லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

செம கூல்... செம டேஸ்ட்... #HowToMakeAtHome

செம கூல்... செம டேஸ்ட்...
பிரீமியம் ஸ்டோரி
News
செம கூல்... செம டேஸ்ட்...

- ராஜலட்சுமி

செஃப் உமாசங்கர்
செஃப் உமாசங்கர்

ஒருபக்கம் கோடையைப் பழித்தாலும், வெளியே போகும்போதெல்லாம் விதம் விதமான குளிர்பானங்களைக் குடிக்கும்போது கோடையும் பிடித்துப்போகும் பலருக்கும். கொரோனா பரவலால் மீண்டும் வீட்டுக்குள் முடங்கியிருக்கிறோம். வெளியிடங்களில் குளிர் பானங்கள் குடிப்பதற்கு யோசனையாகவும் தயக்கமாகவும் இருக்கிறது. வாட்டியெடுக்கும் வெயிலிலிருந்து தப்பிக்க, தண்டாய் முதல் ஃபலூடாவரை அனைத்தையும் வீட்டிலேயே செய்து ருசி பார்க்க இந்த இதழில் ஆங்காங்கே ரெசிப்பீஸ் தந்திருக்கிறார் செஃப் உமாசங்கர்.

செம கூல்... செம டேஸ்ட்... #HowToMakeAtHome

தண்டாய்

தேவையானவை:

ஊறவைத்த கசகசா - 5 டேபிள்ஸ்பூன்

ஊறவைத்த பாதாம் - 10

ஊறவைத்த கிர்ணி

விதைகள் - 2 டேபிள்ஸ்பூன்

ஊறவைத்த உலர்

திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்

ஊறவைத்த மிளகு - 5

ஊறவைத்த பச்சை

ஏலக்காய் - 5

ஐஸ்வாட்டர் - 500 மில்லி

சர்க்கரை - 200 கிராம்

செய்முறை:

தண்ணீர் தவிர்த்து மற்ற எல்லாப் பொருள் களையும் எடுத்துக்கொள்ளவும். அதில் குறைந்த அளவு ஐஸ் வாட்டர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அதில் மீதமுள்ள ஐஸ்வாட்டர் சேர்த்துக் கலந்து உடனடியாகப் பரிமாறவும்.

செம கூல்... செம டேஸ்ட்... #HowToMakeAtHome

ஃபுல்ஜார் சோடா

தேவையானவை:

எலுமிச்சைப்பழம் - பாதி அளவு

இஞ்சிச்சாறு - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் விழுது - அரை டீஸ்பூன்

புதினா விழுது - அரை டீஸ்பூன்

சர்க்கரைப்பாகு - 50 மில்லி

உப்பு - அரை டீஸ்பூன்

ஊறவைத்த சப்ஜா

விதைகள் - அரை டீஸ்பூன்

குளிர்ந்த சோடா - 400 மில்லி

செய்முறை:

பெரிய கண்ணாடி டம்ளரில் சோடாவை நிரப்பவும். மற்ற எல்லாப் பொருள்களையும் சின்ன டம்ளரில் எடுத்துக்கொள்ளவும். மசாலா கலவை இருக்கும் சின்ன டம்ளரை, சோடா உள்ள பெரிய கண்ணாடி டம்ளருக்குள் மூழ்கும் படி போட்டால், நுரைத்து வரும். அப்போதே உடனுக்குடன் பரிமாற வேண்டும். அதுதான் இதில் ஸ்பெஷல்.

செம கூல்... செம டேஸ்ட்... #HowToMakeAtHome

குலுக்கி சர்பத்

தேவையானவை:

எலுமிச்சைத் துண்டுகள் - 3

கீறிய பச்சை மிளகாய் - ஒன்று

புதினா இலைகள் - சிறிதளவு

சர்க்கரைப் பாகு - 2 டேபிள்ஸ்பூன்

ஊறவைத்த சப்ஜா

விதைகள் - ஒரு டேபிள்ஸ்பூன்

குளிர்ந்த தண்ணீர் - 400 மில்லி

செய்முறை:

மேலே குறிப்பிட்ட அத்தனை பொருள்களையும் மூடிபோட்ட, வெளியே கசியாத ஒரு பாட்டி லிலோ, ஷேக்கரிலோ ஒன்றாகச் சேர்க்கவும். நான்கைந்து முறை வேகமாகக் குலுக்கி, கண்ணாடி டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும்.

செம கூல்... செம டேஸ்ட்... #HowToMakeAtHome

ஃபலூடா

தேவையானவை:

வெனிலா ஐஸ்க்ரீம் - 100 கிராம்

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் - 100 கிராம்

காய்ச்சி குளிர

வைத்த பால் - 100 மில்லி

ரோஸ் சிரப் - அரை டீஸ்பூன்

ஆப்பிள் துண்டுகள் - 15 கிராம்

அன்னாசித்துண்டுகள் - 15 கிராம்

வாழைப்பழத்துண்டுகள் - 15 கிராம்

ட்ரை ஃப்ரூட்ஸ்

அண்டு நட்ஸ் - 45 கிராம்

ஊறவைத்த

பேஸில் விதைகள்

(டிபார்ட்மென்ட்டல்

கடைகளில் கிடைக்கும்) - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பாலில் வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று ஓடவிட்டு எடுத்துக்கொள்ளவும். ஃபலூடா பரிமாறும் உயரமான கண்ணாடி டம்ளரில், நாம் தயாராக வைத்திருக்கும் பழத் துண்டுகளை லேயர், லேயராகச் சேர்க்கவும். ஊறவைத்த பேஸில் விதைகள் சேர்க்கவும். அதன்மேல் வெனிலா - பால் கலவையை ஊற்றவும். அதன் மேல் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் சேர்க்கவும். அதன் மேல் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.

செம கூல்... செம டேஸ்ட்... #HowToMakeAtHome

வெர்ஜின் மொஜிட்டோ

தேவையானவை:

எலுமிச்சைப்பழக் கீற்றுகள்

(லெமன் வெட்ஜஸ்) - 3

சர்க்கரைப்பாகு - 2 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சைப்பழச்சாறு - அரை டீஸ்பூன்

புதினா இலைகள் - சிறிது

உப்பு - ஒரு சிட்டிகை

குளிர்ந்த சோடா - 250 மில்லி

செய்முறை:

கண்ணாடி டம்ளரை எடுத்துக்கொள்ளவும். அதில் எலுமிச்சைப்பழக் கீற்றுகள், புதினா இலைகள், உப்பு, எலுமிச்சைப்பழச்சாறு, சர்க்கரைப்பாகு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்க்கவும். இதை மத்தின் காம்பு கொண்டு மிக மென்மையாக மூன்று முறை நசுக்கவும். ரொம்பவும் அழுத்தம் கொடுத்து நசுக்கக் கூடாது. அப்படி அழுத்தினால் கசப்புச்சுவை அதிகமாகிவிடும். புதினா இலை களும் எலுமிச்சையும் லேசாக நசுங்கி அவற்றின் சாறு இறங்கினால் போதும். பிறகு அதில் குளிர்ந்த சோடா ஊற்றி, எலுமிச்சை ஸ்லைஸாஸ் அலங்கரித்துப் பரிமாறவும்.