Published:Updated:

தீபாவளிப் பட்சணங்கள்

தீபாவளிப் பட்சணங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
தீபாவளிப் பட்சணங்கள்

- லக்ஷ்மி ஸ்ரீநிவாசன்

தீபாவளி லேகியம்

தேவையானவை: நல்லெண்ணெய் - 25 கிராம், மல்லி (தனியா) - 50 கிராம், மிளகு - 25 கிராம், சீரகம் - 25 கிராம், ஓமம் - 25 கிராம், சுக்கு - ஒரு துண்டு, பனை வெல்லம் - 500 கிராம், அதிமதுரம் - ஒரு துண்டு, சித்தரத்தை - ஒரு துண்டு, கண்டந்திப்பிலி - ஒரு டேபிள்ஸ்பூன், அரிசித்திப்பிலி - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 50 கிராம், தேன் - 2 டேபிள்ஸ்பூன், விரலி மஞ்சள் - ஒரு துண்டு.

செய்முறை: தேன், எண்ணெய், நெய் தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும் வெயிலில் நன்றாகக் காய வைக்கவும். அதிமதுரம், சுக்கு, மஞ்சள், சித்தரத்தை, கண்டந்திப்பிலி, அரிசித்திப்பிலி இவற்றை நசுக்கி வைத்துக் கொள்ளவும்.

கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் மல்லி (தனியா), மிளகு, சீரகம், ஓமம் இவற்றை வறுத்து, நசுக்கியவற்றையும் சேர்த்து வறுத்து எடுத்து, மிக்ஸியில் நைஸாகப் பொடிக்கவும். கனமான அடிப் பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் பனைவெல்லத்தை நசுக்கிப் போட்டு ஒரு கப் நீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும். கல், மணல் போக வடிகட்டி மீண்டும் அடுப்பிலேற்றி, வெல்லம் பாகாகும் வரை கொதிக்க விடவும்.

தீபாவளி லேகியம்
தீபாவளி லேகியம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிறகு, நல்லெண்ணெய் ஊற்றி, பொடித்து வைத்திருக்கும் பொடியைத் தூவி இடையிடையே நெய் விட்டுக் கிளறிவிட வேண்டும். இது ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை அடுப்பை சிம்மிலேயே வைக்கவும். கைகளால் உருட்டும் பதம் வந்ததும் இறக்கி தேன் சேர்க்கவும். பின்னர், எல்லாவற்றையும் நன்றாகக் கிளறி விடவும். இதுவே தீபாவளி லேகியம். தீபாவளி அன்று காலையில் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவுக்கு உருட்டிச் சாப்பிட்டு விடவும். தீபாவளி தவிர, மற்ற நாட்களிலும் இதைச் சாப்பிடலாம். வயிற்றுப் பிரச்னை எதுவும் அண்டாது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தேங்காய் சுகியன்

தேவையானவை: தேங்காய்த் துருவல் - ஒரு கப், வெல்லம்- முக்கால் கப், நெய் - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு-ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள்-கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

மேல் மாவுக்கு: தண்ணீர் விட்டு களைந்து, நிழலில் உலர்த்தி அரைத்த பச்சரிசி மாவு-100 கிராம், உளுத்த மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

தீபாவளிப் பட்சணங்கள்

செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கரைத்து, கொதிக்க விட்டு வடிகட்டி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நெய், அரிசி மாவு சேர்த்து பூரணமாகக் கிளறி இறக்கி, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

மேல் மாவுக்கு கொடுத்துள்ள பொருள்களை கலந்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைத்துக் கொள்ளவும். பூரண உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: அதிக சூட்டில் பொரித்தால், பூரணம் கரைந்து எண்ணெ யில் சிதறிவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மோகன் தால்

தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், சர்க்கரை - 200 கிராம், சர்க்கரையில்லாத கோவா - 50 கிராம், நெய் - முக்கால் கப், வறுத்த முந்திரி - சிறிதளவு, குங்குமப்பூ - சில இதழ்கள்

செய்முறை: நெய்யைச் சூடாக்கி கடலை மாவு சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வறுத்து, கோவாவை உதிர்த்து சேர்க்க வும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சி... கடலை மாவு - கோவா கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.

மோகன் தால்
மோகன் தால்

ஓரங்களில் ஒட்டாது வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, வறுத்த முந்திரி, குங்குமப்பூவால் அலங்கரித்து விரும்பிய வடிவில் வில்லைகள் போட... மோகன் தால் ரெடி!

குறிப்பு: செய்முறை மைசூர்பாகு போல் இருப்பினும், கோவா சேர்ப்பதனால் மிகவும் சாஃப்ட்டாக இருக்கும் மோகன் தால்.

(7.10.14 அவள் விகடன் இதழிலிருந்து...)