மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கை கொடுக்கும் கிராஃப்ட் - 8

பானை டிசைன்... பொங்கும் வருமானம்! வே.கிருஷ்ணவேணி, படங்கள்: தி.ஹரிஹரன்

கை கொடுக்கும் கிராஃப்ட் - 8

பாட் பெயின்ட்டிங், கிளாஸ் பெயின்ட்டிங், மியூரல் பெயின்ட்டிங், மெஹந்தி டிசைன்கள் என கடந்த 15 வருடங்களாக கைவினைக் கலையுடன் பயணித்து வருபவர், சென்னை, நங்கநல்லூரைச் சேர்ந்த பொன்னி. 'தர்ஷன் டெரகோட்டா ஜுவல்லரி மேக்கிங் கிளாஸ்’ எடுத்துவரும் பொன்னி, பொங்கல் இதழுக்காக மண்பானை டிசைனிங் செய்வது பற்றி கற்றுத்தருகிறார் இங்கே!

 தேவையான பொருட்கள்:

மண்பானை, எமரி ஷீட்(Emery Sheet),  அக்ரலிக் கலர்கள், டெரகோட்டா ஏர் டைட்டண்டு க்ளே, அக்ரலிக் வார்னிஷ் பிரஷ், சிறிய கத்தி, சிறிய பெயின்ட்டிங் பிரஷ்கள், டெரக்கோட்டா டூல்ஸ், ஃபெவிக்கால், நியூஸ் பேப்பர் மற்றும் பாலித்தீன் பேப்பர்கள்.

கை கொடுக்கும் கிராஃப்ட் - 8

செய்முறை:

படம்1: விருப்பத்துக்கு ஏற்ற அளவில் மண்பானை வாங்கி,  எமரி ஷீட் கொண்டு பானையை வழுவழுப்பாகத் தேய்த்துக்கொள்ளவும். கறுப்பு அக்ரலிக் கலரை பானையின் வெளிப்புறம் முழுக்க அடித்து, நிழலில் உலர வைக்கவும்.

படம் 2, 2a: க்ளேயை படத்தில் காட்டியுள்ளபடி ஒன்று பெரியது, அடுத்து வரும் ஜோடிகள் சிறியதாக கைகளால் பிடித்துக்கொள்ளவும். க்ளேயில் சிறிய உருளை வடிவம் மற்றும் சிறிய பட்டன் வடிவங்களைச் செய்யவும்.

படம் 3, 3a: தயாராக வைத்துள்ள பெரிய வடிவ க்ளேயை, படத்தில் காட்டியுள்ளபடி நீட்டி, நுனியில் வளைத்து படுக்கைவாக்கில் வைத்து, அடியில் சமன் செய்து, அந்தப் பகுதியில் ஃபெவிக்கால் தடவிக்கொள்ளவும்.

படம் 4, 4a: இதை மண்பானையின் கழுத்துப்பகுதிக்குக் கீழ், நடுமையமாக வைத்து ஒட்டவும். இதேபோல விநாயகரின் இரு காதுகள், கால்கள், கிரீடம் ஆகியவற்றை ஃபெவிக்கால் கொண்டு ஒட்டவும்.

படம் 5, 5a: டூல்ஸ் கொண்டு கால் பகுதியில் விருப்பமான டிசைன்களை வரையவும். இந்த டிசைன்களுக்கு நடுவில் ஸ்ட்ராவைக் கொண்டு வட்டவடிவ டிசைன்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

கை கொடுக்கும் கிராஃப்ட் - 8

படம் 6, 6a: மை தீர்ந்த பேனாவைக் கொண்டு ஸ்ட்ராவில் செய்த வட்டவடிவ டிசைனுக்குள் புள்ளி வைக்கவும். பேனாவின் பின்பக்கத்தைக் கொண்டு விநாயகரின் காதுப்பகுதிக்கு டிசைன் செய்யவும்.

படம் 7: டூல்ஸ் கொண்டு, விநாயகரின் கண், வாய்ப் பகுதிகளை வரைந்துகொள்ளவும். கிரீடத்துக்கும் விருப்பமான டிசைனை உருவாக்கவும்.

படம் 8:  டிசைன் செய்த பானையை ஒரு நாள் முழுவதும் உலரவிட்டு, மறுநாள் விருப்பம்போல் வண்ணம் தீட்டவும்.

படம் 9, 9a: ஸ்ட்ரா கொண்டு டிசைன் செய்த இடங்களில் கான்ட்ராஸ்ட் கலர்களை அடிக்கவும். கண் மற்றும் மூக்குப் பகுதிகளையும் அக்ரலிக் கலர் கொண்டு டிசைன் செய்து கொள்ளவும். ஒருநாள் முழுக்க நிழலில் உலர்த்தினால், அழகிய க்ளே பாட் ரெடி! பானையின் மற்ற இடங்களிலும் ஆங்காங்கே பட்டன் வடிவ க்ளேயை ஃபெவிக்கால் கொண்டு ஒட்டி, அதன் மீது ஜமிக்கி மற்றும் கட்டிங் மிரர் ஒட்டினால்... இன்னும் மெருகு கூடும்.

க்ளே பாட் விலையை 350 ரூபாயில் இருந்து 600 ரூபாய் வரை நிர்ணயிக்கலாம். ஃப்ளவர் பாட் உள்பட, பலவிதமான பொருட்களை இதேபோல டிசைன் செய்து விற்றால், மாதம் 40 ஆயிரம் வரை கூட வருமானம் பார்க்கலாம். பொங்கலோ பொங்கல்!'' என்று முடித்தார், பொன்னி!

கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...