லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

2K kids: கரூரைக் கலக்கும் 'கரம்'!

கரம்
பிரீமியம் ஸ்டோரி
News
கரம்

க.கீர்த்தனா

கரூரோட சிறப்புகள்னா அமராவதி ஆறு, ஆற்றங்கரை, பழைமையான கோயில்கள், மாரியம்மன் திருவிழானு பலரும் சொல்லலாம்.

Foodies எல்லாம் மறக்காம சொல்றது `கரம்' (Garam). குட்டீஸ் முதல் பெரியவங்கவரை ருசிச்சு சாப்பிடுற அயிட்டம். கரூர் கரத்துக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கு. கரூர் மக்களோட உணர்வுகளோடு கலந்தது இந்த கரம். கரூர்ல எல்லா தெரு முனைகள்லயும் தள்ளு வண்டியில கரம் விற்பாங்க.

‘அட பில்டப்ப நிறுத்துங்கப்பா... என்னப்பா அது கரம்?’னு கேட்குறவங்களுக்கு, ஒரு சின்ன அறிமுகம். பீட்ரூட் துருவல், கேரட் துருவல், பொடியா நறுக்கின வெங்காயம், பச்சை மிளமாய், மல்லித்தழை... இதையெல்லாம் ஒண்ணா சேர்த்துக் கலந்து, மிளகுத்தூள், உப்பு சேர்க்கணும். தேங்காய்ச் சட்னி, கறிவேப்பிலை சட்னினு பிடிச்ச சட்னியை ரெடி பண்ணி வெச்சுக்கணும். ஒரு கிண்ணத்துல கொஞ்சம் பொரி, கொஞ்சம் நிலக்கடலை, ரெண்டு, மூணு தட்டுவடையை (தட்டை) உடைச்சுப் போட்டு, அதுல, செஞ்சு வெச்சிருக்கிற பீட்ரூட் - கேரட் கலவையைக் கொஞ்சம் சேர்த்து, அதுல ரெண்டு, மூணு ஸ்பூன் சட்னியைச் சேர்த்து, எல்லாத்தையும் சும்மா கலக்கு கலக்குனு நல்லா கலக்கி, அதை ப்ளேட்டிங் செஞ்சு தந்தா... அதுதாங்க `கரம்'! இது அடிப்படை மிக்ஸிங். இதுல விருப்பத்துக்கு ஏற்ப மிக்ஸிங்கை கூட்டிக்கலாம்.

கரூர்ல 48 வருஷமா, பசுபதீஸ்வரர் கோயிலுக்குப் பக்கத்துல தள்ளுவண்டியில கரம் விக்கிறவரு தினேஷ். இவரோட ‘மக்கள் கரம் ஸ்டால்’ ஏரியாவுல ரொம்ப ஃபேமஸ். அங்க ஒரு விசிட்டை போட்டோம்.

2K kids: கரூரைக் கலக்கும் 'கரம்'!

12 வகை சட்னி!

தினேஷ் கடையில 15 வகையான கரம் செட்டு இருந்தது. நாங்க ஆர்டர் பண்ணினது நாலு வகை செட்டு. அதுக்கு,

12 வகையான சட்னிய ரெடியா வெச்சுக் கிட்டு, ‘எது வேணும் சொல்லுங்க...’னு கேட்டாரு தினேஷ். கறிவேப்பிலை சட்னி, கொத்தமல்லி சட்னி, புதினா சட்னி, பீட்ரூட் சட்னி, தக்காளி சட்னி, இஞ்சி சட்னி, பூண்டு சட்னி, வெறும் மிளகாய் சட்னி, தேங்காய் - மிளகாய் சட்னி, மங்கா சட்னி, பெரிய நெல்லிக்காய் சட்னி, பச்சை மிளகா சட்னி... நாம என்ன வெரைட்டி கரம் கேட்குறோமோ அதுக்குத்

தகுந்த மாதிரி அஞ்சு வகை சட்னியை எடுத்து சேர்த்து, ஒரு கலக்குக் கலக்கி, ப்ளேட்ல தருவாங்க பாருங்க... அந்த ருசியே தனிங்க!

2K kids: கரூரைக் கலக்கும் 'கரம்'!
2K kids: கரூரைக் கலக்கும் 'கரம்'!
2K kids: கரூரைக் கலக்கும் 'கரம்'!

கரம் வெரைட்டீஸ்!

‘சரி அது என்ன கரம் வெரைட்டீஸ்?’னு கேட்குறீங்களா? முட்டை கரம், சமோசா கரம், போண்டா கரம், அப்பளம் கரம், அப்பளம் செட், கலக்கல் கரம், நொறுக்கல் கரம், காரப்பொரி கரம், கான் கரம், மாங்கா கரம், வெள்ளரிக்கா கரம், மிளகு செட், மிளகுத்தூள் செட், பெப்பர் சால்ட், தட்டுவடை செட், தயிர் செட், கார்ன் கரம், பூந்தி கரம்னு நிறைய கரம் இருக்குங்க. குறிப்பா, பொரி கரம், தட்டுவடை செட், அப்பளம் செட், முட்டை கரம்... இது நாலும் எல்லாருக்கும் பிடிச்ச வெரைட்டீஸ். வாடிக்கையாளர்களோட விருப்பப்படி காரத்தை குறைத்தும், அதிகம் சேர்த்தும் தருவாங்க.

நொறுங்குற அந்த சத்தம்..!

அந்த தட்டுவடை செட் இருக்கு பாருங்க... வாவ். நாலு தட்டையை எடுத்து அதுக்கு மேல சட்னி, ஊறுகாய், பீட்ரூட்டை நல்லா கலந்து ஒவ்வொரு தட்டுவடையிலும் வெச்சுட்டு, இன்னும் நாலு தட்டுவடையை எடுத்து அதுக்கு மேல வெச்சுட்டு ஒரு தட்டுல தருவாங்க பாருங்க... அதைச் சாப்பிடும்போது நொறுங்குற சத்தம் வரும். அந்தச் சத்தமும் ருசியில சேர்த்தி. கரம் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை தள்ளுவண்டியில மட்டுமே கிடைக்கும். சில கரம் ஸ்டால்ல தேன் மிட்டாய், இடிச்ச கடலை மிட்டாய், இலந்த வடை, பால்கோவாவும் கிடைக்கும்.

இனி அடுத்த முறை கரூர் போகும்போது கரத்தை ருசிக் காம வருவீங்களா என்ன?!

தினேஷ் கடையில காதுல விழுந்த ரெவ்யூஸ்...

*அந்த கரத்தை அவங்க கலக்குறப்போ வரும் பாருங்க சவுண்டு... அதுதான் தூண்டில்!

*ரெண்டு ப்ளேட் சாப்பிட்டா போதும், வயிறும் மனசும் நிறைஞ்சிடும்!

*கரூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்குப் போயிட்டு கரத்தை சாப்பிடாம வீட்டுக்குப் போறது செல்லாது... செல்லாது!

* குறைஞ்ச விலையில எல்லா வயதினரும் விரும்பிச் சாப்பிடுற ஸ்நாக்ஸ்.