Published:Updated:

ஹேப்பி மில்லட் தீபாவளி!

மில்லட் ரெசிப்பிஸ்
பிரீமியம் ஸ்டோரி
மில்லட் ரெசிப்பிஸ்

``சிறப்புமிக்க சிறுதானியமான கம்பை அடை, புட்டு என்று மட்டும் செய்து கொண்டிருக்காமல் பொடிமாஸ், ஃப்ரை என வெரைட்டியாகச் செய்யலாம்.

ஹேப்பி மில்லட் தீபாவளி!

``சிறப்புமிக்க சிறுதானியமான கம்பை அடை, புட்டு என்று மட்டும் செய்து கொண்டிருக்காமல் பொடிமாஸ், ஃப்ரை என வெரைட்டியாகச் செய்யலாம்.

Published:Updated:
மில்லட் ரெசிப்பிஸ்
பிரீமியம் ஸ்டோரி
மில்லட் ரெசிப்பிஸ்
ஹேப்பி மில்லட் தீபாவளி!

தேபோல மற்ற தானியங்களையும் மாவாக அல்லது வறுத்துப் பொடியாக அரைத்துவைத்து தேவையானபோது சமையலுக்குப் பயன்படுத்தலாம். இவற்றை வெரைட்டியாகச் செய்து கொடுப்பதன் மூலம் வீட்டினர் சிறுதானிய உணவிலும் பழகிவிடுவர். அன்றாட உணவுடன் கலந்துவிட்ட சிறுதானியம் எந்நாளும் உடல்நலத்தைக் காக்கும் உணவாகச் செயல்படத் தொடங்கிவிடும். இனி அம்மாக்களுக்கு மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் குறைவில்லை. இந்த தீபாவளி நல்வாழ்வின் ஆரோக்கியத்துக்கான தொடக்கமாகட்டும்’’ என்று அக்கறையுடன் கூறும் சமையற்கலைஞர் ஜெ.கலைவாணி வழங்கும் சிறுதானிய ரெசிப்பிகள் இங்கே இடம்பெறுகின்றன.

தீபாவளிக்கு வெரைட்டியாக ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ் செய்து உங்கள் வீட்டினரை அசத்துவோம். இனிப்பான சூழலுடன் சிறுதானியமும் இணையட்டும். கொண்டாட்டத்துடன் நலமும் சுவையும் சேர்வது நிச்சயம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தினை கிரஞ்சி கட்லெட்

தேவையானவை:

தினை - அரை கப்

பிரெட் - 2 ஸ்லைஸ்

உருளைக்கிழங்கு - 2

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

இஞ்சி - பூண்டு விழுது - கால் டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவையான அளவு

கரைத்துவைக்க:

கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - கால் கப்

மைதா மாவு - கால் கப்

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

புரட்டி எடுக்க:

ரஸ்க்தூள் அல்லது மிக்ஸியில் பொடித்த கான் கிரஞ்ச் - தேவையான அளவு

ஹேப்பி மில்லட் தீபாவளி!

செய்முறை:

தினையை வேகவைத்துக்கொள்ளவும். பிரெட்டை மிக்ஸில் பொடித்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

பின்பு, வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் சேர்க்கவும். பின்னர் அதில் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். அதனுடன் வேகவைத்த தினை, பிரெட் தூளைச் சேர்த்துக் கிளறி இறக்கி ஆறவிடவும்.

கரைக்கக்கொடுக்கப்பட்டுள்ளவற்றைத் தேவையான நீர்விட்டு பஜ்ஜி மாவைவிட சற்று தளர்வான பதத்தில் கரைத்துவைக்கவும். பின்னர் ஆறிய உருளைக்கிழங்கு - தினை கலவையை விரும்பிய வடிவத்தில் கட்லெட்டு

களாக செய்து அவற்றை கரைத்துவைத்த மாவில் தோய்க்கவும். பின்னர் அவற்றை ரஸ்க்தூள் (அ) கான் கிரஞ்ச் தூளில் புரட்டி வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு புரட்டி வைத்திருக்கும் கட்லெட்டைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: வறுக்காத கார்ன்ஃப்ளேக்ஸ்தான் கான்கிரஞ்ச் என்று அழைக்கப்படுகிறது. இது பெரிய மளிகைக்கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்.

* மண்ணில் இருக்கும் ஈரப்பதத்திலேயே ஏழாம் நாளில் முளைவிடும் திறன் தினைக்கு உண்டு.

ஸ்பைஸி கம்பு பொடிமாஸ்

தேவையானவை:

உருளைக்கிழங்கு - 3 (வேகவைத்து, தோலுரிக்கவும்)

கம்பு - அரை கப் (வேகவைக்கவும்)

பிரெட் - 2 ஸ்லைஸ்

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - அரை டீஸ்பூன்

எண்ணெய் - ஒரு கப் (பொரிக்க)

கரைத்துவைக் :

கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - கால் கப்

மைதா - கால் கப்

மிளகு - கால் டீஸ்பூன் (பொடிக்கவும்)

தாளிக்க:

காய்ந்த மிளகாய் - 2

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

சோயா சாஸ் - அரை டேபிள்ஸ்பூன்

தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

இஞ்சி - அரை இஞ்ச் துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்)

எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - சிறிதளவு

ஹேப்பி மில்லட் தீபாவளி!

செய்முறை:

பிரெட்டைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்துவைக்கவும். ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, கம்பு, பிரெட், நறுக்கிய பச்சை மிளகாய், சீரகத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாகப் பிடித்துவைக்கவும். இன்னொரு சிறிய பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார், மைதா மாவு, மிளகுத்தூள் ஆகியவற்றைக் கொஞ்சம் தண்ணீர்விட்டுக் கரைத்து வைக்கவும்.

பின்னர் பிடித்துவைத்த உருண்டைகளை கைகளில் கெட்டியான தட்டையாகத் தட்டி, கரைத்து வைத்திருக்கும் மாவுக் கலவையில் தோய்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பொரித்தெடுத்த தட்டைகளைக் கைகளால் உதிர்த்துக்கொள்ளவும்.

வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம், இஞ்சி, உப்பு சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பின்பு சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ் சேர்த்து புகை வர வேகமாகக் கிளறி, உதிர்த்து வைத்திருக்கும் கம்பு பொடிமாஸைச் சேர்த்து முழுதும் கிளறி, எலுமிச்சைச்சாறு கலந்து ஒரு நிமிடம் கிளறி, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

* உலகின் ஒட்டுமொத்த சிறுதானிய உற்பத்தியில் முதலிடம் பிடிப்பது கம்பு.

கம்பு கார்லிக் பூரி

தேவையானவை:

கம்பு மாவு - அரை கப்

கோதுமை மாவு - ஒரு கப்

கடலை மாவு - கால் கப்

ஓமம் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

விழுதாக அரைக்க:

முந்திரி - 4

பூண்டு - 4 பல்

காய்ந்த மிளகாய் - 4 (அல்லது காரத்துக்கேற்ப)

ஹேப்பி மில்லட் தீபாவளி!

செய்முறை:

முந்திரி, பூண்டு, காய்ந்த மிளகாய் ஆகிய மூன்றையும் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, கம்பு மாவு, உப்பு, ஓமம், 2 டீஸ்பூன் எண்ணெய், மிளகாய்த்தூள், முந்திரி - பூண்டு - மிளகாய் விழுது ஆகிய அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட்டு பூரி மாவுப் பதத்துக்குக் கெட்டியாகப் பிசைந்து நனைத்துப் பிழிந்த துணியில் சுற்றி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, அதை எடுத்து உருண்டைகளாக்கி சிறிய வடிவ பூரிகளாகத் திரட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டு பூரிகளை ஒவ்வொன்றாகப் போட்டுப் பொன்னிறமாகச் சுட்டெடுக்கவும்.

இதற்கு பாம்பே சட்னி (கடலை மாவு சட்னி) தொட்டுக்கொண்டால்... அமோக சுவை!

*நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கம்பு, உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

பாம்பே சட்னி

தேவையானவை:

வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

தக்காளி - 2 (விழுதாக அரைக்கவும்)

கடலை மாவு - கால் கப்

கடுகு - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடலை மாவை தண்ணீர்விட்டு நீர்க்கக் கரைத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய்ச் சேர்த்துக் கிளறவும். பின்பு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளி விழுது சேர்த்துக் கலந்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, கரைத்துவைத்துள்ள கடலை மாவை ஊற்றி, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து மெதுவாகக் கிளறவும். மாவு கெட்டியாகிவிடாமல் கிளறவும். வெந்து கொதித்த வந்தவுடன் இறக்கி, பூரியுடன் பரிமாறவும்.

