கட்டுரைகள்
Published:Updated:

மழை, குளிர்காலம்... சாப்பிட வேண்டிய காய்கறிகள், பழங்கள்!

சாப்பிட வேண்டிய காய்கறிகள், பழங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சாப்பிட வேண்டிய காய்கறிகள், பழங்கள்!

சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம், சப்போட்டா, திராட்சை போன்ற அதிக இனிப்புச் சுவையுள்ள பழங்களைத் தவிர்க்க வேண்டும்.

பொதுவாக பருவநிலை மாறும்போது நம் உணவிலும் அதற்கேற்ப சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். இந்த மழை, குளிர்காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டிய, தவிர்க்கவேண்டிய காய்கறிகள், பழங்கள் பற்றிய ஆலோசனைகளை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் சங்கீதா.

‘‘மழைக்காலம், அதைத் தொடர்ந்து வரும் குளிர்காலம் எனப் பருவநிலை தொடர் மாற்றத்துக்கு உட்படுவதால் உடல்நலம் சார்ந்த பிரச்னைகள் படையெடுக்கும் காலமிது. எனவே, அந்த நேரங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மழை, குளிர்காலம்... சாப்பிட வேண்டிய காய்கறிகள், பழங்கள்!

நீர்க்காய்களுக்கு `யெஸ்!’

இந்தக் காலங்களில் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது, சளித் தொந்தரவு ஏற்படும் என்பது தவறான எண்ணம். வெகு சிலருக்கு மட்டுமே அவற்றை அதிகம் சாப்பிட்டால் இது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய், வெள்ளரிக்காய், முள்ளங்கி போன்ற காய்கறிகள் இந்த சீசனில் அதிகமாகக் கிடைக்கும். அதேபோல பழங்களில் ஆப்பிள், பியர்ஸ், பிளம்ஸ் போன்றவையும் அதிகம் கிடைக்கும். இவற்றையெல்லாம் எடுத்துக்கொள்வது நல்லது. இவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. மேலும், உடலின் நீர்ச்சமநிலையைப் பராமரிப்பதற்கு (Fluid Balance) நீர்க்காய்கறிகள் அதிகம் பயனுள்ளவையாக இருக்கும். உடலில் ஆற்றல் குறைந்தால் அதை அதிகரிக்கவும் இந்தக் காய்கறிகள் உதவுகின்றன. இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால். ஃப்ளூ போன்ற தொற்றுகள் பாதிக்காது.

Iசங்கீதா
Iசங்கீதா

தவிர்க்க வேண்டியவை

மழைக்காலத்தில் கீரை ஃபிரெஷ்ஷாகக் கிடைக்காது. உருளைக்கிழங்கு உள்ளிட்ட கிழங்கு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். நீர்க்காய்கறிகள் சாப்பிடுவது சிலருக்கு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால்இடைவெளிவிட்டு எடுத்துக்கொள்ளலாம்.

குழந்தைகள், முதியோர்கள்

குழந்தைகள், வயதானவர்கள் சூப், வெந்நீர் அதிகம் கொடுக்கலாம். இவர்கள் இரவு நேரங்களில் பழங்கள் அதிகம் எடுத்துக்கொள்ளாமல் பகல் நேரங்களில் எடுத்துக்கொள்ளலாம். நீர்க்காய்கறிகள், சிட்ரஸ் பழங்களை அளவோடு எடுத்துக்கொள்ளலாம்.

மழை, குளிர்காலம்... சாப்பிட வேண்டிய காய்கறிகள், பழங்கள்!

ஜூஸ், மோர்

மழை, குளிர்காலங்களில் ஐஸ் சேர்த்த ஜூஸ், மோர் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பாக்கெட்டுகள், பாட்டில்களில் அடைக்கப்பட்ட ஜூஸ்களைத் தவிர்த்து, ஃபிரெஷ்ஷாகத் தயாரித்த ஜூஸைப் பருகலாம். இந்தக் காலத்தில் ஃபிரிட்ஜில் வைத்த உணவுகளைத் தவிர்க்கவும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் தொண்டைப் பகுதியில் நோய்த்தொற்றை ஏற்படுத்தவும், வயிற்றுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. ஃபிரெஷ்ஷாகச் சமைத்த உணவுகளே நல்லது.

சர்க்கரை நோயாளிகள்

சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம், சப்போட்டா, திராட்சை போன்ற அதிக இனிப்புச் சுவையுள்ள பழங்களைத் தவிர்க்க வேண்டும். பப்பாளி, ஆரஞ்சு, கொய்யா, மாதுளை போன்ற பழங்களை அளவாகச் சேர்த்துக்கொள்ளலாம். ஜூஸ் பருகும்போது இனிப்பு சேர்க்கக் கூடாது. பச்சை நிறக் காய்கறிகளை உணவில் அதிகமாகச் சேர்க்கவும். கிழங்கு வகைகளை அளவோடு சேர்த்துக்கொள்ளவும்.

கர்ப்பிணிகள்

முன்பெல்லாம், உடல் உழைப்பை அதிகமாகச் செலவழிக்கும் வேலைகள் இருந்தன. ஆனால் இப்போது அப்படியான வேலைகள் இல்லை என்பதால், கர்ப்ப காலத்தில் அதிக கலோரிகள்கொண்ட உணவை எடுத்துக்கொள்ள அவசியமில்லை. ஆரோக்கியமான சரிவிகித உணவை எடுத்துக்கொண்டால் போதுமானது.

நோட் இட்!