Published:Updated:

How to series: வீட்டிலேயே ரசகுல்லா செய்வது எப்படி? | How to make rasagulla at home?

ரசகுல்லா | Rasagulla (Representational Image)
News
ரசகுல்லா | Rasagulla (Representational Image) ( Pixabay )

பொங்கல் திருநாளையொட்டி நமக்கு லாங் வீக் எண்ட் கிடைச்சிருக்கு. சொந்தங்கள் அனைவரும் ஒன்று கூடி மகிழும் வாய்ப்பும் நிறைய பேருக்கு கிடைச்சிருக்கும். இந்த சந்தோஷமான நேரத்துல வீட்டிலேயே ரசகுல்லா செய்வது எப்படினு தெரிஞ்சுகிட்டு ஸ்வீட்டோடு கொண்டாடுங்க மக்களே!

தேவையானவை:
பால் - ஒரு லிட்டர்
எலுமிச்சைச்சாறு - 3 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - ஒரு கப்

ரசகுல்லா | Rasagulla (Representational Image)
ரசகுல்லா | Rasagulla (Representational Image)
Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

செய்முறை:
பாலைக் காய்ச்சி, சூடாக இருக்கும்போதே எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். பால் திரிய ஆரம்பிக்கும். பிறகு சுத்தமான வெள்ளைத் துணியில் கட்டவும்.

தண்ணீர் வடிந்தபின் வடிகட்டியில் பனீர் தங்கும். நன்றாகப் பிழிந்து எடுத்து பனீரை மிருதுவாக வரும்வரை பிசையவும். பிறகு, சிறிய உருண்டைகளாக உருட்டவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் இரண்டு கப் தண்ணீர்விட்டு கொதிக்க விடவும்.

Rasagulla
Rasagulla

இதில் உருண்டைகளைப் போடவும். பிறகு சிறு தீயில் வைத்து வேகவிடவும். உருண்டை கொஞ்சம் பெரிதானதும் கீழே இறக்கவும். ஊறியபின் பரிமாறவும்.