Published:Updated:

பிள்ளையார் பிரசாதம்!

கொழுக்கட்டை
பிரீமியம் ஸ்டோரி
கொழுக்கட்டை

சமையல்கலை நிபுணர் சுதா செல்வக்குமார்

பிள்ளையார் பிரசாதம்!

சமையல்கலை நிபுணர் சுதா செல்வக்குமார்

Published:Updated:
கொழுக்கட்டை
பிரீமியம் ஸ்டோரி
கொழுக்கட்டை

வேழ முகத்தானுக்கு மிகவும் பிடித்தமானது கொழுக்கட்டை பிரசாதம். விநாயகர் சதுர்த்தி திருநாளில், மோதகப் பிரியரான பிள்ளையாருக்கு விதவிதமாகக் கொழுக்கட்டை சமர்ப்பித்து வழிபடுவதால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். அவ்வகையில், மூவகை கொழுக்கட்டை ரெசிபிகள் உங்களுக்காக...

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி


சோள ரவை கேசரி கொழுக்கட்டை

தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், சோள ரவை - அரை கப், ஆரஞ்சு ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, நெய் - 2 டேபிள்ஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு - 5, சர்க்கரை - ஒரு கப், நல்லெண்ணெய், உப்பு - சிறிதளவு.

செய்முறை: சோள ரவையை வெறும் கடாயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். கடாயில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, கொதி வந்ததும் சோள ரவையை சேர்த்து கைவிடாமல் கிளறி, ஆரஞ்சு ஃபுட் கலர், நெய் சேர்த்து, சர்க்கரையையும் சேர்த்துக் கிளறி பூரணம் ரெடி செய்யவும். நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பை மேலே தூவவும்.

இரண்டு கப் நீருடன் நல்லெண்ணெய், உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரிசி மாவை சேர்த்து கட்டி தட்டாதவாறு, கைவிடாமல் கிளறி இறக்கவும். மாவை சொப்புகளாக செய்து, உள்ளே கேசரி பூரணத்தை வைத்து மூடி, 7 - 10 நிமிடம் ஆவியில் வேகவிடவும்.

கொழுக்கட்டை
கொழுக்கட்டை


செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டை

தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை: ஒன்றரை கப் நீரை சூடாக்கி, கொதி வந்தவுடன், எண்ணெய் விட்டு அரிசிமாவு சேர்த்துக் கிளறி வெந்ததும் விருப்பமான வடிவம் (அம்மி, குழவி, நட்சத்திரம், பிள்ளையார் போன்றவை) கொடுத்து ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: இல்லத்தில் செல்வம் நிலைத்திருக்க வேண்டி ஆடி, மாசி, தை மாதங்களில் செவ்வாய்க்கிழமை அன்று மேற்கொள்ளப்படும் பிள்ளையார் வழிபாட்டின்போது இந்தக் கொழுக்கட்டையை செய்வார்கள். இதற்கு ஒளவையார் நோன்பு கொழுக்கட்டை என்ற பெயரும் உண்டு. இந்த வழிபாட்டில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி. வீட்டு ஆண்கள்கூட கலந்துகொள்ளக்கூடாது. உப்பு போடாமல் செய்யப்பட்டு, விதவிதமான வடிவத்தில் கண்களைக் கவரும் இந்த கொழுக்கட்டைகளை தேங்காய்த் துருவலும், வெல்லத் துருவலும் தொட்டுகொண்டு சாப்பிடுவர்.

சத்துமாவு கொழுக்கட்டை
சத்துமாவு கொழுக்கட்டை
பிள்ளையார்
பிள்ளையார்
PRASANNAPiX

சத்துமாவு கொழுக்கட்டை

தேவையானவை: சத்துமாவு (ரெடிமேடாக கடைகளில் கிடைக்கும்) - ஒன்றரை கப், தேங்காய்த் துருவல் - அரை கப், ஏலக்காய்த் தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன், வெல்லத் துருவல் - ஒரு கப்.

செய்முறை: வெறும் வாணலியில் சத்து மாவை வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.வெல்லத்தூளை அடிகனமான பாத்திரத்தில் போட்டு ஒன்றரை கப் நீர் விட்டு கொதிக்கவிடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். மீண்டும் வெல்லக் கரைசலை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிட்டு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், சத்து மாவு சேர்த்துக் கிளறி, வெந்ததும் எடுக்கவும். கையில் நெய் தடவிக் கொண்டு, இந்த மாவை சிறிது எடுத்து உள்ளங்கையில் வைத்து மூடி விரல்களால் அழுத்தி கொழுக்கட்டையாக பிடிக்கவும். நெய் தடவிய இட்லித் தட்டில் கொழுக்கட்டைகளை வைத்து ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

(9.9.2014 அவள் விகடன் இணைப்பிதழிலிருந்து...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism