என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

செம ஈஸி... செம டேஸ்ட்டி - விப்பிங் க்ரீம் - #HowToMake

விப்பிங் க்ரீம்
பிரீமியம் ஸ்டோரி
News
விப்பிங் க்ரீம்

ராஜலட்சுமி

கேக் தயாரிப்பில் விப்பிங் க்ரீம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கேக்கின் மேலே செய்யப்படுகிற அலங்காரத்துக்கும், கேக்கை சாண்ட்விச்சிங் செய்யவும் பொதுவாக இதைப் பயன்படுத்துவார்கள். இன்னும் சிலர் இதை சூப், டெஸர்ட் மற்றும் காபியில்கூட சேர்த்துக் கொள்வதுண்டு. ஆனால், பலருக்கும் இதன் செய்முறை சரியாக வருவதில்லை. எதிர்பார்த்த பதத்துக்கு வராமல் நீர்த்துப்போவது வீட்டிலேயே விப்பிங் க்ரீம் தயாரிப்போர் சந்திக்கிற பரவலான பிரச்னை. இதற் காகவே பலரும் விலை அதிகம் என்றாலும் கடை களில் கிடைக்கும் விப்பிங் க்ரீமையே பயன்படுத்து கிறார்கள்.

செம ஈஸி... செம டேஸ்ட்டி - விப்பிங் க்ரீம் - #HowToMake

கடைகளில் கிடைக்கும் விப்பிங் க்ரீம் பலரும் நினைக்கிற மாதிரி பாலில் தயாரிக்கப்படுவதில்லை, வனஸ்பதியில் தயாரிக்கப் படுவது. இதற்குப் பதிலாக வீட்டிலேயே ஆரோக்கிய மான முறையில் பால் கொண்டு விப்பிங் க்ரீம் செய்யலாம்.

பாலைக் காய்ச்சி, ஆற வைத்து, ஃப்ரிட்ஜில் இரண்டு நாள்கள் வைக்கவும். மேலே கெட்டியான ஆடை படியும். அந்தப் பாலாடையுடன், அதற்குத் தகுந்த அளவு குளிரூட்டப்பட்ட பால் சேர்த்து அடித்தால் விப்பிங் க்ரீம் தயார்.

இதை மொத்தமாகச் செய்து வைக்க முடியாது என்பதால் தேவைப்படும் போது ஃப்ரெஷ்ஷாக செய்து உபயோகிக்கலாம்.

செம ஈஸி... செம டேஸ்ட்டி - விப்பிங் க்ரீம் - #HowToMake