மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள்

அக்டோபர் 21-ம் தேதி முதல் நவம்பர் 3-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

திட்டம் நிறைவேறும்!

ராசி பலன்கள்

மேஷம்: சுயகௌரவத்துக்கு முக்கியத்துவம் தருபவர்களே! ராசிநாதன் செவ்வாய் 5-ல் தொடர்வதால், அவ்வப்போது சோர்வடைவீர்கள். வாழ்க்கைத் துணைவருடன் ஆரோக்கியமான விவாதம் வரும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், மறைமுக விமர்சனங்கள் வந்து நீங்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். குரு பகவான் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் புதுத்தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் அறிவுத் திறமை வெளிப்படும்.

மதிப்பு, மரியாதை கூடும் வேளையிது.

முயற்சி சாதிக்கவைக்கும்!

ராசி பலன்கள்

ரிஷபம்: இலக்கை எட்டும் வரை சளைக்காமல் உழைப்பவர்களே! அக்டோபர் 27-ம் தேதி முதல் புதன் 6-ம் வீட்டில் மறைவதால்... வீண் செலவுகள் வந்து போகும். ராசிநாதன் சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், புது வாகனம் வாங்குவீர்கள். கேது லாப வீட்டில் நிற்பதால், பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். உறவினர்கள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். வியாபாரத்தில் தரமான சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மன உளைச்சலை ஏற்படுத்துவார்கள்.

தொடர் முயற்சியால் சாதிக்கும் தருணமிது.

மனோபலம் அதிகரிக்கும்!

ராசி பலன்கள்

மிதுனம்: எந்த நிகழ்வையும் பக்குவமாக எதிர்கொள்பவர்களே! செவ்வாய் 3-ம் வீட்டில் அமர்ந் திருப்பதால், மனோபலம் அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சூரியன் 5-ல் அமர்ந்திருப்பதால், பிள்ளைகளால் பிரச்னைகள், அலைச்சல் ஏற்படலாம். ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் உங்களுக்கு உதவிகள் உண்டு.

சூட்சுமங்களை அறிந்துகொள்ள வேண்டிய நேரமிது.

பேச்சில் கவனம் தேவை!

ராசி பலன்கள்

கடகம்: நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர்களே! 2-ல் நிற்கும் செவ்வாய் சேமிப்புகளைக் கரைப்பார். உணர்ச்சிவசப்பட்டு பேசுவதைத் தவிர்க்கப் பாருங்கள். குருபகவான் வலுவாக இருப்பதால், உங்களின் புது  முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சூரியன் 4-ல் தொடர்வதால், பணப்புழக்கம் கணிச மாக அதிகரிக்கும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தன்னடக்கத்தால் தடைகளைத் தாண்டும் வேளையிது. 

டென்ஷன் விலகும்!

ராசி பலன்கள்

சிம்மம்: முன் வைத்த காலை பின் வைக்காதவர்களே! செவ்வாய் ராசிக்குள் அமர்ந்திருப்பதால், இதுவரை இருந்த இழப்பு, ஏமாற்றம், டென்ஷன் விலகும். ராசிநாதன் சூரியன் 3-ல் நிற்பதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். வியாபாரத்தில் வரவு சுமார்தான். ஒப்பந்தங்கள் தாமதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் கனிவாகப் பழகுங்கள்.

எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறும் காலமிது.

வசதிகள் பெருகும்!

ராசி பலன்கள்

கன்னி: விதிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு வாழ்பவர்களே! சுக்கிரனும், ராசிநாதன் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் விரைந்து முடியும். ஆடை, ஆபரணம் சேரும். செவ்வாய் 12-ல் மறைந்திருப்பதால், வீண் விரயம் ஏற்படலாம். சூரியன் 2-ல் தொடர்வதால், யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

அடிப்படை வசதிகள் பெருகும் நேரமிது.

பிரச்னைகள் விடைபெறும்!

ராசி பலன்கள்

துலாம்: சுண்டி இழுக்கும் பேச்சுக்கு சொந்தக்காரர்களே! செவ்வாய் லாப வீட்டில் செல்வதால், நீங்கள் பிரச்னை களை சமாளித்து வெற்றி காண்பீர்கள். புது இடம் வாங்குவீர்கள். உங்களை ஏமாற்றிக்கொண்டிருந்தவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். ராசிநாதன் சுக்கிரனும் லாப வீட்டில் நிற்பதால், நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் முக்கியமான கோப்பு களைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.

சவால்களை சமாளிக்க வேண்டிய தருணமிது.

அதிரடி முன்னேற்றம்!

ராசி பலன்கள்

விருச்சிகம்: யாருக்கும் துரோகம் செய்யாதவர்களே! ராசிநாதன் செவ்வாய் 10-ல் அமர்ந்திருப்பதால்... பயம், கவலை விலகும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், புது டிசைனில் நகை வாங்குவீர்கள். கேது 5-ல் தொடர் வதால், சின்னச் சின்ன ஏமாற்றங்கள் வந்து நீங்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். சூரியன் 12-ல் மறைந்திருப்பதால், வீண் அலைச்சல் ஏற்படலாம். வியாபாரத்தில் உங்கள் நிறுவனத்தின் புகழ் அதிகரிக்கும். உத்யோகத்தில் மரியாதை கூடும்.

அதிரடி வளர்ச்சி காணும் காலமிது.

நட்பால் ஆதாயம்!

ராசி பலன்கள்

தனுசு: மற்ற வர்களை எடை போடுவதில் வல்ல வர்களே! ராசிநாதன் குருபகவான் 9-ம் வீட்டில் நிற்பதால், வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். செவ்வாய் 9-ம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். சூரியனும், அக்டோபர் 27-ம் தேதி முதல் புதனும் லாப வீட்டில் நிற்பதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும்.

புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரமிது.

முன்கோபம் தவிருங்கள்!

ராசி பலன்கள்

மகரம்: போராட்டங்களை சளைக்காமல் எதிர்கொள்பவர்களே! சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால், தொட்ட காரியம் துலங்கும். அரசால் ஆதாயம் உண்டு. செவ்வாய் 8-ல் தொடர்வதால், சொத்து விஷயத்தில் கவனமாக இருங்கள். உடன்பிறந்தவர்களிடையே சச்சரவு வந்து நீங்கும். குருபகவான் 8-ல் மறைந்திருப்பதால்... வீண் செலவுகள், மறைமுக அவமானம் ஏற்படும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் உங்களுக்கு வேலைச்சுமை இருக்கும். அதிகாரிகளின் அறிமுகம் கிட்டும்.

முன்கோபத்தை தவிர்ப்பதால் முன்னேறும் வேளையிது.

கனிவான மணவாழ்க்கை!

ராசி பலன்கள்

கும்பம்: படைப்பாற்றல் மிக்க வர்களே! சுக்கிரன் 7-ல் நிற்பதால், வாழ்க்கைத் துணைவர் கனிவாக பேசுவார். குருபகவான் 7-ல் நிற்பதால்,  உறவினர்கள் உங்கள் நல்ல மனதைப் புரிந்துகொள்வார்கள். 9-ம் வீட்டில் சூரியன் இருப்பதால், யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண் டாம். அக்டோபர் 27-ம் தேதி முதல் புதன் சாதகமாக இருப்பதால், சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். வியா பாரத்தில் வேலையாட்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்யோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றம் ஏற்படலாம்..

உங்கள் பலவீனத்தை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணமிது.

எதிர்ப்புகள் அடங்கும்!

ராசி பலன்கள்

மீனம்: ஆன்மிக  சக்தி உள்ளவர்களே! செவ்வாய் சாதகமாக இருப்பதால், எதிர்ப்புகள் அடங்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால்... மன இறுக்கம், உடல் வலி வந்து நீங்கும். குரு 6-ல் மறைந்திருப்பதால்... மறைமுக எதிர்ப்பு, உறவினர் அதிருப்தியை சந்திக்க நேரிடலாம். வியாபாரத்தில் ரகசியங்கள் எங்கே கசிகிறது என்று கண்டுபிடித்து சரிசெய்வீர்கள். உத்யோகத்தில் வேலை அதிகமாக இருந்தாலும், அதிகாரிகளின் ஆதரவால் ஆறுதலடைவீர்கள்.

அருகிலிருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய காலமிது.