Published:Updated:

நவராத்திரி ஸ்பெஷல் - சுவையான பாயசம்... மணமணக்கும் சாம்பார் சாதம்... சிறுதானிய ரெசிப்பிகள்!

சிறுதானிய ரெசிப்பிகள்!
பிரீமியம் ஸ்டோரி
சிறுதானிய ரெசிப்பிகள்!

வரகு அரிசியை நான்கு முறை கழுவி கல் இல்லாமல் அரித்து, வடித்து எடுத்துக்கொள்ளவும்.

நவராத்திரி ஸ்பெஷல் - சுவையான பாயசம்... மணமணக்கும் சாம்பார் சாதம்... சிறுதானிய ரெசிப்பிகள்!

வரகு அரிசியை நான்கு முறை கழுவி கல் இல்லாமல் அரித்து, வடித்து எடுத்துக்கொள்ளவும்.

Published:Updated:
சிறுதானிய ரெசிப்பிகள்!
பிரீமியம் ஸ்டோரி
சிறுதானிய ரெசிப்பிகள்!
சு.பொன்மணி ஸ்ரீராமன்
சு.பொன்மணி ஸ்ரீராமன்

நமது பாரம்பர்ய உணவு வகைகளில், ஆரோக்கியம், அறுசுவையில் சிறு தானியங்களுக்கு முதலிடம். அளவில் சிறியதாக உள்ள சாமை, வரகு, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியங்கள் அதிக ஆற்றலை தரவல்லன. புரதம், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் இவற்றில் மிகுந்து காணப்படுகின்றன. எளிதில் செரிமானமாவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது என இவற்றின் பலன்கள் இன்னும் பல. உங்கள் வீடுகளில் நவராத்திரி நைவேத்தியத்துக்கு சில சிறுதானிய ரெசிப்பிகள் இங்கே...

நவராத்திரி ஸ்பெஷல் - சுவையான பாயசம்... மணமணக்கும் சாம்பார் சாதம்... சிறுதானிய ரெசிப்பிகள்!

வரகு பாயசம்

தேவையானவை:

வரகு அரிசி : 100 கிராம்

(தேவைப்பட்டால் இரண்டு டீஸ்பூன் ஜவ்வரிசியை 30 நிமிடங்கள் ஊறவைத்துச் சேர்த்துக்கொள்ளலாம்)

வெல்லம் : 150 கிராம்
முந்திரி, திராட்சை : தேவையான அளவு
ஏலக்காய்த்தூள் : ஒரு சிட்டிகை
சுக்குப்பொடி : ஒரு சிட்டிகை
தண்ணீர் : தேவைக்கேற்ப
காய்ச்சிய பால் : 200 மில்லி
நெய் : தேவையான அளவு

செய்முறை: வரகு அரிசியை நான்கு முறை கழுவி கல் இல்லாமல் அரித்து, வடித்து எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் நெய்யைவிட்டு, அதில் வரகு அரிசியைச் சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும். விரும்பினால், ஊறவைத்த ஜவ்வரிசியை இன்னொரு பாத்திரத்தில் அரை வேக் காட்டாக வேகவைக்கவும். வறுத்த வரகு அரிசி உள்ள குக்கரில், அரை வேக்காடு வெந்த ஜவ்வரிசியைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட்டு குழைய வேக வைக்கவும். பின் வெல்லத்தைப் பொடித்து, தேவையான தண்ணீர் சேர்த்துக் கரைத்து, வடிகட்டி வரகு அரிசியுடன் சேர்க்கவும். நன்கு கிளறி விட்டு ஒரு கொதிவந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, காய்ச்சிய பாலைச் சேர்க்கவும். திராட்சை மற்றும் முந்திரியை நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்த்து, ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி சேர்த்துக் கிளறவும். இளஞ்சூடாகப் பரிமாறவும். சுவையான வரகு பாயசம் செய்யும் இதே தயாரிப்பு முறையில் சாமை, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களைப் பயன்படுத்தியும் பாயசம் செய்யலாம்.

நவராத்திரி ஸ்பெஷல் - சுவையான பாயசம்... மணமணக்கும் சாம்பார் சாதம்... சிறுதானிய ரெசிப்பிகள்!

தினை தோசை

தேவையானவை:

தினை : 200 கிராம்

முழு வெள்ளை உளுந்து : 50 கிராம்

வெந்தயம் : கால் டீஸ்பூன்

அவல் : 50 கிராம்

செய்முறை: தினையை நான்கு முறை நன்றாகக் கழுவி, சுத்தம் செய்து அத்துடன் உளுந்து, வெந்தயத்தைச் சேர்த்து நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை ஊற வைக்கவும். மாவு அரைப்பதற்கு அரை மணி நேரம் முன்னதாக, அவலை தண்ணீரில் ஊறவைக்கவும். பின்பு மிக்ஸி ஜாரில் தினை, உளுந்து, வெந்தயம், அவல் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை ஐந்து முதல் ஆறு மணி நேரம் புளிக்க விடவும். நன்கு புளித்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தோசைக்கல்லில் தோசையாக வார்த்து எடுக்கவும். சுவையான தினை தோசை தயார்.

நவராத்திரி ஸ்பெஷல் - சுவையான பாயசம்... மணமணக்கும் சாம்பார் சாதம்... சிறுதானிய ரெசிப்பிகள்!

சாமை கிச்சடி

தேவையானவை:

சாமை : 100 கிராம்

பெரிய வெங்காயம் : ஒன்று (பொடியாக

நறுக்கிக்கொள்ளவும்)

தக்காளி : ஒன்று (பொடியாக

நறுக்கிக்கொள்ளவும்)

பச்சை மிளகாய் : 3 (கீறிக்கொள்ளவும்)

கறிவேப்பிலை : சிறிதளவு

துருவிய இஞ்சி : சிறிதளவு

கேரட், பீன்ஸ்,

பட்டாணி காய்கறிக்கலவை : ஒரு கப்

சீரகம், மஞ்சள்தூள் : சிறிதளவு

கடுகு, உளுந்து,

கடலைப்பருப்பு : சிறிதளவு

நெய்/எண்ணெய் : தாளிக்க தேவையான அளவு

செய்முறை: சாமையை நான்கு முறை தண்ணீரில் அலசி, நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். அதை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் அல்லது நெய்விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்துப் பொரிந்ததும் உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, நறுக்கிய பெரிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, நறுக்கிய தக்காளி, காய்கறிக்கலவை என இவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். வதங்கியதும் சிறிது மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். இப்போது, வடிகட்டி, ஊறவைத்திருக்கும் சாமையை அதில் சேர்க்கவும். 15 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவினால், சுவையான, சூடான சாமைக் கிச்சடி அல்லது உப்புமா தயார்.

நவராத்திரி ஸ்பெஷல் - சுவையான பாயசம்... மணமணக்கும் சாம்பார் சாதம்... சிறுதானிய ரெசிப்பிகள்!

குதிரைவாலி சாம்பார் சாதம்

தேவையானவை:

குதிரைவாலி : 100 கிராம்

துவரம்பருப்பு : 50 கிராம்

பெரிய வெங்காயம் : ஒன்று (பொடியாக நறுக்கவும்)

தக்காளி : 2 (பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் : 2 (கீறிக்கொள்ளவும்)

கறிவேப்பிலை : சிறிது

மஞ்சள்தூள் : சிறிது

பெருங்காயத்தூள் : ஒரு சிட்டிகை

சாம்பார் பொடி : ஒரு டீஸ்பூன்

உப்பு, மல்லித்தழை : தேவையான அளவு

கடுகு, சீரகம் : சிறிதளவு

எண்ணெய் : தாளிக்க தேவையான அளவு

செய்முறை: குதிரைவாலியை நான்கு முறை கழுவி, துவரம்பருப்புடன் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாயை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். பின்னர் சாம்பார் பொடி, துவரம்பருப்பு மற்றும் குதிரைவாலியை அதில் சேர்த்து, 800 மில்லி தண்ணீர்விட்டு குக்கரை மூடி, இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். பின்பு ஒரு சிறிய கடாயை அடுப்பில்வைத்து அதில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, குதிரைவாலி சாம்பார் சாதத்தில் கொட்டிக் கிளறவும். பொடியாக நறுக்கிய மல்லித்தழையைத் தூவவும். மணமணக்கும் குதிரைவாலி சாம்பார் சாதம் தயார்.