ஆசிரியர் பக்கம்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

சமையல் சந்தேகங்கள் - 38 - அதிரசம், மைசூர்பாகு, லட்டு, தட்டை, தேன்குழல்...

தட்டை
பிரீமியம் ஸ்டோரி
News
தட்டை

- எஸ்.சித்ரா

மெனுராணி செல்லம்
மெனுராணி செல்லம்

பக்குவமாக பதம் மாறாமல் அதிரசம் செய்வது எப்படி?

- செல்வி நேத்ரா, சென்னை-117

மாவு பச்சரிசியை கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து துணியில் பரப்பி, காயவைத்து லேசான ஈரம் இருக்கும்போதே ரொம்ப நைசாகவும் இல்லாமல் ரொம்ப கொரகொரப்பாகவும் இல்லாமல் அரைத்து சலித்துக்கொள்ள வேண்டும். அதிரச மாவை கண்டிப்பாக இரண்டு, மூன்று நாள்களுக்கு முன்பே தயார் செய்ய வேண்டும். அதிரச மாவு ஊற ஊறத்தான் மெலிதாகவும் மென்மையாகவும் வரும்.

சமையல் சந்தேகங்கள் - 38 - அதிரசம், மைசூர்பாகு, லட்டு, தட்டை, தேன்குழல்...

அதிரச மாவை கலந்த பின் காற்றுப்புகாத எவர்சில்வர் டப்பாவில் குறைந்தது இரண்டு நாள்கள் வைக்கவும். ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. ரெடிமேடு அரிசி மாவை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது. அரிசி மாவுக்கு சம அளவு பாகு வெல்லம் எடுத்துக்கொள்ள வேண்டும். வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து, கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லத்தை மீண்டும் கொதிக்க வைத்து கம்பிப் பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். பின்பு மாவு வைத்திருக்கும் பாத்திரத்தில் சிறிது சிறிதாக பாகைச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறினால் அதிரச மாவு ரெடி.

வாழையிலையில் சிறிது நெய் தடவி மாவை சிறிது சிறிதாக வட்ட மாகத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். ரெடிமேடு அரிசி மாவில் செய்வதும், அதிரச மாவை தயார் செய்தவுடன் அதிரசம் பொரித் தெடுப்பதும் அதிரசத்தைக் கெட்டி யாக மாற்றிவிடும்.

சமையல் சந்தேகங்கள் - 38 - அதிரசம், மைசூர்பாகு, லட்டு, தட்டை, தேன்குழல்...

லட்டு செய்யும்போது பூந்தியை மிக்ஸியில் லேசாக உதிர்த்துவிட்டுச் செய்யலாமா அல்லது பூந்தியை அப்படியே வைத்து லட்டு செய்யலாமா?

- ஆனந்தி சிவகுமார், திருச்சி-3

பூந்தியை மிக்ஸியில் போட்டு உதிர்த்துச் செய்தால் தூள் தூளாகிவிடும். பூந்தி தனித்தனியாக இருந்தால் தான் பார்க்கவும் அழகாக இருக்கும், சுவையும் நன்றாக இருக்கும். மிக்ஸியில் பொடித்து சர்க்கரைப் பாகில் கலக்கும்போது பிசுபிசுப்பாகி லட்டு பிடிப்ப தற்கும் சரியாக வராது.

தட்டை
தட்டை

புழுங்கல் அரிசியை ஊறவைத்து கிரைண்டரில் அரைத்து தட்டை செய்யும்போது தட்டுவதற்குச் சிரமமாக உள்ளது. இதற்குத் தீர்வு என்ன?

- கல்யாணி, கடையம்

புழுங்கல் அரிசியை நன்கு கழுவி சுமார் மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு கிரைண்டரில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். அத்துடன் ஊறவைத்த கடலைப் பருப்பு, எள், கறிவேப்பிலை, பெருங் காயம், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதை சிறு சிறு உருண்டைகளாக்கவும். நீரை நன்கு உறிஞ்சும் சுத்தமான வெள்ளைத் துணியில் தட்டவும். அதில் ஒரு டூத் பிக் வைத்து சின்னச் சின்ன ஓட்டைகள் போட்டுக் கொள்ளவும். வெள்ளைத் துணியில் தட்டும்போது மாவில் இருக்கும் ஈரத்தன்மை குறைந்து பொரிக்கும்போது மொறுமொறுப்பாக இருக்கும். துணியில் தட்டிய பின்பு அதிக நேரம் வைத்திருந்தாலும் எடுக்கும்போது பிரிந்துவிடும். எனவே, உடனடியாக பொரித்துவிட வேண்டும்.

