மற்ற எபிசோடுகள்
Published:Updated:

 கேபிள் கலாட்டா!

விருது லட்சுமி!ரிமோட் ரீட்டா

காமெடி, குணச்சித்திரம்னு எல்லா கேரக்டரிலும் கலந்துகட்டி லூட்டி அடிக்கும் லட்சுமி சாரதியை, எதேச்சையா ஒரு ரெஸ்டாரன்ட்ல மீட் பண்ணேன். சும்மா இருக்குமா இந்த 'ரிமோட்டு’... உடனே வேலையை ’ஆன்’ பண்ணியாச்சு! 

'ஹாய் லட்சுமி, எப்படி இருக்கே? ரொம்ப நாள் பிரேக்குக்கு அப்புறம் தலைகாட்டிட்டு, வந்த வேகத்துல ’சன் குடும்ப அவார்டு’ அள்ளிட்டியே?'

'ஆமா ரீட்டா, சீரியலைப் பொறுத்தவரை ஒரே மாதிரியான கதாபாத்திரங்களா வந்துட்டே இருந்துச்சு. அதனால, ’ஹேவ் எ பிரேக்’னு எனக்கு நானே சொல்லிக்கிட்டதுதான் இந்த ரெண்டு வருஷ இடைவெளி.'

 கேபிள் கலாட்டா!

'ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காதுனு சொல்வாங்களே?!'

'பிரேக், சின்னத்திரைக்கு மட்டும்தான். மத்தபடி இந்த ரெண்டு வருஷத்துல அட்வர்டைஸிங் கம்பெனியில வேலை பாத்துட்டிருந்தேன். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்துச்சு. ஒவ்வொரு நாளும் இருக்கும் டார்கெட்டை முடிக்கும் சவால் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதில் நல்லா அனுபவமும் கிடைச்சது. சின்னத்திரை ஃப்ரெண்ட்ஸுங்கதான், ’திரும்பவும் சீரியல் பக்கம் வந்துடு’னு அன்புத் தொல்லை. அவங்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்றோம்னு ஃபீலாகி, ரீஎன்ட்ரி கொடுத்தாச்சு. ஆனா, இதுவரைக்கும் பண்ணாத புதுப்புது கேரக்டர்களா கிடைக்கிறதுல ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரீஎன்டரி ஆகும்போது கண்டிப்பா ’சன் குடும்ப விருது’ வாங்கணும்கிறதுல உறுதியா இருந்தேன். நினைச்சபடியே ’வம்சம்’ சீரியலுக்காக சிறந்த நகைச்சுவை கதாபாத்திரத்துக்கு விருது கிடைச்சதுல, லட்சுமி ஹேப்பி! 'ரிதம்’ படத்துல வரும் மீனாவின் கதாபாத்திரம் மாதிரி, சீரியல்ல ஒரு கதாபாத்திரம் கெடச்சா, இந்த லட்சுமி இன்னொரு விருது வாங்கிக் காட்டுவேன்.'

'அப்ப ஒரு முடிவோடதான் ரீஎன்ட்ரியா?'

”ச்சேச்சே... தொடர்ந்து இந்த ஃபீல்டுல இருக்கணும்கிற பிடிவாதமான ஆசையெல்லாம் இல்லை. ஒரு கட்டத்துக்கு மேல நல்ல பிசினஸ் எதையாவது ஆரம்பிச்சு செட்டிலாகிடணும்னு உள்ளுக்குள்ள ஓடிட்டேதான் இருக்கு!'

யூ மீன் பிசினஸ் லேடி... நீ செம கேடி!

சாய் ஆன பாய்!

ம்ம சாய்சக்தி, தொழுகை பண்றவர்னு தெரியும். ஆனா, சார் எல்லா கோயிலுக்கும் போறாரு. அடிக்கடி சாய்பாபா கோயில்ல தலை தென்படுதுனு நமக்கு ஸ்கூப் நியூஸ். சாய்பாபா கோயில்ல வெச்சே ஆளை மடக்கிட்டேன்.

''என்ன இது, கோயில் பக்கமெல்லாம் காத்தடிக்குது!''

”ரீட்டா... நான் ஒரு காமெடியன்தான். ஆனா, ஃபுல் டைம் காமெடியன் இல்ல. அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தறது ஒரு கலை. அந்த வரம் எனக்கு கெடைச்சுருக்கு. அதுக்காக கோயில் கோயிலா போய் நன்றி சொல்றதுல என்ன தப்பு இருக்கு. அழறவங்களை சிரிக்க வெக்கறது மாதிரியான ஒரு விஷயம், இந்த உலகத்துல...'

'வேணாம் சாய், நோ... நோ... முடியல. முந்திரி போட்ட பொங்கலுக்கு ஆசைப்பட்டுதான் கோயிலுக்கு வர்றியோனு தப்பா நினைச்சு கேட்டுட்டேன். அதுக்காக இவ்ளோ பெரிய லெக்சர் அடிக்க ஆரம்பிச்சா... தாங்கவே முடியாது.''

'சரி, அதை விடு ரீட்டா. என்னைப் பத்தி உள்ளுக்குள்ள உனக்கு குறுகுறுத்துக்கிட்டிருக்கிற விஷயத்துக்கு வர்றேன். என்னோட சொந்த பேரு ஹமீது. சாய்பாபா மீதான அதீத பக்தியால சாய்சக்தி ஆகிட்டேன். தர்கா, கோயில், சர்ச்னு மூணு எடத்துக்கும் போவேன். நான் எம்மதமும் சம்மதராஜா!

 கேபிள் கலாட்டா!

டி.விக்கு வந்து 17 வருஷம் ஆகுது. இதுல

 கேபிள் கலாட்டா!

நாதஸ்வரம்’ சீரியல்ல குடிகாரன் ரமேஷ் கேரக்டர் எல்லார் மனசுலயும் பதிஞ்சது... எனக்கு விருது கிடைச்சதுக்கு சமம். ஆனா, தவிர்க்க முடியாத காரணத்தால அந்த கேரக்டர்லயிருந்து விலக வேண்டியதாயிடுச்சு. பலரும் போன் பண்ணி, 'அந்த கேரக்டராவே வாழ்ந்தீங்க. வேற ஆளை அந்த இடத்துல பொருத்திப் பாக்க முடியல. தயவுசெஞ்சு நீங்களே அதுல மறுபடியும் நடிக்கணும்’னு கேட்டாங்க. ஆனாலும் முடியாதுனு சொல்லிட்டேன்.''

''அடி ஆத்தி, அப்படியென்ன கஷ்டம்?''

”அந்த சீரியலோட ஷூட்டிங் காரைக்குடி யில நடக்கிறதுதான். சென்னை டு காரைக்குடி போயிட்டு போயிட்டு வருவேன். அப்டி போகும்போது ரெண்டு தடவ ஃபயர் ஆக்ஸிடென்ட்ல பஸ் சிக்கிடுச்சு. நல்லவேளை எனக்கு ஒண்ணும் ஆகல. இருந்தாலும், எதுக்கு ரிஸ்க்னு டிராவல் பண்றதை தவிர்த்துட்டேன்.

சரி, உனக்கு புதுசா ஒரு நியூஸ் தரேன்... சம்பத்குமார் தயாரிச்சு இயக்குற

 கேபிள் கலாட்டா!

மவுனிகா’ங்கிற த்ரில்லர் படத்துல ஹீரோவா நடிச்சுட்டிருக்கேன். ஒரு காமெடி படத்துலயும் கமிட் ஆகிட்டேன்.'

ஓ... த்ரில்லர் காமெடியா?