Published:Updated:

நட்சத்திர ஹோட்டல் மெனுவை வீட்டிலேயே செய்து அசத்துங்கள்! - நியூ இயர் ரெசிப்பீஸ்

கேரளாவிலுள்ள கிராண்ட் ஹயாட் ஹோட்டலின் தலைமை செஃப் ஹெர்மன் கிராஸ்பிக்லர் (Hermann Grossbichler) நான்கு அசத்தலான ரெசிபிக்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

புது வருடம் பிறந்துவிட்டது. ரெசல்யுஷன், பார்ட்டி, கோயில், சினிமா என்று தங்களின் புது வருட நாளை எப்படிக் கொண்டாடலாம் என்று தீவிர சிந்தனையில் மூழ்கியிருப்பவர்கள் பலர் இங்கு உண்டு. ``இந்த நாளில் நட்சத்திர ஹோட்டல் உணவு வகைகளை வீட்டிலேயே செய்து அசத்துங்கள்" என்று கேரளாவிலுள்ள கிராண்ட் ஹயாட் ஹோட்டலின் தலைமை செஃப் ஹெர்மன் கிராஸ்பிக்லர் (Hermann Grossbichler) நான்கு அசத்தலான ரெசிபிக்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

1
Salmon Nicoise Salad

சால்மன் நிகாய்ஸ் சாலட்:

தேவையான பொருள்கள்:

லெட்டியூஸ் மிக்ஸ் - 15 கிராம்

ஸ்மோக்டு சால்மன் - 60 கிராம்

வேகவைத்த காடை முட்டை - 20 கிராம்

கேப்பர் பெர்ரிஸ் - 5 கிராம்

சிறிதாக நறுக்கிய தக்காளி - 10 கிராம்

இரண்டாக வெட்டப்பட்ட ஃபிரெஞ்சு பீன்ஸ் - 5 கிராம்

வேகவைத்து, தோல் நீக்கப்பட்ட பேபி உருளைக்கிழங்கு - 10 கிராம்

மிளகுத்தூள் - 5 கிராம்

உப்பு - 5 கிராம்

ஆலிவ் எண்ணெய் - 5 கிராம்

ஸ்பெஷல் எலுமிச்சை சாறு - 10 மில்லி

ஸ்மோக்டு சால்மன் செய்முறை:

தேவையான அளவு உப்பு, சர்க்கரை மற்றும் சோம்புத் தூள் முதலியவற்றை சால்மன் மீன் துண்டுகளோடு கலந்து 45 நிமிடங்கள் பதப்படுத்த வேண்டும். பிறகு, சால்மன் துண்டுகளை நன்கு கழுவி உலர வைக்கவும். கிரில் தட்டு இருந்தால் அதில் மீன்களை வைத்து மீன்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறும்வரை புகைக்க வைக்கலாம் அல்லது சாதாரண தோசைக்கல்லில் வைத்தும் சால்மன் மீன்களை வேகவைத்து எடுக்கலாம்.

ஸ்பெஷல் எலுமிச்சை சாறு செய்வதற்குத் தேவையான பொருள்கள்:

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

எக்ஸ்டரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் - 3 டீஸ்பூன்

இளநீர் - 20 கிராம்

உப்பு - 3 கிராம்

சர்க்கரை - 1 கிராம்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மேலே கொடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். அவ்வளவுதான் ஸ்பெஷல் எலுமிச்சை சாறு ரெடி.

சால்மன் நிகாய்ஸ் சாலட் செய்ய, முதலில் சால்மன் மீனைத் தவிர மற்ற பொருள்கள் அனைத்தையும் ஸ்பெஷல் எலுமிச்சை சாறோடு ஒன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். பிறகு, அதன் மேல் ஸ்மோக்டு மீனை வைத்துப் பரிமாறலாம்.

2
PIZZA QUATTRO FORMAGGI

பீட்ஸா குவாட்ரோ ஃபோர்மேக்கி (PIZZA QUATTRO FORMAGGI):

தேவையான பொருள்கள்:

பீட்ஸா கலவை மாவு - 180 கிராம்

தக்காளி சாஸ் - 45 கிராம்

Bleu சீஸ் - 15 கிராம்

செடார் சீஸ் - 15 கிராம்

பார்மிசன் சீஸ் - 15 கிராம்

மோசரெல்லா சீஸ் - 15 கிராம்

ஓரிகனோ (Oregano) - 2 கிராம்

ஆலிவ் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

வட்ட வடிவில் பீட்ஸா கலவை மாவைத் தட்டி, அதன்மேல் தக்காளி சாஸை பரப்ப வேண்டும். தக்காளி சாஸின் மேற்பரப்பில் அனைத்து வகையான சீஸ்களையும் சம அளவில் தூவி, 300 டிகிரி சூட்டில் வேகவைத்து எடுக்க வேண்டும். அதன் பிறகு, சிறிதளவு ஓரிகனோ மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்துச் சுடச்சுடப் பரிமாறலாம்.

பீட்ஸா கலவை மாவு செய்வதற்குத் தேவையான பொருள்கள்:

மைதா மாவு - 2.5 கிராம்

க்ளுட்டன் - 10 கிராம்

எண்ணெய் - 300 கிராம்

ஈஸ்ட் - 10 கிராம்

உப்பு - 70 கிராம்

சர்க்கரை - ஒரு சிட்டிகை

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

சர்க்கரை, ஈஸ்ட், தண்ணீர் மூன்றையும் சேர்த்து பரோட்டா மாவு பதத்துக்கு முதலில் கலந்துகொள்ளவும். பிறகு, இதர பொருள்களைக் கலந்து இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும். பின்பு 180 கிராம் எடையுள்ள உருண்டைகளாக உருட்டி, ஃப்ரீஸரில் ஆறு மணிநேரம் ஊறவைத்தால் பீட்ஸா கலவை மாவு தயார்.

தக்காளி சாஸ் செய்யத் தேவையான பொருள்கள்:

அரைத்த தக்காளி - 2.5 கிலோ

புதிய பேசில் இலைகள் - 20 கிராம்

உப்பு - 100 கிராம்

சர்க்கரை - 25 கிராம்

ஓரிகனோ - 50 கிராம்

ஆலிவ் எண்ணெய் - 50 கிராம்

செய்முறை:

அரைத்த தக்காளி, உப்பு, சர்க்கரை, ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை நன்கு கலந்துகொள்ளவும். இந்தக் கலவை திடமான சாஸ் பதத்துக்கு வந்ததும் ஓரிகனோ மற்றும் பேசில் இலைகளைச் சேர்த்தால் தக்காளி சாஸ் ரெடி.

3
Penne Norma

பென்னே நோர்மா:

தேவையான பொருள்கள்:

பாஸ்தா பென்னே - 160 கிராம்

தக்காளி - 45 கிராம்

கத்திரிக்காய் - 40 கிராம்

ரிக்கோட்டா (Fresh Ricotta) - 20 கிராம்

தக்காளி சாஸ் - 45 கிராம்

நறுக்கிய வெங்காயம் - 10 கிராம்

பேசில் இலைகள் - 3 கிராம்

எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் - 10 மில்லி

வெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கத்திரிக்காயைச் சிறிதாக நறுக்கி, நன்கு எண்ணெய்யில் வறுத்தெடுத்துக்கொள்ளவும். பிறகு, ஒரு பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெய் சூடானதும், அதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வறுபட்டதும் அதில் தக்காளி மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். தக்காளி சாஸ் மற்றும் வறுத்தெடுத்த கத்திரிக்காய் மற்றும் பாஸ்தா பென்னே சேர்த்துக் கலந்துவிடவும். வெந்த பிறகு பேசில் இலைகள், வெண்ணெய் மற்றும் ரிக்கோட்டா சேர்த்துச் சுடச்சுடப் பரிமாறலாம்.

தக்காளி சாஸ் செய்வதற்குத் தேவையான பொருள்கள்:

அரைத்த தக்காளி - 2.5 கிலோ கிராம்

பேசில் இலைகள் - 20 கிராம்

உப்பு - 35 கிராம்

மிளகு - 5 கிராம்

சர்க்கரை - 10 கிராம்

வெங்காயம் - 20 கிராம்

பூண்டு - 15 கிராம்

செய்முறை:

ஆலிவ் எண்ணெயில் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். இதோடு அரைத்த தக்காளி சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை உள்ளிட்டவற்றைச் சேர்த்து மிதமான தீயில் 20 நிமிடங்கள் சமைத்து எடுக்கவும்.

4
Roasted rack of Lamb

லேம்ப் ரோஸ்ட்:

தேவையான பொருள்கள்:

துண்டாக நறுக்கிய ஆட்டுக்கறி - 200 கிராம்

உப்பு - 5 கிராம்

மிளகுத்தூள் - 5 கிராம்

ஆலிவ் எண்ணெய் - 10 கிராம்

கிரில்டு தக்காளி - 10 கிராம்

எலுமிச்சை - 15 கிராம்

ரோஸ்மேரி ஜூஸ் - 25 கிராம்

மஸ்டர்டு க்ரஸ்ட் - 15 கிராம்

பூண்டு - 10 கிராம்

செய்முறை:

உப்பு, மிளகுத்தூள், பூண்டு மற்றும் ரோஸ்மேரி உள்ளிட்டவற்றை ஆட்டுக்கறி துண்டுகளோடு சேர்த்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். 300 டிகிரியில் 6 நிமிடத்திற்கு க்ரில் செய்துகொள்ளவும். கறித்துண்டுகள் நன்கு வெந்ததும் அவற்றின் மேல் மஸ்டர்டு க்ரஸ்ட் அப்ளை செய்து பொரித்து எடுக்கவும். எலுமிச்சை, தக்காளி, ரோஸ்மேரியோடு சூடாகப் பரிமாறலாம்.

மஸ்டர்டு க்ரஸ்ட் செய்வதற்குத் தேவையான பொருள்கள்:

வெண்ணெய் - 600 கிராம்

புதினா இலைகள் - 150 கிராம்

மல்லித்தழைகள் - 120 கிராம்

கசுந்தி மஸ்டர்டு - 50 கிராம்

பிரெட் க்ரம்ப்ஸ் - 50 கிராம்

தைம் - 10 கிராம்

ரோஸ்மேரி - 10 கிராம்

பூண்டு - 20 கிராம்

உப்பு - தேவையான அளவு

5 பைசா, கொலை, விபத்து, மந்தி, 40 ஆயிரம் ரூபாய்... 2019-ன் டிரெண்டிங் பிரியாணி சம்பவங்கள்!

செய்முறை:

வெண்ணெயோடு புதினா, மல்லி, தைம், பூண்டு போன்றவற்றை நன்கு கலந்து அடித்துக்கொள்ளவும். பட்டர் பேப்பரில் இந்தக் கலவையைக் கொட்டி. ஃப்ரீஸரில் வைத்து, க்ரஸ்ட் பதம் வந்த பிறகு, தேவையான அளவு எடுத்து உபயோகித்துக்கொள்ளலாம்.