சமையல் சந்தேகங்கள் - 38 - அதிரசம், மைசூர்பாகு, லட்டு, தட்டை, தேன்குழல்...

வீட்டிலேயே சுலபமாக தீபாவளி லேகியம் செய்வது எப்படி?

- குமாரி கற்பகம், கோயம்புத்தூர் - 1

100 கிராம் இஞ்சியை தோல் சீவி அரைத்து வடிகட்டி, சாறு எடுத்துக் கொள்ளவும். 250 கிராம் வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து, கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும். கால் கப் தனியா (கொத்தமல்லி விதை), 2 டேபிள்ஸ்பூன் சோம்பு (சோம்பு வாசம் விரும்பாதவர்கள் சேர்க்க வேண்டாம்), சிறிது அரிசித்திப்பிலி, சிறிது மிளகு, சிறிது ஏலக்காய் எல்லாவற்றையும் நைசாக பொடித்துக் கொள்ளவும். பின் கனமான கடாயில் வடிகட்டிய வெல்லக் கரைசல் சேர்த்து கொதி வந்ததும் அரைத்த இஞ்சிச்சாறு, பொடித்த கலவை, 2 டேபிள்ஸ்பூன் சுக்குப்பொடி எல்லாம் சேர்த்துக் கிளறி நன்கு வெந்து வரும்போது 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து அல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கினால் தீபாவளி லேகியம் ரெடி. இது மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

சமையல் சந்தேகங்கள் - 38 - அதிரசம், மைசூர்பாகு, லட்டு, தட்டை, தேன்குழல்...

மைசூர்பாகு செய்யும்போது நெய்யை சூடாக்கிய பின்புதான் சேர்க்க வேண்டுமா அல்லது அப்படியே சேர்க்கலாமா?

- கமலேஸ்வரி, கொடுமுடி

ஒரு பங்கு கடலை மாவு, இரண்டு பங்கு சர்க்கரை மற்றும் மூன்று பங்கு நெய் எடுத்துக் கொள்ளவும். கடலை மாவை பச்சை வாசனை போகும்வரை வறுத்துக்கொள்ளவும். ஒரு பாத் திரத்தில் வெந்நீர் வைத்து நெய் நிரப்பிய பாத்திரத்தை அதனுள் வைத்து டபுள் பாயிலிங் முறையில் சூடாக்கவும். அதாவது நெய்யை நேரடியாக சூடாக்க வேண்டாம். இன்னொரு பாத்திரத்தில் சர்க்கரையில் சிறிது தண்ணீர்விட்டு பாகு காய்ச்சவும். ஒரு கம்பிப் பதம் வந்ததும் வறுத்துவைத்துள்ள கடலை மாவை சிறிது சிறி தாக அதில் சேர்க்கவும். சூடான நெய்யையும் சிறிது சிறிதாகச் சேர்க்கவும். சர்க்கரைப்பாகு சேர்த்த கடலை மாவும் நெய்யும் ஒன்றாகத் திரண்டு வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறிய பின் தேவையான அளவில் துண்டுகள் போடவும்.

தேன்குழல் செய்வதற்கு உளுத்தம்பருப்பை எந்தப் பதத்தில் வறுத்தால் மணமாகவும் நிறம் மாறாமலும் இருக்கும். கடைகளில் கிடைக்கும் ரெடிமேடு உளுத்த மாவு வைத்து தேன்குழல் செய்யலாமா?

- செல்வி மீரா, நெல்லை-1

தேன்குழல் செய்வதற்கு உளுத்தம்பருப்பை பொன்னிற மாக வறுத்துப் பொடிக்க வேண்டும். அதிக நேரம் சிவக்கும் வரை வறுத்தால் தேன்குழல் சிவந்து விடும். ‌‌‌‌‌ரெடிமேடு உளுத்த மாவு வைத்தும் தாராளமாகச் செய்யலாம்.