Published:Updated:

ஷுஃப்தா | கட்டா பைங்கன் | காஷ்மீரி சாகு - காஷ்மீர் ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

வீக் எண்ட் ரெசிப்பீஸ்

தமிழகத்தில் தொடங்கி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என எல்லா மாநில உணவுகளையும் ஓரளவு ருசித்திருப்பீர்கள். ஒரு மாறுதலுக்கு காஷ்மீர் உணவுகளை ருசிக்கத் தயாரா? இந்த வார வீக் எண்டுக்கு உங்கள் வீட்டில் காஷ்மீரி விருந்து வைத்து அசத்துங்களேன்...

ஷுஃப்தா | கட்டா பைங்கன் | காஷ்மீரி சாகு - காஷ்மீர் ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

தமிழகத்தில் தொடங்கி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என எல்லா மாநில உணவுகளையும் ஓரளவு ருசித்திருப்பீர்கள். ஒரு மாறுதலுக்கு காஷ்மீர் உணவுகளை ருசிக்கத் தயாரா? இந்த வார வீக் எண்டுக்கு உங்கள் வீட்டில் காஷ்மீரி விருந்து வைத்து அசத்துங்களேன்...

Published:Updated:
வீக் எண்ட் ரெசிப்பீஸ்

தமிழகத்தில் தொடங்கி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என எல்லா மாநில உணவுகளையும் ஓரளவு ருசித்திருப்பீர்கள். ஒரு மாறுதலுக்கு காஷ்மீர் உணவுகளை ருசிக்கத் தயாரா? இந்த வார வீக் எண்டுக்கு உங்கள் வீட்டில் காஷ்மீரி விருந்து வைத்து அசத்துங்களேன்...

ஷுஃப்தா

சர்க்கரை பாகு செய்ய:

சர்க்கரை, தண்ணீர் – தலா அரை கப்

ஷுஃப்தா செய்ய:

நெய் - 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் – 2 (தட்டவும்)
நறுக்கிய பாதாம், முந்திரி துண்டுகள் – தலா கால் கப்
பேரீச்சை – 6 (கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும்)
உலர் திராட்சை – கால் கப்
வறுத்த பனீர் துண்டுகள் – கால் கப்
பல் பல்லாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் – கால் கப்
குங்குமப்பூ – சிறிதளவு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷுஃப்தா
ஷுஃப்தா

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்க்கவும்.சர்க்கரை நன்றாகக் கரைந்து, திக்காக வரும் வரை கொதிக்க விட்டு சுகர் சிரப் தயாரிக்கவும்.

கடாயில் நெய்விட்டு ஏலக்காய், பாதாம், முந்திரி, பேரீச்சைத் துண்டுகள், திராட்சை, தேங்காய்த் துண்டுகள், பனீர் துண்டுகள் சேர்த்து வறுத்தெடுக்கவும். இதனுடன் சுகர் சிரப் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். சிறிது நேரம் ஊறவிடவும். மேலே குங்குமப்பூ சேர்த்துப் பரிமாறவும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
காஷ்மீரி சாகு

தேவையானவை:

எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
பனீர் – 100 கிராம் (சதுரத் துண்டுகளாக்கவும்)
ஏதாவது ஒரு வகை கீரை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கி, நீரில் அலசவும்)
வெந்தயக்கீரை – ஒரு கட்டு (ஆய்ந்து, நீரில் அலசவும்)
சீரகம் – ஒரு டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
கடைந்த தயிர் – அரை கப்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
சுக்குத்தூள் – ஒரு டீஸ்பூன்
சோம்புத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
காய்ச்சி ஆறவைத்த பால் – அரை கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் (பனீரைப் பொரிப்பதற்கு) – தேவையான அளவு

காஷ்மீரி சாகு
காஷ்மீரி சாகு

செய்முறை:

கடாயில் எண்ணெயைக் காயவிட்டு பனீர் துண்டுகளைச் சேர்த்துப் பொரித்தெடுத்துத் தனியாக வைக்கவும். மற்றொரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு கீரை, வெந்தயக்கீரை சேர்த்து வதக்கவும். அதனுடன் கால் கப் தண்ணீர்விட்டு வேகவிட்டு இறக்கவும். ஆறியதும் விழுதாக அரைத்தெடுக்கவும். மீதமுள்ள எண்ணெயைக் கடாயில்விட்டு சீரகம், வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அதனுடன் தயிர் சேர்த்துக் கலக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சோம்புத்தூள், சுக்குத்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு அரைத்த கீரை விழுது, பால், உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு கரம் மசாலாத்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவும். இறுதியாகப் பொரித்த பனீர் துண்டுகள் சேர்த்து கிரேவி பதத்துக்கு வரும்போது இறக்கி, சூடாக சாதம் அல்லது ரொட்டியுடன் பரிமாறவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டொமேட்டோ சமன் (டொமேட்டோ பனீர் கிரேவி)

தேவையானவை:

பனீர் – 250 கிராம் (சதுரத் துண்டுகளாக்கவும்)
எண்ணெய் (அ) கடுகு எண்ணெய் – கால் கப்
பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2
கறுப்பு ஏலக்காய் – ஒன்று
பட்டை – அரை இன்ச் துண்டு
பெரிய தக்காளி – 5 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள், சோம்புத்தூள் – தலா ஒன்றரை டீஸ்பூன்
சுக்குத்தூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

டொமேட்டோ சமன் (டொமேட்டோ பனீர் கிரேவி)
டொமேட்டோ சமன் (டொமேட்டோ பனீர் கிரேவி)

செய்முறை:

கடாயில் எண்ணெயைக் காயவிட்டு பனீர் துண்டுகளைச் சேர்த்துப் பொரித்தெடுத்துத் தனியாக வைக்கவும். அதே கடாயில் பிரியாணி இலை, ஏலக்காய், கறுப்பு ஏலக்காய், பட்டை, கிராம்பு சேர்த்து வறுக்கவும். அதனுடன் தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சுக்குத்தூள், சோம்புத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, தயிர் சேர்க்கவும். இதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்கவிடவும். பிறகு பனீர் துண்டுகள் சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

இதை சாதம், ரொட்டியுடன் சாப்பிடலாம்.

கட்டா பைங்கன்

தேவையானவை:

கத்திரிக்காய் – 7
எண்ணெய் (அ) கடுகு எண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன்
பிரியாணி இலை, கிராம்பு,
ஏலக்காய் – தலா 2
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
சோம்புத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
சுக்குத்தூள் – ஒரு டீஸ்பூன்
கெட்டியான புளிக்கரைசல் – கால் கப்
உப்பு – தேவையான அளவு

கட்டா பைங்கன்
கட்டா பைங்கன்

செய்முறை:

கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, கத்திரிக்காய்களைப் போட்டுப் பொரித்தெடுத்து, கிச்சன் டவல் பயன்படுத்தி அதிகப்படியான எண்ணெயை நீக்கி, தனியாக வைக்கவும். அதே கடாயில் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், புளிக்கரைசல், ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு சுக்குத்தூள், சோம்புத்தூள், உப்பு, பொரித்த கத்திரிக்காய் சேர்த்து எண்ணெய் பிரிந்துவரும் வரை கொதிக்க வைத்து இறக்கவும். சாதத்துடன் பரிமாறவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism