸ் (Parmesan Cheese) சேர்த்தால்தான் சுவையாக இருக்குமா? அதற்கு பதிலாக வேறு எந்த வகை சீஸ் சேர்த்துச் செய்யலாம்?

- கல்யாணி, தூத்துக்குடி

பார்மேசன் சீஸ் வைத்துச் செய்யும்போது ஒரிஜினல் இத்தாலியன் பாஸ்தா போன்ற சுவை கிடைக்கும் என்பதால் அதையே பலரும் பயன்படுத்துகிறார்கள். அதற்கு பதிலாக செடார் சீஸ் (Cheddar Cheese) போன்ற சீஸ் வகைகளையும் பயன்படுத்தலாம். அதேபோல் ஆலிவ் ஆயிலுக்கு மாற்றாக ரீஃபைண்டு ஆயில் பயன்படுத்தியும் பாஸ்தா செய்யலாம்.