Published:Updated:

ஓட்ஸ் ஸ்பைஸி பான்கேக் | ஓட்ஸ் - கேரட் ரொட்டி | ஓட்ஸ் ரிப்பன் பக்கோடா - வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

வீக் எண்ட் ரெசிப்பீஸ்

ஓட்ஸ்ன்னாலே வெறும் கஞ்சிதானா... அதுல வேற எதுவுமே நல்லாருக்காதா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. ஏன் இருக்காது..? கொஞ்சம் கற்பனையைத் தட்டிவிட்டால் ஓட்ஸில் ஓராயிரம் ரெசிப்பீஸ் செய்யலாம்... இந்த வார வீக் எண்டில் ஓட்ஸில் ஓஹோ விருந்து செய்து அசத்துங்கள்...

ஓட்ஸ் ஸ்பைஸி பான்கேக் | ஓட்ஸ் - கேரட் ரொட்டி | ஓட்ஸ் ரிப்பன் பக்கோடா - வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

ஓட்ஸ்ன்னாலே வெறும் கஞ்சிதானா... அதுல வேற எதுவுமே நல்லாருக்காதா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. ஏன் இருக்காது..? கொஞ்சம் கற்பனையைத் தட்டிவிட்டால் ஓட்ஸில் ஓராயிரம் ரெசிப்பீஸ் செய்யலாம்... இந்த வார வீக் எண்டில் ஓட்ஸில் ஓஹோ விருந்து செய்து அசத்துங்கள்...

Published:Updated:
வீக் எண்ட் ரெசிப்பீஸ்

ஓட்ஸ்ன்னாலே வெறும் கஞ்சிதானா... அதுல வேற எதுவுமே நல்லாருக்காதா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. ஏன் இருக்காது..? கொஞ்சம் கற்பனையைத் தட்டிவிட்டால் ஓட்ஸில் ஓராயிரம் ரெசிப்பீஸ் செய்யலாம்... இந்த வார வீக் எண்டில் ஓட்ஸில் ஓஹோ விருந்து செய்து அசத்துங்கள்...

ஓட்ஸ் - கேரட் ரொட்டி

தேவையானவை:
ஓட்ஸ் பவுடர் - அரை கப்
கோதுமை மாவு - ஒரு கப்
கேரட் துருவல் - கால் கப்
மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு, மல்லித்தழை, நெய் - தேவையான அளவு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓட்ஸ் - கேரட் ரொட்டி
ஓட்ஸ் - கேரட் ரொட்டி

செய்முறை:
ஓட்ஸை வெறும் வாணலியில் வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் பவுடர், கோதுமை மாவு, கேரட் துருவல், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, மல்லித்தழை சேர்த்து கையால் நன்கு கலக்கவும். தன்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து சப்பாத்தி மாவாகப் பிசையவும். மாவை சிறிய உருண்டைகளாக்கி சப்பாத்திகளாகத் தேய்க்கவும். தோசைக்கல்லை சூடாக்கி தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாகப் போட்டு நெய் விட்டு, இரு பக்கமும் நன்றாக வேகவிட்டு எடுக்கவும். சூடாகத் தயிர்ப் பச்சடி அல்லது ஊறுகாயுடன் பரிமாறவும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஓட்ஸ் - வல்லாரை பக்கோடா

தேவையானவை:
ஓட்ஸ் மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு -கால் கப்
வெங்காயம் - ஒன்று
வல்லாரைக் கீரை – 1 கட்டு
இஞ்சித்துருவல் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

ஓட்ஸ் - வல்லாரை பக்கோடா
ஓட்ஸ் - வல்லாரை பக்கோடா

செய்முறை:
வல்லாரைக் கீரையை சுத்தம்செய்து பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் மாவு, அரிசி மாவு, கடலை மாவு, வல்லாரை, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கைகளால் நன்கு கலக்கவும். பின் தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்துப் பிசறவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கலந்து வைத்துள்ள மாவை கைகளால் சிறிது சிறிதாகக் கிள்ளி எடுத்துப் போடவும். நன்றாக வெந்தவுடன் எடுக்கவும்.

குறிப்பு:
மாவில் தண்ணீர் அதிகம் சேர்த்துவிட்டால் பக்கோடா கரகரப்பாக (Crispy) இருக்காது. அதனால், தண்ணீர் பார்த்துச் சேர்க்கவும். வல்லாரை இலை சேர்த்திருப்பதால், இது குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். தேர்வு காலத்தில் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓட்ஸ் ரிப்பன் பக்கோடா

தேவையானவை:

ஓட்ஸ், கடலை மாவு, அரிசி மாவு - தலா அரை கப்
வெண்ணெய், மிளகாய்த்தூள்,
எள் - தலா ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

ஓட்ஸ் ரிப்பன் பக்கோடா
ஓட்ஸ் ரிப்பன் பக்கோடா

செய்முறை:

ஓட்ஸை வெறும் வாணலியில் மிதமான தீயில் வறுக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் பவுடர், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், எள், பெருங்காயம், வெண்ணெய், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு, சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துப் பிசையவும். முறுக்கு பிழியும் அச்சில் ரிப்பன் பக்கோடா அச்சைப் போட்டு மாவை நிரப்பவும். எண்ணெயைக் காயவிட்டு ரிப்பன்களாகப் பிழியவும். நன்றாக வேகவிட்டு எடுக்கவும். ஆறியவுடன் காற்றுப் புகாத டப்பாவில் போட்டு 7 முதல் 10 நாள்கள் வரை வைத்து சாப்பிடலாம்.

ஓட்ஸ் - புரொக்கோலி சூப்

தேவையானவை:
ஓட்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
புரொக்கோலி - 10 பூக்கள்
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 3 பல்
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு

ஓட்ஸ் - புரோக்கோலி சூப்
ஓட்ஸ் - புரோக்கோலி சூப்

செய்முறை:

ஓட்ஸை வெறும் வாணலியில் மிதமான தீயில் வறுக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். புரொக்கோலியை சிறிய பூக்களாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சிறிது உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். பிறகு, புரொக்கோலியைச் சேர்த்து வேகவிடவும். பிறகு, வடியவிட்டு எடுக்கவும். மூன்று பூக்களை எடுத்து அலங்கரிக்க வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை உருக்கி, அதில் பூண்டு, வெங்காயம், புரொக்கோலியைப் போட்டு வதக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதுடன், தண்ணீர், உப்பு, ஓட்ஸ் பவுடர் சேர்த்துக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்ததும் மிளகுத்தூள், அலங்கரிக்க வைத்துள்ள பூக்களை மேலே சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு:
தேவையென்றால், சிறிது பால் அல்லது ஃப்ரஷ் கிரீமும் சேர்த்துக்கொள்ளலாம்.

ஓட்ஸ் ஸ்பைஸி பான்கேக்

தேவையானவை:
ஓட்ஸ் பவுடர் - ஒரு கப்
தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய்
- தலா ஒன்று
மல்லித்தழை - சிறிதளவு
மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

ஓட்ஸ் ஸ்பைஸி பான்கேக்
ஓட்ஸ் ஸ்பைஸி பான்கேக்

செய்முறை:
ஓட்ஸை வெறும் வாணலியில் வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் மல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் பவுடர், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அடை மாவு பதத்துக்குக் கரைக்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி அதில் மாவை சிறிய பான்கேக்குகளாக ஊற்றவும். எண்ணெய் ஊற்றி, இரு பக்கமும் நன்றாக வேகவைத்து எடுக்கவும். விருப்பமான சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism