ரெசிப்பிஸ்
Published:Updated:

ஃபெஸ்டிவ் ஃப்யூஷன் ஸ்வீட்ஸ்

ஃபெஸ்டிவ் ஃப்யூஷன் ஸ்வீட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபெஸ்டிவ் ஃப்யூஷன் ஸ்வீட்ஸ்

பண்டிகைக்கு வழக்கமான பலகாரங்கள் எல்லாம் பண்ணியாச்சு... ஆனாலும், குழந்தைகள் வேறு ஏதாவது புதுசா வேணும் என்று கேட்பார்களே!

ஃபெஸ்டிவ் ஃப்யூஷன் ஸ்வீட்ஸ்

ஆமாம்... அதற்குத்தான் வழிகாட்டுகிறார் ராஜபாளையத்தைச் சேர்ந்த சமையற்கலைஞர் அகிலா விமல். குழந்தைகளுக்குப் பிடித்த உணவுகளோடு நம் பாரம்பர்ய சிறப்புமிக்க உணவுகளையும் கலந்து ஒரு ஃப்யூஷன் கொண்டாட்டம் நடத்தியிருக்கிறார் அவர்.

வாஃபிள்ஸில் குலாப் ஜாமூன், பானி பூரியில் மோத்தி லட்டு - கூடவே ரபடி, பிரவுனீஸோடு சத்துமாவு + அவகாடோ பழம், தாய்லாந்து பாணியில் மாம்பழச்சுவையும் தேங்காய்ப்பாலும் கலந்த பால் பணியாரம், கப் கேக்கில் ரச மலாய், ஃப்னல் கேக்கோடு அப்பம், குழிப்பணியாரத்தில் க்ரீம் பிஸ்கட்... இப்படி ஒவ்வொன்றும் ‘அட’ என ஆச்சர்யப்பட வைப்பவை. ஐடியாவில் மட்டுமல்ல... அசத்தும் சுவையிலும்தான்!

அகிலா விமல்

குபானி கா மீத்தா ட்ரைஃபிள்

தேவையானவை:

குபானி கா மீத்தா செய்ய:

உலர்ந்த ஆப்ரிக்காட் பழங்கள் - 100 கிராம்

சர்க்கரை - அரை கப்

ரோஸ் வொயிட் எசென்ஸ் - சில துளிகள்

உப்பு - ஒரு சிட்டிகை

கஸ்டர்டு செய்ய:

பால் - அரை லிட்டர்

வெனிலா கஸ்டர்டு பவுடர் - 4 டேபிள்ஸ்பூன்

சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்

மற்ற பொருள்கள்:

ஸ்பான்ஜ் கேக் - 200 கிராம்

உலர் பருப்பு வகைகள் (உடைத்தது) - ஒரு டேபிள்ஸ்பூன்

ஃபெஸ்டிவ் ஃப்யூஷன் ஸ்வீட்ஸ்

செய்முறை: :

ஆப்ரிக்காட் பழங்களை சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து வேகவிடவும். பழங்கள் நன்கு மிருதுவாகி மசியும் பதம் வந்ததும், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். ஜாம் போல வந்தவுடன் இறக்கி, ரோஸ் வொயிட் எசென்ஸ் கலந்து ஆறவிடவும். குபானி கா மீத்தா தயார்.

பாலை, சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.அதில் கால் கப் பாலை எடுத்து கஸ்டர்டு பவுடரில் ஊற்றிக் கரைக்கவும். கஸ்டர்டு கரைசலை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து ஆறவிடவும். ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் கீழே கேக் துண்டுகளைப் போடவும். அதன் மேல் மீத்தாவைப் போட்டு சமன்படுத்தவும். பின்னர் அதன் மீது கஸ்டர்டை ஊற்றி, உலர் பருப்புகளைத் தூவி ஃப்ரிட்ஜில் வைத்திருந்து எடுத்து `ஜில்’லென்று பரிமாறவும்.

* ஆப்ரிக்காட் பழ மரம் முதன்முதலில் பயிரிடப்பட்டது அமெரிக்காவா, ஆர்மேனியாவா என்கிற விவாதம் இன்றும் தொடர்கிறது.

ஃபனல் கேக் அப்பம்

தேவையானவை:

கேக் மிக்ஸ் மாவு - ஒரு கப்

அரிசி மாவு - 2 டீஸ்பூன்

பால் - அரை கப் + 2 டேபிள்ஸ்பூன்

மீடியம் சைஸ் ஃபனல் - ஒன்று

பொடித்த சர்க்கரை - கால் கப்

ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

ஃபெஸ்டிவ் ஃப்யூஷன் ஸ்வீட்ஸ்

செய்முறை:

எண்ணெயை மிதமான சூட்டுக்கு காயவைக்கவும். கேக் மிக்ஸ் மாவுடன் அரிசி மாவு, பால் சேர்த்துக் கரைக்கவும். எண்ணெய் மேலே ஒரு கையில் ஃபனலைப் பிடித்து, மற்றொரு கையால் மாவுக் கரைசலை அதற்குள் ஊற்றி லேசாக சுற்றவும். மாவு முத்து முத்தாக விழும். வட்டமாக அருகருகே விழுமாறு ஊற்றி வேகவிடவும். பின்னர் இதை மெதுவாகத் திருப்பிப் போட்டு, பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்து, எண்ணையை வடியவிடவும். பொடித்த சர்க்கரையுடன் ஏலக்காய்த்தூள் கலந்து, மேலே தூவிவிடவும்.

குறிப்பு

கேக் மிக்ஸில் சர்க்கரை கலந்திருப்பதால் உடனே சிவந்துவிடும் அதனால் தீயைக் குறைத்து வைத்திருப்பது அவசியம்.

* 13-ம் நூற்றாண்டில் வெளிவந்த ஓர் அரபு நூலிலேயே அல்வா ரெசிப்பி உள்ளது.

குலாப் ஜாமூன் வாஃபிள்ஸ்

தேவையாவை: :

இனிப்பில்லாத கோவா - ஒரு கப்

மைதா - முக்கால் கப்

சமையல் சோடா - ஒரு சிட்டிகை

பால் - சிறிதளவு

சர்க்கரை - ஒரு கப்

தண்ணீர் - முக்கால் கப்

ரோஸ் வொயிட் எசென்ஸ் - 2-3 துளிகள் (அல்லது ஏலக்காய்த்தூள் ஒரு சிட்டிகை)

எண்ணெய் - தேவையான அளவு

ஒன்றிரண்டாக பொடித்த உலர் பருப்புகள் (பாதாம், முந்திரி, பிஸ்தா) - விருப்பத்துக்கேற்ப

வாஃபிள் மேக்கர்

ஃபெஸ்டிவ் ஃப்யூஷன் ஸ்வீட்ஸ்

செய்முறை:

மைதாவில் சமையல் சோடாவைச் சேர்த்து கோவாமீது சலிக்கவும். பின்னர் இதை நன்றாகப் பிசைந்துகொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு பால் தெளித்து பிசையலாம். சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்துப் பாகு தயாரிக்கவும். அதில் ரோஸ் வொயிட் எசென்ஸ் அல்லது ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். வாஃபிள் மேக்கரை ஆன் செய்து சூடு செய்யவும். ஒன்றரை டீஸ்பூன் அளவுக்கு எண்ணெய் ஊற்றி, சற்றே பெரிய அளவு உருண்டையாக கோவாவை எடுத்து வாஃபிள் மேக்கரில் வைத்து மெதுவாக மூடவும். அழுத்தக் கூடாது. ஒருபுறம் சிவந்ததும் அப்பள இடுக்கியைக் கொண்டு மெதுவாக திருப்பி விடவும். நன்கு வெந்தவுடன் எடுத்து சர்க்கரைப் பாகில் ஊறவிடவும். உலர் பருப்புகள் தூவிப் பரிமாறவும்.

* பிரான்ஸ், பெல்ஜியம் நாடுகளிலிருந்தே வாஃபிள்ஸ் உலகெங்கும் பரவியது.

மோத்திச்சூர் பூரி வித் ரபடி

தேவையானவை:

ரெடி டு ஃப்ரை பானி பூரி - 10

மோத்தி லட்டு - 3

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

ரபடி செய்ய:

பால் - 2 கப்

பிரெட் ஸ்லைஸ் - 2 (ஓரங்கள் நீக்கவும்)

ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

சர்க்கரை - அரை கப்

பொடித்த பாதாம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

ஃபெஸ்டிவ் ஃப்யூஷன் ஸ்வீட்ஸ்

செய்முறை:

எண்ணெயைக் காயவைத்து, பூரிக்களைப் பொரித்தெடுத்து நடுவில் உடைத்துவிடவும். மோத்தி லட்டுகளை உதிர்த்து அரை டீஸ்பூன் அளவு பூரியின் உள்ளே வைக்கவும்.

பாலைக் கொதிக்கவைத்து சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் காய்ச்சவும். பிரெட்டைப் பொடியாக்கி பாலில் சேர்த்து சிறிது கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும். பாதாம், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். ரபடி தயார். பரிமாறும் முன்னர், மோத்தி லட்டு பூரிகள் மீது ரபடி ஊற்றிப் பரிமாறவும்.

உத்தரப்பிரதேசம், பீகார் பகுதிகளில்தான் பானி பூரி முதலில் அறிமுகமானது.

அவகாடோ சத்துமாவு பிரவுனீஸ்

தேவையானவை:

பழுத்த அவகாடோ

பழத்தின் சதை - முக்கால் கப்

முட்டை - 3

சர்க்கரை - ஒன்றரை கப்

சத்துமாவு - கால் கப்

மைதா - அரை கப்

கோகோ பவுடர் - அரை கப்

பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்

வெனிலா எசென்ஸ் 2 டீஸ்பூன்

உப்பு - 2 சிட்டிகை

ஃபெஸ்டிவ் ஃப்யூஷன் ஸ்வீட்ஸ்

செய்முறை :

அவனை (oven) 180 டிகிரிக்குச் சூடேற்றவும். ஒரு கேக் பானில் (pan) பட்டர் பேப்பர் விரித்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் அவகாடோ சேர்த்து, முட்டையை அடித்து ஊற்றி சர்க்கரை, வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு அடிக்கவும். மற்றொரு பாத்திரத்தில் மைதா, சத்துமாவு, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்துக் கலக்கவும். மாவுக் கலவையை சிறிது சிறிதாக முட்டைக் கலவையில் சேர்த்து, கைகளால் மெதுவாகக் கலந்துவிடவும். இதைத் தயாராகவைத்திருக்கும் கேக் பானில் ஊற்றி 25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். ஆறியவுடன் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

குறிப்பு:

அவகாடோ இல்லாதவர்கள் அதற்குப் பதில் ரீஃபைண்டு எண்ணெய் அல்லது உருக்கிய வெண்ணெய் பயன்படுத்தலாம்.

* மெக்ஸிகோவில்தான் அவகாடோ முதலில் பயிரிடப்பட்டிருக்கிறது.

தாய் ஸ்டைல் மேங்கோ கோகனட் பால் பணியாரம்

தேவையானவை:

முழு வெள்ளை உளுந்து - அரை கப்

சர்க்கரை - முக்கால் கப்

பால் - அரை கப்

கெட்டித் தேங்காய்ப்பால் - ஒரு கப்

மாம்பழக் குளிர்பானம் - 2 கப்

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

ஃபெஸ்டிவ் ஃப்யூஷன் ஸ்வீட்ஸ்

செய்முறை :

உளுந்தைக் கழுவி அரை மணி நேரம் ஊறவைத்து பஞ்சு போல அரைத்தெடுக்கவும். கடாயில் எண்ணெயை மிதமான சூட்டுக்குக் காயவைத்து மாவை சிறிது சிறிதாக கிள்ளி போட்டுப் பொரிக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் மாம்பழக் குளிர்பானம், சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்து ஆறவிடவும். பிறகு அதனுடன் பால், தேங்காய்ப்பால் ஊற்றி, பொரித்து வைத்திருக்கும் பணியாரங்களை அதில் ஊறவைத்துப் பரிமாறவும்.

* சங்க இலக்கியங்களில் `உந்தூழ்’ என்ற சொல் உளுந்தைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

ஈஸி ரசமலாய் ட்ரேஸ் லீஷே கேக்

தேவையாவை:

வெனிலா கப் கேக் - 8

ரசமலாய் - 4

ரசமலாய் பால் - முக்கால் கப்

கண்டன்ஸ்டு மில்க் - கால் கப்

பால் பவுடர் - 4 டீஸ்பூன்

விப்பிங் க்ரீம் - அரை கப்

ஃபெஸ்டிவ் ஃப்யூஷன் ஸ்வீட்ஸ்

செய்முறை :

ரசமலாய் பாலுடன் கண்டன்ஸ்டு மில்க், பால் பவுடர் கலந்துகொள்ளவும். விப்பிங் க்ரீமை நன்கு கெட்டியாகும் வரை அடித்துக் கொள்ளவும். ஒரு தட்டில் கேக்குகளை அடுக்கி வைத்து டூத்பிக் கொண்டு அங்கங்கே ஓட்டை போட்டு பால் கலவையை ஊற்றி ஊறவிடவும். விப்பிங் க்ரீமை மேலே பூசி, ரசமலாயை இரண்டாக நறுக்கி, கேக்கின் மேல் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

* வங்கத்தில் தோன்றிய ரசமலாய், இன்று பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலும் விரும்பப்படுகிறது.

ஃபனல் கேக் அப்பம்

தேவையானவை:

கேக் மிக்ஸ் மாவு - ஒரு கப்

அரிசி மாவு - 2 டீஸ்பூன்

பால் - அரை கப் + 2 டேபிள்ஸ்பூன்

மீடியம் சைஸ் ஃபனல் - ஒன்று

பொடித்த சர்க்கரை - கால் கப்

ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

ஃபெஸ்டிவ் ஃப்யூஷன் ஸ்வீட்ஸ்

செய்முறை:

எண்ணெயை மிதமான சூட்டுக்கு காய வைக்கவும். கேக் மிக்ஸ் மாவுடன் அரிசி மாவு, பால் சேர்த்துக் கரைக்கவும். எண்ணெய் மேலே ஒரு கையில் ஃபனலைப் பிடித்து, மற்றொரு கையால் மாவுக் கரைசலை அதற்குள் ஊற்றி லேசாக சுற்றவும். மாவு முத்து முத்தாக விழும். வட்டமாக அருகருகே விழுமாறு ஊற்றி வேகவிடவும். பின்னர் இதை மெதுவாகத் திருப்பிப் போட்டு, பொன்னிறமாகும் வரை பொரித்தெடுத்து, எண்ணெயை வடியவிடவும். பொடித்த சர்க்கரையுடன் ஏலக்காய்த்தூள் கலந்து மேலே தூவிவிடவும்.

குறிப்பு

கேக் மிக்ஸில் சர்க்கரை கலந்திருப்பதால் உடனே சிவந்துவிடும் அதனால் தீயைக் குறைத்து வைத்திருப்பது அவசியம்.

* பண்டைய கிரேக்கத்திலேயே கேக் தயாரிக்கப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன.

க்ரீம் பிஸ்கட் குழிப்பணியாரம்

தேவையானவை:

மைதா - ஒரு கப்

கெட்டியான மோர் - ஒரு கப்

வெனிலா எசென்ஸ், உப்பு, பேக்கிங் பவுடர் - தலா ஒரு டீஸ்பூன்

ஏதேனும் ஒரு வகை க்ரீம் பிஸ்கட் - 10

சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

சமையல் சோடா - கால் டீஸ்பூன்

ஃபெஸ்டிவ் ஃப்யூஷன் ஸ்வீட்ஸ்

செய்முறை:

மைதாவுடன் உப்பு, சமையல் சோடா, பேக்கிங் பவுடர், சர்க்கரை கலந்து வைக்கவும். மோரில் நெய், வெனிலா எசென்ஸ் கலந்து, மாவுக் கலவையில் ஊற்றிக் கட்டியில்லாமல் கரைக்கவும். க்ரீம் பிஸ்கட்டுகளை நான்காக உடைத்து மாவில் போட்டுக் கலக்கவும். நான் - ஸ்டிக் குழிப்பணியாரக்கல்லை காயவைத்து, மாவை ஊற்றி இருபுறமும் நன்கு வேகவைத்து எடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.

* பயணங்களின்போதான தேவைக்காகவே பிஸ்கட் கண்டுபிடிக்கப்பட்டது.