Published:Updated:

ஓட்ஸ் கொய்யாப்பழ டிலைட் | பார்லி காய்கறி சூப் | வாட்டர்மெலன் சப்ஜா ஜூஸ் - வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் அதே நேரம் வயிற்றைப் பதம் பார்க்காமலும் இருக்கக்கூடிய கூல் உணவுகளை இந்த சீஸனில் அதிகம் எடுத்துக்கொள்வது அவசியம். அப்படிப்பட்ட உணவுகளை இந்த வார வீக் எண்டுக்கு முயற்சி செய்து பாருங்களேன்.

ஓட்ஸ் கொய்யாப்பழ டிலைட் | பார்லி காய்கறி சூப் | வாட்டர்மெலன் சப்ஜா ஜூஸ் - வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் அதே நேரம் வயிற்றைப் பதம் பார்க்காமலும் இருக்கக்கூடிய கூல் உணவுகளை இந்த சீஸனில் அதிகம் எடுத்துக்கொள்வது அவசியம். அப்படிப்பட்ட உணவுகளை இந்த வார வீக் எண்டுக்கு முயற்சி செய்து பாருங்களேன்.

Published:Updated:
வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

அடித்துக்கொளுத்துகிற வெயிலுக்கு மூன்று வேளைகளுக்கும் திரவ உணவாகவே சாப்பிட்டால் தேவலை என்றே இருக்கும். உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் அதே நேரம் வயிற்றைப் பதம் பார்க்காமலும் இருக்கக்கூடிய கூல் உணவுகளை இந்த சீஸனில் அதிகம் எடுத்துக்கொள்வது அவசியம். அப்படிப்பட்ட உணவுகளை இந்த வார வீக் எண்டுக்கு முயற்சி செய்து பாருங்களேன்.

தக்காளி வெங்காயம் மிக்ஸர் ஸ்நாக்ஸ்

தேவையானவை:
* வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
* தக்காளி - 2 (நறுக்கவும்)
* முளைகட்டிய வெந்தயம் - 2 டீஸ்பூன்
* மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
* உப்பு - சிறிதளவு
* மிக்ஸர் - 2 டேபிள்ஸ்பூன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தக்காளி வெங்காயம் மிக்ஸர் ஸ்நாக்ஸ்
தக்காளி வெங்காயம் மிக்ஸர் ஸ்நாக்ஸ்

செய்முறை:
ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, முளைகட்டிய வெந்தயம், உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து மேலே மிக்ஸர் தூவி சாப்பிடவும்.

சத்தான மாலை நேரச் சிற்றுண்டி இது. தேவைப்பட்டால் குழந்தைகளுக்கு மிக்ஸர் அதிகமாகச் சேர்த்துக்கொடுக்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஓட்ஸ் கொய்யாப்பழ டிலைட்

தேவையானவை:
* ஓட்ஸ் - ஒரு கப்
* தேன் - 4 டேபிள்ஸ்பூன்
* காய்ச்சிய பால் - அரை கப்
* கொய்யாப்பழம் (நறுக்கியது) - அரை கப்

ஓட்ஸ் கொய்யாப்பழ டிலைட்
ஓட்ஸ் கொய்யாப்பழ டிலைட்

செய்முறை:

ஓட்ஸை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். வெந்த பிறகு பால் சேர்த்துக் கலந்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். பின்பு ஆறவிட்டு அதில் தேன் மற்றும் கொய்யாப்பழத் துண்டுகள் சேர்த்துக் கலந்து சாப்பிடவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாட்டர்மெலன் சப்ஜா ஜூஸ்

தேவையானவை:
* வாட்டர்மெலன் (தர்பூசணி) - ஒரு கப் (விதை நீக்கி நறுக்கியது)
* சப்ஜா விதைகள் - ஒரு டீஸ்பூன்
* சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
* மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை

வாட்டர்மெலன் சப்ஜா ஜூஸ்
வாட்டர்மெலன் சப்ஜா ஜூஸ்

செய்முறை:

சப்ஜா விதைகள் முழுகும் அளவு தண்ணீர் ஊற்றி ஊறவிடவும். 10 நிமிடங்களில் உப்பி இருக்கும். மிக்ஸியில் தர்பூசணியை ஜூஸ் செய்து அதில் சப்ஜா விதைகளை ஊறவைத்த தண்ணீரோடு சேர்த்துக் கலந்து, சர்க்கரை, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

பார்லி காய்கறி சூப்

தேவையானவை:
* பார்லி - அரை கப்
* கேரட் - ஒன்று (நறுக்கவும்)
* குடமிளகாய் - பாதி (நறுக்கவும்)
* பீன்ஸ் (நறுக்கியது) - கால் கப்
* பூண்டு - 2 (நசுக்கவும்)
* கொத்தமல்லித்தழை - சிறிதளவு
* மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு

பார்லி காய்கறி சூப்
பார்லி காய்கறி சூப்

செய்முறை:

பார்லியைத் தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு நான்கு விசில் வரும் வரை வேகவைத்துக்கொள்ளவும். பின்பு வாணலியில் தண்ணீர்விட்டு கேரட், குடமிளகாய், பீன்ஸ் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். அதில் நசுக்கிய பூண்டு, கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்கவிட்டு, வேகவைத்த பார்லியைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism