Published:Updated:

டிப்ஸ்

 நூடுல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நூடுல்ஸ்

மட்டன் குருமா, வெஜ் குருமா தயாரிக்கும்போது அளவுக்கேற்ப ஒரு கப் கெட்டித் தயிர் சேர்ப்பது சுவையைக் கூட்டும்.

டிப்ஸ்

மட்டன் குருமா, வெஜ் குருமா தயாரிக்கும்போது அளவுக்கேற்ப ஒரு கப் கெட்டித் தயிர் சேர்ப்பது சுவையைக் கூட்டும்.

Published:Updated:
 நூடுல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நூடுல்ஸ்

தக்காளிச் சட்னி அரைக்கும்போது கொஞ்சம் புளி அல்லது கொஞ்சம் எலுமிச்சைச்சாறு வைத்து அரைத்தால் சுவை கூடும். அதேபோல் தக்காளி மற்றும் வெங்காயத்தை மிக்ஸியில் மைய அரைக்காமல் சற்று கொரகொரப்பாக அரைப்பதும் சுவையைக் கூட்டும்.

நூடுல்ஸ் செய்ய நீரைக் கொதிக்க வைத்து நூடுல்ஸைப் போடும்போது அத்துடன் ஒரு டீஸ்பூன் சமையல் எண்ணெய்விட்டால் வெந்த பிறகு ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தனித்தனியே இருக்கும்.

வெங்காயத்தை சாம்பாரில் பயன்படுத்தும்போது நீளவாக்கிலும் குழம்பு மற்றும் பொரியல் கூட்டு செய்யும்போது சற்று பொடியாகவும் நறுக்கிச் சேர்க்க வேண்டும். அதேபோல் கத்திரிக்காயை சாம்பாரில் போடும்போது நீளவாக்கிலும், காரக்குழம்பில் போடும்போது காம்பை எடுக்காமல் நீளவாக்கிலும் நறுக்கிச் சேர்த்தால் சுவை கூடும்.

சுண்டக் காய்ச்சிய இளஞ்சூடான பாலில் ஒரு துளி மோர் விட்டு நன்கு (நான்கைந்து முறை காபிக்கு ஆற்றுவதுபோல்) ஆற்றி மண் சட்டியில் தோய்க்க, நல்ல கெட்டித் தயிர் ரெடி.

எந்த வகை காரக்குழம்பு செய்தாலும் இறக்கும்முன் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயையும் சேர்க்கலாம். விருப்பப்பட்டால் சிறிதளவு வெல்லத்தூளையும் சேர்க்கலாம். இப்படிச் செய்தால் காரக்குழம்பு பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

மட்டன் குருமா, வெஜ் குருமா தயாரிக்கும்போது அளவுக்கேற்ப ஒரு கப் கெட்டித் தயிர் சேர்ப்பது சுவையைக் கூட்டும். தக்காளியை அப்படியே நறுக்கிச் சேர்க்காமல், மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி குருமாவில் சேர்த்தால் கலர்ஃபுல்லாக இருக்கும்.

தேங்காய் அரைத்து ஊற்றிச் செய்யும் குழம்பு வகைகளுக்கு தேங்காயைத் துருவி சூடான எண்ணெயில் சிறிது வதக்கி எடுத்து அரைத்து குழம்பில் ஊற்றினால் வித்தியாசமான சுவை கிடைக்கும்.

தொகுப்பு: ஆதிரை வேணுகோபால்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism