மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 19

நள்ளிரவு வானவில் | ராஜேஷ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
நள்ளிரவு வானவில் | ராஜேஷ்குமார் ( நள்ளிரவு வானவில் | ராஜேஷ்குமார் )

க்ரைம் தொடர்

பெங்களூரு சைபர் க்ரைம் பிராஞ்ச் செல், ஏ.ஸி. காற்றில் நனைந்து, அந்த 250 சதுர அடி பரப்புள்ள இடத்தை மினி ஊட்டியாய் மாற்றியிருக்க... உஷ்ணமான உள்ளங்களோடு ராஜகணேஷ், நம்பெருமாள், ரிதன்யா, ரூபேஷ் நான்கு பேரும் அந்த வட்டமான மேஜையைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்தார்கள்.

ராஜகணேஷின் பார்வை ஆணியடித்த மாதிரி ரூபேஷ் முகத்தில் நிலைத்திருக்க, அவருடைய உதடுகள் தன்னிச்சையாய் வார்த்தைகளை உதிர்த்து, அவற்றை கேள்விகளாக மாற்றிக்கொண்டிருந்தன.

'அப்படீன்னா, உங்களுக்கு 'நள்ளிரவு வானவில்’னா என்னன்னே தெரியாதா..?'

'தெரியாது ஸார்.'

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 19

'அப்படியொரு விஷயமே உங்களுக்குத் தெரியாதபோது விசாரணைக்காக உங்ககிட்ட வந்த ரிதன்யாவை பயமுறுத்துகிற மாதிரியாகவும், மிரட்டுகிற மாதிரியாகவும் பேச வேண்டிய அவசியம் என்ன?'

'எங்களுக்கு சம்பந்தமேயில்லாத ஒரு விஷயத்தைப் பத்தி க்ரைம் பிராஞ்ச் செல்லில் இருந்து ரிதன்யா விசாரிக்க வந்தது எனக்கும் என்னுடைய அப்பாவுக்கும் பிடிக்கலை. அதுதான் ரிதன்யாகிட்டே கொஞ்சம் கடுமையா நடந்துகிட்டோம்.''

ரிதன்யா குறுக்கிட்டாள்... 'ஸார்! அன்னிக்கு ரூபேஷும் அவரோட அப்பா யோகானந்தும் என்கிட்டே ரொம்பவும் அநாகரிகமான முறையில் நடந்துகிட்டாங்க. அவங்க ரெண்டு பேரும் பேசின பேச்சையெல்லாம் என்னோட செல்போன்ல ரிக்கார்ட் பண்ணி வெச்சிருந்தேன். அந்த போன் இப்போ திவாகர்  பூங்கொடிகிட்டே இருக்கு.'

ரிதன்யாவை கையமர்த்திவிட்டு, மறுபடியும் ரூபேஷிடம் திரும்பினார் ராஜகணேஷ். 'இதோ பாருங்க ரூபேஷ்..! இந்த

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 19

நள்ளிரவு வானவில்’ மேட்டர், வெடிகுண்டை மடியில் வெச்சு கட்டியிருக்கிற மாதிரியான ஒரு விபரீதம். இந்த விபரீதத்தோட சம்பந்தப்பட்ட பத்து பேர் இப்போ உயிரோடு இல்லை. முதலாவது நபர் ஞானேஷ். டெல்லி ஃப்யூச்சர் மிராக்கிள் ஐ.டி. கம்பெனியின் ப்ராஜெக்ட் ஹெட்டான இவர்தான் அந்த நள்ளிரவு வானவில்லை உருவாக்கினார். அந்த ப்ராஜெக்ட் தொண்ணூறு சதவிகிதம் முழுமை அடைஞ்சு 'லாஞ்ச்’ செய்யப்போகும் நேரத்தில்தான், போன வருஷம் ஊட்டி ஜாலி ட்ரிப்பை முடிச்சுகிட்டு ஊர் திரும்பும்போது பர்லியாறு அருகே கொண்டை ஊசி வளைவில் வேன் கவிழ்ந்து, அதில் பயணம் பண்ணின ஆறு  இளம் பெண்கள் இறந்து போயிட்டாங்க. அந்த ஆறு பெண்களும் 'நள்ளிரவு வானவில்’ ப்ராஜெக்ட் உருவாக குரூப் ஹெட் ஞானேஷுக்கு உறுதுணையா இருந்தவங்க. இந்த விபத்து இயல்பா நடந்ததா... இல்லை, வேறு யாராவது ஒரு நபர் மூலமா உண்டாக்கப்பட்டதானு போலீஸ் விசாரணை நடந்துட்டு இருக்கிற நேரத்துலதான் ஞானேஷ் உயிரோடு எரிக்கப்பட்டு, அவரோட அஸ்தி சென்னையில் இருக்கிற மீரா வீட்டு மொட்டை மாடியில் வைக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் இந்தச் சம்பவங்கள் நடந்த மாதிரியே பெங்களூரிலும் 'நள்ளிரவு வானவில்’ விஷயத்தில் தீவிரம் காட்டிய போலீஸ்         எஸ்.பி. சந்திர கௌடா, யஷ்வந்த்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரே ஜீப்பில் வரும்போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு கொலை செய்யப்பட்டார். ரிதன்யா இங்கே உங்ககிட்டே விசாரணை நடத்தும்போதே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஃபார்மர்

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 19

இரண்டாம் நாரதர்’ என்கிற ஒரு நபரை, சென்னை ஓ.எம்.ஆர். ரோட்டில் பைக்கில் போயிட்டிருந்தபோது, கூலிப்படையைச் சேர்ந்த சிலர் அரிவாளால வெட்டி சாய்ச்சிருக்காங்க. இந்தக் கொலைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பு வைக்கிற மாதிரி இப்போ உங்க அப்பா யோகானந்த் கொலை செய்யப்பட்டிருக்கார். மொத்தம் பத்து கொலைகள். இதற்குக் காரணம் அந்த 'நள்ளிரவு வானவில்’தானே?'

ரூபேஷ் சில விநாடிகள் மௌனமாக இருந்துவிட்டு நீர் நிரம்பிய விழிகளோடு ராஜகணேஷை ஏறிட்டான்.

'ஸார்... என்னோட அப்பா கொலை செய்யப்பட்டதற்குக் காரணம் அந்த 'நள்ளிரவு வானவில்’ இல்லை!'

'அப்புறம்..?'

'எங்களுடைய தொழில் எதிரிகளில் யாராவது ஒரு நபர் காரணமா இருக்கலாம். கடந்த ரெண்டு வருஷ காலமாவே எங்களுடைய ஐ.டி. கம்பெனி வெளிநாட்டு அசைன்மென்ட்டுகளை வாங்கி, அவற்றைக் குறித்த நேரத்தில் செய்து முடித்த செயலைப் பாராட்டி 'வேர்ல்ட் சிலிகான் வேலி’ என்கிற அமைப்பு 'கிரேட் அச்சீவர்’ அவார்டைக் கொடுத்து, 500 கோடிக்கான ஆர்டர்களையும் கொடுத்து எங்களை ஹானர் பண்ணியிருந்தாங்க. இது எங்களோட காம்படீட்டர்ஸுக்குப் பிடிக்கலை. அதுல சில பேர் தங்களோட கம்பெனிகளை இழுத்து மூடிட்டு வேற தொழில்களுக்குப் போயிட்டாங்க. அவங்கள்ல யாராவது ஒரு நபர்கூட அப்பாவோட மரணத்துக்குக் காரணமா இருக்கலாம்..!'

'ஸோ... உங்களுக்கும் உங்களுடைய அப்பாவுக்கும் இந்த

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 19

நள்ளிரவு வானவில்’ விவகாரம் தெரியவே தெரியாது..?'

'தெரியாது ஸார்...'

அதுவரைக்கும் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்த டி.எஸ்.பி. நம்பெருமாள் இப்போது மெதுவாக வாயைத் திறந்தார்

'ஸார்! நான் கொஞ்சம் பேசலாமா..?'

'ப்ளீஸ்..!'

'ரூபேஷ் மே பி கரெக்ட் ஸார்..! ஆறு மாதத்துக்கு முன்பு மிஸ்டர் யோகானந்த் ஒரு புகார் கடிதத்தோடு என்னை வந்து பார்த்தார். தன்னோட உயிருக்கும், தன் மகன் ரூபேஷ் உயிருக்கும் தொழில்ரீதியான எதிரிகளால் பெரிய அளவில் அச்சுறுத்தல் இருப்பதாகவும், தங்களுக்குப் பாதுகாப்பு வேணும்னும் கேட்டார்.

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 19

உங்களுடைய தொழில் எதிரிகள் யார்?’்னு கேட்டேன். அதுக்கு அவர்,

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 19

அதை வெளிப்படையா சொல்ல முடியாது. ஏன்னா, இப்போ என்கூட பேசறவங்க பழகறவங்க எல்லோருமே ஒரு சமயம் பார்த்தா ஃப்ரெண்ட்ஸ் மாதிரி தெரியறாங்க. இன்னொரு சமயம் பார்த்தா ரைவல்ஸ் மாதிரி தெரியறாங்க. யார் கையில் பழம் இருக்கு, யார் கையில் கத்தி இருக்குனு தெரியலை. அதுவும் சில நாட்கள்ல தெரிஞ்சுடும். அந்த சமயத்துல வந்து 'லிஸ்ட்’ தர்றேன்’னு சொல்லிட்டுப் போயிட்டார்.'

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 19

ராஜகணேஷ், நம் பெருமாளை தன்னுடைய வியப்பான பார்வையால் நனைத்தார்.

'யோகானந்த் அப்படி ஒரு புகார் கடிதத்தை உங்ககிட்ட கொடுத்ததும், நீங்க என்ன ஸ்டெப்ஸ் எடுத்தீங்க மிஸ்டர் நம்பெருமாள்?'

'அந்தக் கடிதத்தை எஸ்.பி. சந்திர கௌடாவுக்கு அனுப்பி வெச்சேன் ஸார். ஆனா, அவர் அந்த லெட்டரை இக்னோர் பண்ணிட்டார்'

'ஏன்..?'

'அவருக்கு எப்பவுமே இந்த ஐ.டி. பீப்பிள் மேல தேவையில்லாத ஒரு வெறுப்பு இருந்து வந்தது ஸார்.

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 19

பெயரளவுக்கு ஒரு ஐ.டி. கம்பெனியை நடத்திக்கிட்டு திரைமறைவுக் குப் பின்னாடி ஃபிராடுதனம் பண்ணி கோடிக்கோடியா பணம் சம்பாதிக்கறாங்க’னு சொல்லுவார்.

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 19

இது மாதிரியான புகார் கடிதம் வந்தா, அதை ஒரு பெரிய விஷயமா எடுத்துக்காதீங்க. அவங்களுக்கு முன்னாடி

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 19

சரிசரி’்னு தலையை ஆட்டிட்டு, அவங்க போனதும் புகார் கடிதத்தைக் கிழிச்சு குப்பை கூடையில் போட்டுடுங்க’னு சொல்லுவார்.'

ரூபேஷ் இப்போது குறுக்கிட்டான்... 'ஸார்! சில ஐ.டி. கம்பெனிகள் அரசு விதிமுறைகளை மீறி முறைகேடா செயல்பட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பது உண்மைதான். சந்திர கௌடா நேர்மையான போலீஸ் ஆபீஸர். அவரால அந்த முறைகேடுகளைப் பொறுத்துக்க முடியலை. டிபார்ட்மென்ட் ரீதியா சில நடவடிக்கைகளை எடுத்தார். ஐ.டி. கம்பெனிகளின் நடவடிக்கைகளைத் தீவிரமா கண்காணிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிச்சார். இதெல்லாம் ஏதோ ஒரு ஐ.டி. கம்பெனிக்கு பிடிக்கலை. கூலிப்படையை வெச்சு பெட்ரோல் குண்டை வீசி அவரைத் தீர்த்துக்கட்டிட்டாங்க.'

ராஜகணேஷ் கேட்டார்...

'அது எந்த கம்பெனின்னு உங்களால சொல்ல முடியுமா..?'

'அதெப்படி ஸார் சொல்ல முடியும்... பெங்களூர்ல நூற்றுக்கணக்கான ஐ.டி. கம்பெனிகள் இருக்கு. அதுல பாதி கம்பெனிகள் அரசியல் பிரமுகர்களுக்குச் சொந்தமானது''  ரூபேஷ் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மேஜையின் மேல் இருந்த இன்டர்காம் முணுமுணுத்தது.

ராஜகணேஷ், ரிதன்யாவைப் பார்க்க... அவள் ரிஸீவரை எடுத்து இடது காதுக்கு ஒற்றினாள்.

'யெஸ்...'

ரிசப்ஷன் செல்லில் இருந்து ஒரு கான்ஸ்டபிள் பேசினார்... 'மேடம்! ஃபாரன்ஸிக் டிபார்ட்மென்ட்டிலிருந்து மிஸ்டர் சார்லஸ் வந்திருக்கார். உடனடியா டி.எஸ்.பியைப் பார்க்கணும்னு சொல்றார். அனுப்பலாமா மேடம்?'

'விஷயம் என்னன்னு கேட்டீங்களா?'

'கேட்டேன் மேடம்..! ஐ.டி. கம்பெனி யோகானந்தின் மர்டர் சம்பந்தமா பேசணும்னு சொன்னார்.'

'அவரை உள்ளே அனுப்புங்க!'  ரிதன்யா ரிஸீவரை அதனிடத்தில் அமர்த்திவிட்டு விஷயத்தை ராஜகணேஷிடமும், நம்பெருமாளிடமும் சொல்ல, அவர்கள் ஆர்வமாகக் காத்திருக்க ஆரம்பித்தார்கள். அடுத்த நிமிடத்தின் ஆரம்பத்தில் அந்த நடுத்தர வயது சார்லஸ் வொயிட் யூனிஃபார்மில் அபார உயரத்தோடு உள்ளே வந்தார். கையில் ஒரு பிரவுன் கவர். 'சுள்’ என்று ஒரு சல்யூட் அடித்துவிட்டு, ஐந்து விநாடிகள் நேர்க்கோடு போல் நின்றுவிட்டுத் தளர்ந்தார்.

ராஜகணேஷ் தனக்குப் பக்கத்தில் இருந்த காலி இருக்கையைக் காட்ட, சார்லஸ் உட்கார்ந்தார். நம்பெருமாள் கேட்டார்...

'சொல்லுங்க... எனிதிங் இம்பார்ட்டன்ட்?'

யெஸ் ஸார்..! யோகானந்தின் உள் உறுப்புகளை ஆய்வு செய்து பார்த்ததில் ஒரு உண்மை வெளிப்பட்டிருக்கு. அதைப் பத்தி கொஞ்சம் பேசணும் ஸார்!'

'என்ன உண்மை?'

'அவர் விஷம் கொடுத்து கொல்லப் பட்டிருக்கார்். அவர் சாப்பிட்ட விஸ்கியில் அந்த விஷம் கலந்திருந்தது.'

ரூபேஷ் அதிர்ந்து போனவனாய் சார்லஸை ஏறிட்டான். '

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 19

என்ன ஸார் சொல்றீங்க... அப்பா அந்த ஹோட்டலின் ரூஃப் கார்டன் பாரில் தனியா உட்கார்ந்துதானே லிக்கர் கன்ஸ்யூம் பண்ணிட்டிருந்தார்..?'

'’பாரில் இருந்த ஒரு பேரர்தான் விஸ்கியில் விஷத்தைக் கலந்திருக்கான்.'

'’எப்படி அவ்வளவு கன்ஃபர்மா சொல்றீங்க?'

'யோகானந்தின் மரணத்துக்கு மதுவில் கலந்திருந்த விஷம்தான் காரணம்னு தெரிஞ்சதுமே நான் இந்த விஷயத்தை யாருக்கும் தெரியப்படுத்தாம, அந்த ஹோட்டலுக்குப் போனேன். பாரில் இருந்த எந்த பேரர் அவருக்கு விஸ்கியை சர்வ் செய்தான்னு விசாரிச்சேன். சிட்டிபாபுனு சொன்னாங்க.'

'அந்த சிட்டிபாபுவை விசாரணை பண்ணீங்களா?'

'ஆள் இருந்தாத்தானே விசாரணை பண்ண முடியும்?'

'என்ன சொல்றீங்க சார்லஸ்..?'

'ஆள் தலைமறைவாயிட்டான். நான் அந்த ஹோட்டல் மானேஜர்கிட்டே என்கொயரி பண்ணிட்டு இருக்கும்போது அந்த சிட்டிபாபு அவனோட ரெஸ்ட் ரூம்ல இருந்திருக்கான். அவனைத் தேடிப் போகும்போது ஹோட்டலின் பின்பக்க வாசல் வழியா வெளியேறிப் போயிருக்கான்.'

ராஜகணேஷ் குறுக்கிட்டார்...

'ஒரு விஷயம் இடிக்குதே சார்லஸ்...'

'என்ன ஸார்?'

'சிட்டிபாபு, யோகானந்தத்துக்கு விஷம் கலந்த விஸ்கியை கலந்து கொடுத்திருக்கலாம்னு சொன்னீங்க... பாடியை போஸ்ட் மார்ட்டம் பண்ணும்போது யோகானந்த் இறந்தது விஷத்தின் காரணமாதான்னு போலீஸ் கண்டுபிடிச்சுடுவாங்கன்னு அவனுக்குத் தெரியாதா என்ன?'

'’ஸாரி ஸார்! அந்த பேரர் நினைச்சது ஒண்ணு... நடந்தது ஒண்ணு! அவன் விஸ்கியில் கலந்த அந்த விஷம் ஒருத்தருக்கு மாரடைப்பை உண்டாக்கி மரணத்தை ஏற்படுத்துமே தவிர, தான் யார்ங்கிறதை காட்டிக்காத விஷம். அந்தப் பேரருக்குப் பின்னாடி இருக்கிற கொலையாளி ரொம்பவும் புத்திசாலி. விஷங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கரைச்சு குடிச்சவனா இருக்கணும். இல்லேன்னா இப்படியொரு அரிதான விஷத்தை அவன் செலக்ட் பண்ணியிருக்க முடியாது!''

'அரிதான விஷமா...?'

'ஆமா ஸார்..! யோகானந்தை கொலை செய்ய உபயோகப்படுத்திய அந்த விஷத்தைப் பத்தி இந்த டாக்ஸிகாலாஜி (ஜிஷீஜ்வீநீஷீறீஷீரீஹ்) புக்குல என்ன போட்டிருக்குன்னு பாருங்க ஸார்'  சொன்ன சார்லஸ், தன் கையில் வைத்திருந்த ஒரு புத்தகத்தைப் பிரித்து சில பக்கங்களைப் புரட்டி ஒரு பக்கம் வந்ததும் நிறுத்தி ஃப்ளோரஸன்ட் பேனாவால் 'மார்க்’ செய்யப்பட்டிருந்த அந்த ஆங்கில வரிகளைக் காட்டினான். ராஜகணேஷ், நம்பெருமாள் இருவரும் தங்களுடைய பார்வைகளை அங்கே கொண்டுபோனார்கள்.

ராஜகணேஷ் வியப்பும் அதிர்ச்சியுமாக சார்லஸை ஏறிட்டார். '’சார்லஸ்...! இப்படியொரு விஷம் இருப்பது உண்மையா..?'

'உண்மை ஸார்... இப்படியொரு விஷம் இருப்பது சமீபகாலமாதான் ஃபாரன்ஸிக் ஆய்வுகளுக்கே தட்டுப்பட்டிருக்கு. எந்த ஒரு விஷத்துக்குமே வாசனையும், சுவையும், நிறமும் இருக்கும். ஆனா, இந்த விஷத்துக்கு மட்டும் நிறம், சுவை, வாசனை எதுவுமே இருக்காது. ஒரு நபரோட உயிரை எடுத்த பின்னாடி ஹார்ட் அட்டாக் வந்ததுக்கான அடையாளத்தை மட்டும் காட்டிட்டு எந்த ஒரு ஆய்வுக்கும் சிக்காம திருட்டுத்தனமா உடலின் உள் உறுப்புகளுக்குள் போய் ஒளிந்துகொள்ளும். இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டில் ஜெயிக்க சில சமயங்களில் எங்களுக்குப் பல மணி நேரம் தேவைப்படும். ஆனா, யோகானந்த் விஷயத்தில் ஒரு மணி நேரத்தில் கண்டுபிடிச்சுட்டோம். சிட்டிபாபுவையும், அவனுக்குப் பின்னாடி இருக்கிற உண்மையான கொலையாளியையும் பிடிக்க வேண்டியது இனி உங்களோட வேலை ஸார். திஸ் ஈஸ் த ரிப்போர்ட் ஸார்!'

சொன்ன சார்லஸ் தன் கையில் வைத்து இருந்த பிரவுன் கவரை நம்பெருமாளிடம் நீட்ட, அவர் இருண்டு போன முகத்தோடு, கைநடுக்கத்தோடு பெற்றுக்கொண்டார்.

தொடரும்...

ராஜேஷ்குமார்  ஓவியங்கள்: அரஸ்