என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

செம ஈஸி... செம டேஸ்ட்டி - டொமேட்டோ சாஸ் - #HowToMake

டொமேட்டோ சாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
டொமேட்டோ சாஸ்

#Utility

ராஜலட்சுமி

டொமேட்டோ சாஸ்

மொமேட்டோ சாஸ் செய்ய நாட்டுத் தக்காளி சரிப் படாது. பெங்களூரு தக்காளிதான் பெஸ்ட்.

ஒரு கிலோ தக்காளிக்கு அரை கப் வெள்ளை வினிகர் (வொயிட் வினிகர் என்று கடைகளில் கிடைக்கும்) தேவை. அரை கப் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் உப்பு ஆகியவற்றைத் தனியே வைத்துக்கொள்ளவும். ஏலக்காய், பட்டை, கிராம்பு தலா நான்கு அல்லது ஐந்து, மிளகு ஒரு டீஸ்பூன், தோலுரித்து நறுக்கிய சாம்பார் வெங்காயம் ஒரு கைப்பிடி அளவு, தோலுரித்த பூண்டு பற்கள் 10 எடுத்துக் கொள்ளவும். ஏலக்காய் முதல் பூண்டு வரையிலான அனைத்தையும் ஒன்றிரண் டாகத் தட்டியோ, மிக்ஸியில் ஒரே ஒரு சுற்று சுற்றியோ எடுத்து, ஒரு துணியில் வைத்து மூட்டை யாகக் கட்டவும்.

டொமேட்டோ சாஸ்
டொமேட்டோ சாஸ்

தக்காளியை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, அதிலேயே இந்த மூட்டையையும் போடவும். தக்காளி நன்கு மென்மை யாகும்வரை கொதிக்க விடவும். வெந்ததும் மூட்டை யையும் அவிழ்த்து அதில் சேர்க்கவும்.

கடைகளில் `எக்ஸ்ட்ராக்ட் டர்' எனக் கிடைக்கும். அதில் வெந்த தக்காளி, மசாலா கலவையை மசித்து வடிகட்டி எடுக்கவும். எக்ஸ்ட்ராக்ட்டர் இல்லை என்றால் மெல்லிய வடிகட்டியில் சேர்த்து, மத்தால் மசித்து வடிகட்டி எடுக்கலாம். மிக்ஸியில் அரைக்க வேண்டாம்.

தக்காளி விழுதை ஒரு பாத்திரத்தில், உப்பு, சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். இந்த சாஸ் ஃப்ரிட்ஜில் மூன்று வாரங்கள்வரை இருக்கும். நீண்ட நாள்கள் வைத்திருக்க விரும்பினால், ஐந்து கப் தக்காளிக் கூழுக்கு மூன்றில் ஒரு பங்கு சோடியம் பென்ஸோயெட் (வெது வெதுப்பான நீரில் கரைத்தது) சேர்க்கலாம்.