Published:Updated:

How to: வீட்டிலேயே பீட்சா சாஸ் செய்வது எப்படி? | How to make pizza sauce at home?

Pizza Sauce (Representational Image) ( Photo by Vita Marija Murenaite on Unsplas )

பலரின் விருப்ப உணவான பீட்சாவுக்கு அவசியமான பீட்சா சாஸை கடைகளில் வாங்குவதென்றால் காஸ்ட்லி. ஆனால், அதன் செய்முறையைத் தெரிந்துகொண்டால் இவ்வளவுதானா என்பீர்கள்.

யூடியூப் சமையல் பெருகிவிட்ட பிறகு, இன்று பீட்சா, பர்கர் என எல்லா வற்றையும் வீட்டிலேயே செய்து அசத்துகிறார்கள் பலரும். ரெடிமேடாகக் கிடைக்கிற பீட்சா பேஸ் வாங்கி, தேவையான பொருள்கள் சேர்த்து பீட்சா ரெடி செய்வது சகஜமான விஷயமாகி இருக்கிறது. பலரின் விருப்ப உணவான பீட்சாவுக்கு அவசியமான பீட்சா சாஸை கடைகளில் வாங்குவதென்றால் காஸ்ட்லி. ஆனால், அதன் செய்முறையைத் தெரிந்துகொண்டால் இவ்வளவுதானா என்பீர்கள்.

Pizza Sauce
Pizza Sauce

ஏற்கெனவே, நீங்கள் தயாரித்து வைத்துள்ள டொமேட்டோ சாஸ் அல்லது கடையில் வாங்கிய டொமேட்டோ சாஸ் ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், பூண்டு பற்கள் - தலா 10. இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். அரை டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் சில்லி சாஸ், அரை டீஸ்பூன் மிளகுத் தூள், சிறிது ஒரிகானோ (இத்தாலியன் ஸ்பைஸான இது கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றைத் தயாராக வைத்துக் கொள்ளவும்.

கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து, அரைத்த மிளகாய் - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக் கவும். டொமேட்டோ சாஸ், சில்லி சாஸ், உப்பு, மிளகுத் தூள், ஒரிகானோ எல்லாம் சேர்த்து ஒரு கொதிவந்ததும் இறக்கிவைக்கவும்.

Pizza sauce (Representational Image)
Pizza sauce (Representational Image)
Pixabay

ருசியை அதிகரிப்பதற்குத் தான் சர்க்கரை சேர்க்கிறோம். விருப்பமில்லாதவர்கள் அதைத் தவிர்த்து விடலாம். கலவையை இறக்கிவைக்கும் போது அரை கப் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்தால் ரிச்சாக இருக்கும்.

டொமேட்டோ சாஸ், சில்லி சாஸில் ஏற்கெனவே வினிகர் சேர்த்திருப்பதால், பீட்சா சாஸில் அது தேவையில்லை.

- ராஜலட்சுமி