கம்பு சோயா டீப் ஃப்ரை

தேவையானவை

கம்பு - அரை கப்

சோயா - 2 கப்

வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)

பூண்டு - 10 பல் (நறுக்கவும்)

இஞ்சி - ஒரு சிறு துண்டு (தோல் சீவி, நறுக்கவும்)

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

ஆம்சூர் பவுடர் - ஒரு டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகு - ஒரு டீஸ்பூன் (ஒன்றிரண்டாக உடைக்கவும்)

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டீஸ்பூன்

மைதா - ஒரு டீஸ்பூன்

உப்பு - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

ஹேப்பி மில்லட் தீபாவளி!

செய்முறை:

கம்பை வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து வேகவைத்துக்கொள்ளவும். சோயாவை தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு பிழிந்தெடுத்து வெந்நீர் ஊற்றி மீண்டும் இரண்டு நிமிடங்கள் ஊறவைத்துப் பிழிந்தெடுத்து கம்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அதை ஓர் அகலமான பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு. அதில் நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள். ஆம்சூர் பவுடர், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், மிளகு, மிளகாய்த்தூள், கார்ன்ஃப்ளார், மைதா ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்து அளவான உருண்டைகளாகப் பிடித்துவைத்துக் கொள்ளவும். ஒவ்வோர் உருண்டையையும் எடுத்து நீளவாக்கில் கெட்டியாக உருளை வடிவில் உருட்டி அதன் ஒரு முனையில் சிறிய துளையிட்டுக்கொள்ளவும்.

10 நிமிடங்கள் ஃப்ரீசரில்வைக்க, கெட்டியாகும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு உருளைகளை மெதுவாகப் போடவும். உருளைகள் எண்ணெயினுள் முழுதும் மூழ்கி வேக வேண்டும். பின்பு அதை பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். கம்பு சோயா டீப் ஃப்ரை ரெடி.

* சரும ஆரோக்கியத்துக்கும் பார்வை நலனுக்கும் தேவையான சத்துகள் கம்புவில் நிறைந்துள்ளன.

பனிவரகு மேங்கோ மில்க் ஸ்வீட்

தேவையானவை

பனிவரகு மாவு - அரை கப்

மாம்பழம் (நறுக்கியது) - 2 கப்

பால் - அரை லிட்டர்

முந்திரி - 10

பட்டை - ஒரு துண்டு

கிராம்பு - 3

சர்க்கரை - கால் கப்

ஏலக்காய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன்

அலங்கரிக்க:

மாம்பழத் துண்டுகள் - சிறிதளவு

நெய்யில் வறுத்த முந்திரி - ஐந்து

ஹேப்பி மில்லட் தீபாவளி!

செய்முறை:

முந்திரியை ஊறவைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். பனிவரகு மாவை வேண்டிய தண்ணீர்விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைத்து வைக்கவும். அகலமான வாணலியில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பாலுடன் பட்டை, கிராம்பு சேர்த்து நன்கு கொதிக்கவைத்து வடிகட்டவும். வடிகட்டிய பாலை மீண்டும் அடுப்பில்வைத்து அரைத்த முந்திரி விழுதைச் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும். அதில் பனிவரகு மாவை ஊற்றிக்கொண்டே கைவிடாமல் கலக்கவும். மாவை ஊற்றியவுடன் உடனே மாவு கெட்டிப்பட்டுவிடும். எனவே, அடுப்பைக் குறைத்துவிட்டு தேவைப்பட்டால் சிறிதளவு காய்ச்சிய பால் ஊற்றி, மாம்பழத் துண்டுகளைச் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அதில் பின்பு சர்க்கரை மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து கொதிக்கவிடவும். பிறகு, இறக்கி ஒரு கிண்ணத்தில் சேர்த்து அரை மணி நேரம் ஆறவிடவும். பின்பு அதன் மீது நறுக்கிய மாம்பழம், நெய்யில் வறுத்த முந்திரியைச் சுற்றிலும் அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு:

இதை நாட்டுச் சர்க்கரையிலும் செய்யலாம். சிறிது நிறம் மாறும். இனிப்பைக் குறைவாகவும் பழத்தை அதிகமாகவும் சேர்ப்பதால் இந்த ஸ்வீட் சுவையாக இருக்கும். இனிப்பைக் குறைத்து சமைத்தால் எல்லோருமே நிறைய சாப்பிட முடியும்; திகட்டாது. இதை முந்திரிக்குப் பதில் பாதாம் பருப்பு சேர்த்தும் செய்யலாம்.

* நீரிழிவு பிரச்னைக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் தன்மை பனிவரகுக்கு உண்டு.

கார்ன் ஃப்ரை

தேவையானவை:

மக்காச்சோள முத்துகள் - 2 கப்

இஞ்சி - பூண்டு விழுது - அரை டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - அரை டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - ஒரு டேபிள்ஸ்பூன்

பிரெட் தூள் (பிரெட் கிரம்ப்ஸ்) - கால் கப்

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

ஹேப்பி மில்லட் தீபாவளி!

செய்முறை:

முழு சோளத்தை வேகவைத்து உரித்து சோள முத்துகளை ஓர் அகலமான பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அதில் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கார்ன்ஃப்ளார் சேர்த்து கெட்டியான பதத்தில் கலந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சோள முத்துகளை அள்ளி பிரெட் தூளில் புரட்டியெடுத்து எண்ணெயில் கைகளால் அப்படியே உதிர்த்துவிட்டுப் பொரிக்கவும். பொன்னிறமானதும் எடுக்கும்போது நறுக்கிய கொத்தமல்லித்தழையை எண்ணெயில் போட்டு உடனே பொரித்ததையும் சேர்த்து எடுத்துவிடவும். இந்த கார்ன் ஃப்ரை வித்தியாசமான சுவையில் அசத்தும்.

* இலங்கையில் `சோளம்’ என்றழைக்கப்படுவது மக்காச்சோளமே.

கேழ்வரகு பயறு அடை

தேவையானவை:

கேழ்வரகு - ஒன்றரை கப்

முளைகட்டிய பச்சைப்பயறு - கால் கப்

நாட்டுச்சர்க்கரை - முக்கால் கப்

ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

தேங்காய் - அரை கப் (துருவியது)

நெய் - அரை கப்

ஹேப்பி மில்லட் தீபாவளி!

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நாட்டுச்சர்க்கரையைச் சேர்த்து முக்கால் டம்ளர் தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். அந்தத் தண்ணீருடன் கேழ்வரகு மாவு, ஏலக்காய்த்தூள், முளைகட்டிய பச்சைப்பயறு, தேங்காய் அனைத்தையும் ஒன்றுசேர்த்து அடை மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். மாவு பொலபொலவென இருக்க வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் விட்டுக்கொள்ளலாம்; ஆனால், நீர்க்கக் கூடாது. பின்பு உருண்டையாக்கி, ஒரு தட்டில் சிறிதளவு நெய்யைத் தடவிக்கொண்டு அதில் மாவு உருண்டையை வைத்து அதை வேண்டிய அளவில் கெட்டியான அடையாகத் தட்டவும். தோசைக்கல்லில் நெய்விட்டு அடையைப் போட்டு இருபுறமும் பொன்னிறமாகச் சுட்டெடுக்கவும்.

* கேழ்வரகின் இலங்கை பெயர் `குரக்கன்’.

கேழ்வரகு கம்பு தேங்காய்ப்பால் புட்டு

தேவையானவை

கம்பு மாவு - ஒரு கப்

கேழ்வரகு மாவு - அரை கப்

தேங்காய் - அரை கப் (துருவியது)

நாட்டுச்சர்க்கரை - அரை கப்

ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

சர்க்கரை - கால் டீஸ்பூன்

உப்பு - கால் டீஸ்பூன்

ஹேப்பி மில்லட் தீபாவளி!

செய்முறை:

துருவிய தேங்காயை அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கம்பு மாவையும் கேழ்வரகு மாவையும் சேர்த்துக் கலந்துவைக்கவும். முக்கால் டம்ளர் தண்ணீரில் சர்க்கரை, உப்பு சேர்த்துக் கரைத்து அதை மாவில் தெளித்து மாவு முழுவதும் ஈரப்பதம் ஆகும்வரை கட்டிகள் இல்லாதவாறு கைகளால் புரட்டி, பிசையவும். மாவு கைகளில் ஒட்டாமல், ஆனால் ஈரமாக இருக்க வேண்டும். பிறகு, இட்லி குக்கரின் மேல் தட்டை எடுத்து அதன்மீது சுத்தமான காட்டன் துணியை ஈரமாக்கிப் பிழிந்துவைத்து மாவை அதில் பரவலாகச் சேர்த்து, துணியை மூடி அந்தத் தட்டை இட்லி குக்கரில் வைத்து மூடி ஆவியில் வேகவிடவும். 15 நிமிடங்கள் வேகவைத்து இறக்கி, ஒரு பாத்திரத்தில் உதிர்த்தெடுத்து ஏலக்காய்த்தூள், நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். பின்பு பரிமாறும் போது தேங்காய்ப்பால் ஊற்றிப் பரிமாறவும்.

குறிப்பு:

கேழ்வரகு மாவு குளிர்ச்சித் தன்மை கொண்டது என்பதால் அதனுடன் கம்பு சேர்க்கிறோம். கம்பு சூட்டுத்தன்மையைக் கொண்டது.

* குளிர்ச்சியைத் தந்து உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரக்கூடியது தேங்காய்.

வரகு சில்லி பணியாரம்

தேவையானவை:

வரகரிசி – ஒரு கப்

பச்சரிசி - அரை கப்

உளுந்து – கால் கப்

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு

பச்சை மிளகாய் - 8

சமையல் சோடா - ஒரு சிட்டிகை

சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்

தேங்காய் – அரை கப் (துருவியது)

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

உப்பு - தேவைக்கேற்ப

ஹேப்பி மில்லட் தீபாவளி!

செய்முறை:

வரகரிசி, பச்சரிசி, உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒன்றாகச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைத்து அத்துடன் பச்சை மிளகாய் சேர்த்து வடை மாவு பதத்துக்குக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அரைத்துவைத்து இருக்கும் மாவில் சமையல் சோடா, உப்பு, சீரகம், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கலந்துவைக்கவும். தேங்காய்த் துருவலை மாவுடன் கலந்துவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, மாவைச் சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு:

எண்ணெயில் உருண்டைகள் மூழ்கியிருக்க வேண்டும். முழுதும் பொரிந்து வந்தால்தான் சுவையாக இருக்கும். உள்ளே மாவு வெந்திருக்கும். மாவை உருண்டை பிடிக்கும் போது சிறிது ரவையைத் தூவி லேசாக உருட்டி எண்ணெயில் போட்டு எடுத்தால், முறுகலாக இருக்கும். இதைத் தேங்காய்ச் சட்னி, காரச் சட்னியுடன் பரிமாறலாம்.

* ஏழடுக்குத் தோல்கொண்ட சிறுதானியம் வரகு.

தினை பூண்டு கிரிஸ்பி ஸ்நாக்ஸ்

தேவையானவை

தினை மாவு - ஒரு கப்

அரிசி மாவு - ஒரு கப்

பொட்டுக்கடலை மாவு - ஒரு கப்

கடலை மாவு - ஒரு கப்

பூண்டு - 15 பல்

மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு - அரை டீஸ்பூன்

எண்ணெய் - ஒன்றரை கப்

ஹேப்பி மில்லட் தீபாவளி!

செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவு, தினை மாவு, பொட்டுக்கடலை மாவு நான்கையும் சலித்து எடுத்துக்கொள்ளவும். பூண்டைத் தோல் உரித்துக்கொள்ளவும். மிக்ஸியில் பூண்டு, மிளகாய்த்தூள், உப்பு மூன்றையும் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சலித்த கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு ஆகிய

வற்றைக் கலந்து அதனுடன் அரைத்த பூண்டு விழுதைச் சேர்த்துக் கிளறவும். அதில் அரை கப் தண்ணீரைச் சிறிது சிறிதாகத் தெளித்து மிருதுவாக முறுக்கு மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும். பிசைந்த பிறகு கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும். பிசைந்த மாவை முறுக்குக் குழலில் போட்டுவைக்கவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவிடவும். முறுக்குக் குழலை நேரடியாக சூடான எண்ணெயில் சுற்றிலும் பிழிந்துவிடவும். பின் எண்ணெய் சத்தம் அடங்கியதும் திருப்பிப் போட்டு முழுதும் பொன்னிறமானதும் எடுத்து, துண்டுகளாக்கவும். திருப்பிப் போடும்போதே கரண்டியால் உடைத்துவிட்டால், கிரிஸ்பியாக இருக்கும். எண்ணெய் சூடாக இருப்பதால் உடனே நிறம் மாறிவிடும். எனவே, உடனே எடுத்துவிட வேண்டும். பின்பு வடிதட்டில் வைத்து எண்ணெய் வடிந்ததும் எடுத்து சுடச் சுடப் பரிமாறவும். பின்பு சூடு ஆறியதும் காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு மூடி வைத்தால் நீண்ட நாள்களுக்கு கிரிஸ்பியாக இருக்கும்.

* தினைப்பயிர் பெரும்பாலும் பூச்சி மற்றும் நோய்களால் பாதிப்புக்குள்ளா வதில்லை.