Published:Updated:

மாம்பழ ஸ்குவாஷ் | மாம்பழ ஜாம்| மேங்கோ கூல் டிலைட் - மாம்பழ ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

வீக் எண்ட் ரெசிப்பீஸ்

மாம்பழங்கள் கிடைத்தால் மிஸ் பண்ணாதீர்கள்... அப்படியே சாப்பிடுங்கள்... விதம்விதமாக விருந்து சமைத்தும் சாப்பிடுங்கள். இந்த வார வீக் எண்டுக்கு உங்கள் வீடு மாம்பழங்களால் மஞ்சள் களை கட்டட்டும்...

மாம்பழ ஸ்குவாஷ் | மாம்பழ ஜாம்| மேங்கோ கூல் டிலைட் - மாம்பழ ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

மாம்பழங்கள் கிடைத்தால் மிஸ் பண்ணாதீர்கள்... அப்படியே சாப்பிடுங்கள்... விதம்விதமாக விருந்து சமைத்தும் சாப்பிடுங்கள். இந்த வார வீக் எண்டுக்கு உங்கள் வீடு மாம்பழங்களால் மஞ்சள் களை கட்டட்டும்...

Published:Updated:
வீக் எண்ட் ரெசிப்பீஸ்

இந்த வருடம் மாம்பழ விளைச்சல் குறைவு என்கிறார்கள். அரிதாகவே காணக்கிடைக்கிற மாம்பழங்கள் கொள்ளைவிலைக்கு விற்கப்படுகின்றன. ஆனாலும், மாம்பழங்களை மிஸ் பண்ண முடியுமா?

மாம்பழங்கள் கிடைத்தால் மிஸ் பண்ணாதீர்கள்... அப்படியே சாப்பிடுங்கள்... விதம்விதமாக விருந்து சமைத்தும் சாப்பிடுங்கள். இந்த வார வீக் எண்டுக்கு உங்கள் வீடு மாம்பழங்களால் மஞ்சள் களை கட்டட்டும்...

மாம்பழ ஸ்குவாஷ்

தேவையானவை:
* மாம்பழக்கூழ் - 2 கப்
* சர்க்கரை - 4 கப்
* சிட்ரிக் ஆசிட் - ஒரு டீஸ்பூன்
* கேசரி ஃபுட் கலர் - 2 சிட்டிகை
* மேங்கோ எசென்ஸ் - சில துளிகள்
* தண்ணீர் - 2 கப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாம்பழ ஸ்குவாஷ்
மாம்பழ ஸ்குவாஷ்

செய்முறை:
சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்துக் கொதிக்கவிட்டு, வடிகட்டி, சிட்ரிக் ஆசிட் சேர்த்து ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.

இத்துடன் மாம்பழக்கூழைச் சேர்த்துக் கலக்கி, எசென்ஸ் மற்றும் கேசரி கலர் சேர்த்துக் கலக்கவும். இதை பாட்டில்களில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து பிறகு, ஐஸ் கட்டி, தண்ணீருடன் கலந்து பருகலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மாம்பழ-இளநீர்-நுங்கு புட்டிங்

தேவையானவை:
* கண்டென்ஸ்டு மில்க் - ஒரு கப்
* இளநீர் - ஒரு கப் + கால் கப்
* பால் - ஒரு கப்
* ஃபுட் ஜெலட்டின் - மூன்றரை டீஸ்பூன்
* இளநீர் வழுக்கை - ஓர் இளநீருக்குரியது
* மாம்பழம் - ஒன்று (தோல் நீக்கி நறுக்கியது)
* நுங்கு - 8 (தோல் நீக்கி நறுக்கியது)

மாம்பழ-இளநீர்-நுங்கு புட்டிங்
மாம்பழ-இளநீர்-நுங்கு புட்டிங்

செய்முறை:
மைக்ரோவேவ் அவன் பாத்திரத்தில் கால் கப் இளநீரில், ஃபுட் ஜெலட்டினை 5 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு, மீதம் இருக்கும் இளநீர், பால், கண்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை ஒரு பவுலில் ஒன்றாகக் கலக்கவும். இத்துடன் இளநீர் வழுக்கை, மாம்பழத் துண்டுகள் மற்றும் நுங்கு சேர்த்து கலக்கவும்.

ஊறிய ஜெலட்டின் பாத்திரத்தை மைக்ரோவேவ் அவனில் 30 விநாடிகள் வைத்து சூடாக்கவும். பிறகு, வெளியே எடுத்து ரூம் டெம்பரேச்சருக்கு வந்ததும் நுங்கு இளநீர் கலவையோடு சேர்த்து நன்கு கலக்கவும். விரும்பிய அலங்கார பாத்திரத்தில் புட்டிங்கை ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் 6 மணி நேரம் வைக்கவும். புட்டிங் கெட்டியானதும் எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாம்பழ ஜாம்

தேவையானவை:
* தித்திப்பான பழுத்த மாம்பழங்கள் - 6
* சர்க்கரை - 250 கிராம்
* மாம்பழ எசென்ஸ் - சில துளிகள்
* கேசரி ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
* சோள மாவு - அரை டீஸ்பூன்
* சிட்ரிக் ஆசிட் - கால் டீஸ்பூன்

மாம்பழ ஜாம்
மாம்பழ ஜாம்

செய்முறை:
மாம்பழங்களைச் சுத்தப்படுத்தி பிழிந்து கொள்ளவும். அடிகனமான பாத்திரம் (அ) நான்ஸ்டிக் கடாயில் மாம்பழக்கூழ், சர்க்கரை, சிட்ரிக் ஆசிட், ஃபுட் கலர் சேர்த்து இளம் தீயில் கொதிக்கவிடவும்.

சோள மாவைச் சிறிது தண்ணீரில் கரைத்து இதனுடன் சேர்க்கவும். சிறிது கெட்டியானதும் எசென்ஸைச் சேர்க்கவும். சிறிது ஜாமை ஒரு தட்டில் ஊற்றினால் அது ஓடாமல் நெகிழ இருக்கும் சமயத்தில் அடுப்பை அணைக்கவும் (ஜாம் போன்றவை செய்யும்போது அடுப்பை `சிம்’மில் வைத்தால் அடிபிடிக்காது).

மேங்கோ கூல் டிலைட்

தேவையானவை:
* மாம்பழம் - 4
* சர்க்கரை - 300 கிராம்
* பால் - ஒரு லிட்டர்
* ஜெலட்டின் பவுடர் (டிபார்ட்மென்ட்டல் கடைகளில் கிடைக்கும்) - 2 டேபிள்ஸ்பூன்
* குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
* ரோஸ் எசென்ஸ் - 3 துளி

மேங்கோ கூல் டிலைட்
மேங்கோ கூல் டிலைட்

செய்முறை:

மாம்பழத்தைத் தோல் சீவி, சதை பாகத்தைப் பொடியாக நறுக்கி, இரண்டு கப் அளவு வரும்படி எடுத்து வைக்கவும். ஜெலட்டின் பவுடருடன் சிறிது தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் கொதித்ததும் ஊறிய ஜெலட்டினை ஊற்றிக் கொதிக்க வைத்து, சர்க்கரையைச் சேர்த்து மேலும் கொதிக்கவிட்டு இறக்கவும்.

பிறகு, மாம்பழத்துண்டுகள், குங்குமப்பூ, ரோஸ் எசென்ஸ் ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, சிறிய கப்களில் ஊற்றி, ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும். 2 மணி நேரத்தில் கெட்டியாகிவிடும். பிறகு, அதை எடுத்து `ஜில்’லென்று சாப்பிடலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism